கொஹொம்ப கங்காரிய சாந்திக் கிரியை

வரலாறு
  • மலைநாட்டு நடன பாரம்பரியத்துடன் தொடர்புடைய சாந்திக் கிரியை ஒன்றாகும்.
  • கொஹொம்ப கங்காரிய எனும் சாந்திக் கிரியை முதன் முதலில் வேப்பந் தெய்வத்தை ஆதாரமாகக் கொண்டு அநுராதபுரம் மகாமெவுனா பூங்காவில் நடத்தியதாக “ராஜாவலிய” வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நோய்ப் பீதியை அகற்றுதல், சௌபாக்கியம், செழிப்புப் பெறுதல் எனும் நோக்குகளுடன் இச்சாந்திக் கிரியை நடத்தப்படுகிறது.
  • முக்கியமான அலங்கரிப்பு அங்கங்கள் “மடுசெரசிலி” எனப்படும் கொட்டகை அலங்கரிப்பு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. கொட்டகைக்குள் “அயிலய”வும் “யஹன”வும் அமைக்கபபடும்.
உபயோகிக்கும் மூலப்பொருட்கள் / ஊடகம்
  • அலங்காரங்கள் இயற்கைப் பொருட்களைக் கொண்டே செய்யப்படுகின்றன.
  • குருத்தோலைகள், சேம்பு இலை, வாழைத்தண்டு ஆகியன உபயோகித்து செதுக்கல்கள் நிர்மாணிக்கப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன.
  • குருத்தோலை உபயோகித்துச் செய்யப்படும் பின்னல் வேலைப்பாடுகள் “யஹன” எனப்படும்
  • ஆசனத்தின் மேற்பகுதிக்கும் சுற்றுப்புறத்தை மறைக்கவும் பயன்படுகின்றன.
  • குருத்தோலை, தென்னம்பூ, கமுகம்பூ, வெற்றிலை, நாக இலை ஆகியன உபயோகித்து உட் கூரை அலங்கரிக்கப்படுகின்றது.
  • கொட்டகை அலங்கரிக்கும்போது தென்னங்குலை, செவ்விளநீர்க் குலை, வெற்றிலை, ஈச்சங்குலை, வாழைக்குலை, அன்னாசி ஆகியன உபயோகிக்கப்படும்.

பயிற்சி வினாக்கள்

1. பண்டைய காலத்தில் சாந்தி கிரியைகள் நடாத்தப்பட்டமைக்கான காரணங்களை எழுதுக?
2. சிங்கள மக்களிடையே காணப்படும் சாந்திக்கிரியை முறைகளைக் குறிப்பிட்டு எழுதுக.
3. மலைநாட்டுப் பிரதேசத்தின் பிரதான சாந்தி கிரிகையை எழுதுக.
4. கொஹொம்ப கங்காரிய சாந்தி கிரியை எத்தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டது?
5. கொஹொம்ப கங்காரிய சாந்தி கிரியை எங்கு ஆரம்பமானது?
6. கொஹொம்ப கங்காரிய சாந்தி கிரிகையின் முக்கிய அலங்கரிப்பு அம்சங்களை எழுதுக.
7. கொஹொம்ப கங்காரிய சாந்தி கிரிகை கொட்டகையை அலங்கரிப்பு செய்யப் பயன்படும் மூலப்பொருட்களை எழுதுக.
8. கொஹொம்ப கங்காரிய சாந்தி கிரிகை பற்றி குறிப்பிடும் நூலின் பெயரினை எழுதுக.
9. மடு செரலிய எனப்படும் அலங்காரக் கொட்டகைக்குள் அமைக்கப்பட்டிருக்கும் விடையங்களினை எழுதுக.

error: Content is protected !!