கிறிஸ்தவ தேவாலயத்தின் அடிப்படை அம்சங்கள்

  • இலங்கையின் கரையோரப்பிரதேசங்களில் 16 ஆம் நூற்றாண்டில் கிறித்தவ சமயம் பரவியது.
  • கிறித்தவ தேவாலயங்கள் போர்த்துக்கேயரால் நிர்மாணிக்கப்பட்டன.
  • இலங்கையின் கிறித்தவ தேவாலயங்கள், றோமன் மற்றும் கோதிக்கு எனும் 2 கட்டட நிர்மாண பாணிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
  • றோமன் முறை தேவாலயங்களில் வளைவான கூரையையும் வட்ட வடிவ வில்வளைவுகளாலுமானது. இத்தேவாலயங்களின் பிரதான நுழைவாசலுக்கு மேலே கண்ணாடியாலான அழகிய வட்ட வடிவ சாளரம் உள்ளது. அது சுழளந றுiனெழற எனப்படும்.
  • கோதிக்கு முறை தேவாலயத்தில் கூர்முனையுடன் வில்வளைவுகளையும் இரு புறமாக குத்துச்சாய்வான கூரையும் கொண்டமைந்துள்ளது.
  • இத்தேவாலயங்களில் கூர் கொண்ட சாளரங்கள் நிறக்கண்ணாடிகளால் அழகுப்படுத்தப்பட்டுள்ளது.
  • நிறக்கண்ணாடிகளில் கிறிஸ்தவ சமயம் சார்ந்த பல்வேறு சந்தர்ப்பங்களும் பாத்திரங்களும் காட்டப்பட்டுள்ளன.
  • தேவாலயத்தின் தரைத்திட்டம் சிலுவை வடிவானது.
  • அது பலிபீடம், அறைகள், நீள் மண்டபம், தூண்கள், பைபிள் வாசிக்கும் பீடம், நுழைவாயில் ஆகிய அம்சங்களைக் கொண்டது.
  • நீள் மண்டபத்தில் ஓர் அந்தத்தில் பலிபீடம் காணப்படும். அதன் பின்சுவரில் ஓவியங்களால் / செதுக்கு வேலைகளில் / அழகிய வர்ணக்கண்ணாடிகளால் கிறிஸ்த்து பெருமானின் வாழ்க்கைக் கட்டங்கள், நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
  • இலங்கையின் பிரதானமான சில கிறிஸ்தவ தேவாலயங்கள் வருமாறு
    • பொரளை (கொழும்பு ) – தேவாலயம்
    • கொழும்பு – ஒல்லாந்தர் தேவாலயம்
    • காலி – கோட்டையினுள் உள்ள கிறிஸ்தவ தேவாலயம்
  1. பலிபீடம்
  2. அறை
  3. நீள் மண்டபம்
  4. தூண்கள்
  5. பைபிள் வாசிக்கும் இடம்
  6. நுழைவாயில்
பொரளை (கொழும்பு ) – தேவாலயம்
கொழும்பு – ஒல்லாந்தர் தேவாலயம்
காலி – கோட்டையினுள் உள்ள கிறிஸ்தவ தேவாலயம்
றோமன் முறை தேவாலயம்
கோதிக் முறை தேவாலயம்

பயிற்சி வினாக்கள்

1. கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைக்கப்படும் இரு முறைகளும் எவை?
2. அவற்றிக்கிடையேயான வேறுபாடு யாது?
3. கிறிஸ்தவ தேவாலய தரைப்படம் எவ்வடிவத்தில் அமைக்கப்படும்?
4. இலங்கையில் பிரதானமான கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைந்துள்ள இடங்கள் எவை?
5. கிறிஸ்தவ தோவலயத்தின் அடித்தளப் பகுதியின் அமைப்பை வரைந்து அதன் பாகங்களைக் குறிப்பிடுக.