மேம்படுத்தலில் உள்ளது!!!

குளங்கள்

இலங்கையில் இரண்டு குள வகைகளைக் காண முடிகின்றது. பிக்குகளுக்காக விகாரைகளில் அமைக்கப்பட்ட குளங்களும் அரச பூங்காக்களில் அமைக்கப்பட்ட குளங்களுமே அவையாகும். பிக்குகளுக்காக ஆச்சிரமங்களில் பிரதானமான ஓர் அங்கமாக அமைக்கப்பட்ட குளங்கள் பிக்குகளின் உடலாரோக்கியம் கருதி அமைக்கப்பட்டவையாகும். பிக்குகளுக்காக அமைக்கப்பட்ட குளங்கள் மூன்று வகைப்பட்டவை. அவை தடாகங்கள், நீர்நிலைகள், இயற்கையான கல் அமைப்புக்கள் ஆகியனவாகும். தடாகம் போன்ற குளங்களுக்கான உதாரணங்களாக கூட்டம் பொக்குண (சோடிக்குளம்), அத் பொக்குண (யானைக்குளம்), ருவன்வெலியின் யத்துறு பொக்குண (சாவிக்குளம்) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இக்குளங்களில் நீர்நிரப்புவதற்காக நிலக்கீழ்க் கால்வாய்கள், குழாய்வழிகள் ஊடாக நீர் வரும் பகுதி, சேறு தேங்குவதற்கான அறை போன்ற அம்சங்களும் அடங்கியுள்ளன.

களுதியக் குளம் சித்துள்பவ்வை குளம்

தந்திரமலைக் குளம் நீர்நிலை போன்ற குளங்களுக்கு உதாரணங்களாக சித்துள்பவ்வை, களுதியப் பொக்குண, தந்திரிமலைக்குளம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

யத்துருக் குளம்

அத் குளம் (யானைக்குளம்)

ருவன்வெலிய குளம்

மேலும் கற்பாறைகளையண்டியமைந்த ஆச்சிரமங்களில் கல்லாலான குளங்கள் அமைக்கப் பட்டுள்ளமையைக்காண முடிகின்றது. தம்பதெனியா, மிகிந்தலையின் நாகப்பொக்குண (நாக குளம்) போன்றவற்றை இதற்கான உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

தம்பதெனிய குளம்

மிஹிந்தலை நாக குளம்

அரச குடும்பத்தினருக்காக அமைக்கப்பட்ட குளங்களும் இரண்டு வகைப்படும். மாளிகைக்கு அருகே அழகுக்காக அமைக்கப்பட்ட குளம், ஓய்வு, களிப்புறுதல் ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்ட குளம் ஆகியனவே அவையாகும். அழகு கருதி அமைக்கப்பட்ட குளங்களுள் பிரபல்யமான குளம். அனுராதபுரக் காலத்திற்குரிய சிகிரியாவில் அமைந்துள்ள நீர்ப்பூங்காக் குளம் ஆகும். அத்தோடு பொலனறுவைக் காலத்தைச் சேர்ந்த நெலும் பொக்குணவையும் (தாமரைக் குளத்தையும்) இவ்வகையில் அடக்கலாம். களிப்புறுவதற்காக அமைக்கப்பட்ட குளங்கள் பெரும்பாலும் செழிப்பை அடிப்படையாகக் கொண்ட யாகக் கிரியைகளைச் செய்யப் பயன்படுத்தப்பட்டவையாக இருக்க இடமுண்டு எனக் கருதப்படுகின்றது. இவ்வாறான குளங்களாக, றன்மசு உயன குளம், சிகிரியா பூங்காக்குளம், பொலனறுவைக்கால குமாரக் குளம், கலபத்தைக் குளம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

ரன்மசு பூங்காக் குளம்

களபத்தைக் குளம்

சிகிரிய பூங்கா குளம்

கூட்டம் பொக்குண (இரட்டைக் குளம்)

‘கூட்டம் பொக்குண’ பண்டைய இலங்கையரின் தனிச்சிறப்பான ஓர் ஆக்கமாகும். இரண்டு குளங்களை அதாவது தடாகங்களைக் கொண்ட இதன் பெரிய குளம் 132 அடி நீளமும் 51 அடி அகலமும் கொண்டது. சிறிய குளம் 91 அடி நீளமானது. இரண்டு குளங்களும் நிலமட்டத்திலிருந்து 8 அடி 9 அங்குல உயரத்தில் அமைந்த கல்லினாலான கால்வாயினால் தொடுக்கப்பட்டுள்ளது. சிறிய குளம் ஆழம் கூடியது. அதிலிருந்தே பெரிய குளத்துக்கு நீர் வழங்கப்படும். சிறிய குளத்தின் நடுப்பகுதியில் நீரை வெளியேற்றும் வழியொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இரண்டு குளங்களிலுமுள்ள நீரை முற்றாக வெளியேற்றலாம். இரண்டு குளங்களையும் சுற்றிவர வெளிப்புறத்தே மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள மகர வாயில் ஊடாக சிறிய குளத்திலிருந்து பெரிய குளத்தினுள் நீர் வழியும். குளத்துக்குச் செல்வதற்கான குளத்தைச் சூழ ஐந்து படிக்கட்டு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீரானது மாடம் வரையில் நிரம்பிக் காணப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குளங்கள் ஒன்றையொன்று ஒத்த கற்பாளங்களால் ஒன்றுடனொன்று இணைக்கப்பட்டுள்ளன. குளத்தினுள்ளே கற்களால் அமைக்கப்பட்ட ஓரக்கட்டுக்கள் மூன்று தளங்களைக் கொண்டது. குளத்தைச் சூழக் காணப்படும் பூரண கும்பங்கள் (புன்கலச) குளத்துக்கு மேலும் அழகூட்டுவனவாக அமைந்துள்ளன. இங்கு காணப்படும் நாகபட, நாக உருவம் மிகச் சிறப்பான ஒரு படைப்பாகும். (தொல்பொருளியில் கட்டுப்பாட்டு அதிகாரியின் நிருவாக அறிக்கை 1955:12)

குமாரப் பொக்குண (குமாரக் குளம்)

பொலனறுவைக் காலத்தைச் சேர்ந்த இக்குளம் பராக்கிரமபாகு மன்னனின் அரச குடும்பக் குளமாகக் கருதப்படுகின்றது. இது சிலா பொக்கரதணி” என வம்சக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. செவ்வக வடிவத்தில் அமையாத இக்குளம், வெளித்தள்ளப்பட்ட நேர்க்கோடுகளாலான கேத்திரகணித உருவங்களைக் கொண்டமைந்த ஓர் ஆக்கமாகும். குளம் மேலிருந்து கீழாக படிக்கட்டுப் போன்ற வெவ்வேறு மட்டங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படிக்கட்டுக்கள் மேடைகள் போன்று அமைக்கப்பட்டுள்ளன. குளத்தின் அடிப்பகுதியில் கல்பதிக்கப்பட்டுள்ளது. குளத்தின் மத்தியில் நீர் சொரியும் அமைப்புக் காணப்படுகின்றது. குளத்தின் அடிப்பகுதியில் உள்ள துவாரங்களின் வழியே நீரை வெளியேற்றத்தக்கவாறு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. குளத்தினுள் இறங்குவதற்காக கல்லினால் அமைக்கப்பட்ட படிக்கட்டு வரிசையொன்று உள்ளது. குளத்துக்கு அண்மையில் ஆடையணிவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அறையின் இடிபாடுகள் காணப்படுகின்றன,

பொலனறுவை நெலும் பொக்குண (தாமரைக்குளம்)

இது பொலனறுவைக் காலத்தைச் சேர்ந்த ஓர் ஆக்கமாகும். பராக்கிரமபாகு மன்னனால் கட்டுவிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. சூல வம்சத்திலும் இது பதுமனகான” கொடக” எனும் பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான ஏழு குளங்கள் அமைக்கப்பட்டதாக சூழ வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் தற்போது தொல்பொருளியல் அகழ்வுகள் மூலம் இவ்வாறான இரண்டு குளங்களே இனங்காணப்பட்டுள்ளன.

இவற்றுள் ஒரு குளத்தை பொலனறுவை ஆலாஹன பிரிவெனாவின் அருகே காண முடிகின்றது. மற்றைய குளம் பொலனறுவை பழைய நகரத்தில் வடக்குப் பக்கத்தில் புகையிரதப் பாதைக்கருகே உள்ளது. தூபாராமைக்கு அருகே அமைந்துள்ள அளவிற் பெரியதல்லாத தாமரைக்குளம், 24 அடி விட்டமுடையது. அது கீழ் நோக்கிச் செல்லும்போது படிப்படியாகச் சிறியதாகிச் செல்லும் வகையில் ஏழு மட்டங்களில் (மலர் இதழ்கள் போன்று) அமைந்துள்ளது. இவை ஒன்றுடனொன்று இணைக்கப்பட்ட கற்பாளங்களாலானது, குளத்தின் அடிப்பகுதியில் சீராக கற்கள் பரப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!