சமாதி புத்தர்சிலை
- அனுராதபுர அபயகிரி விகாரை வளவில் மஹாமேவுனா பூங்காவில் (களச்சோடியின் அருகே ) அமைந்துள்ள சமாதி புத்தர் சிலை.
- புத்தர் சிலையின் ஆன்மீகத் தன்மை, சமாதிப்பண்பு போன்றவற்றை நன்கு காட்டும் சிலையாகும். இலங்கையில் உள்ள தனிச் சிறப்பான ஒரு புத்தர் சிலையாகும்.
- பெரிய காது, பாதி மூடிய கண்கள், முகத்தின் சாந்தம், ‘பெருங்கருணை’ போன்ற சிறப்பியல்புகளை வெளிக்காட்டுவதில் கலைஞர் வெற்றி கண்டுள்ளார்.
- கி.பி. 4ம், 5ம் நூற்றாண்டில் மன்னன் மகாசேனனின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.
- செதுக்கல் முறையில் வடிக்கப்பட்டுள்ள இப்புத்தர்சிலை முழுப்புடைப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது.
- உடலின் ஒரு பக்கத்தை மட்டும் மறைத்திருக்கும் காவியுடை மடிப்புக்கள் இல்லாத துடன் உடலுடன் ஒட்டிய தன்மையையும் காட்டுகின்றது.
- உயரிய பாவ வெளிப்பாடும் முழுநிறைவும் இதன் தரத்தை மேம்படுத்தி நிற்கின்றன.
- புத்தரது கேசம் நத்தைச்சுருள் அமைப்பும், உச்சியில் குடுமியும் காணப்படும்.
- சமாதி நிலையில், தியான முத்திரையில் வீராசன முறையில் அமர்ந்திருக்கும் வகையில் இக்கற்சிலை வடிக்கப்பட்டுள்ளது.
- இந்திய குப்தர் காலக் கலைப் பண்புகளின் செல்வாக்கு இதற்குக் கிடைத்துள்ளதாகக் கருதப்படுகின்றது.
பயிற்சி வினாக்கள்
1. இனங்காண்க : ………………………………..
2. காலம்/யுகம் : ………………………………….
3. கலை மரபு : ………………………………………
4. ஊடகம் : …………………………………………….
5. நுட்பமுறை : ……………………………………
6. முத்திரை : ………………………………………..
7. ஆசன முறை : ………………………………..
8. தலையணி : ……………………………………..
9. காவியுடை : ……………………………………..
10. உணர்வு வெளிப்பாடு : ………………