கிரேக்க கலைப் படைப்புக்கள்
வீனஸ் தி மெலோ (Venus de melo)
- பிரான்சு நாட்டில் லூவர் அரும்பொருட்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வீனஸ் டி மெலோ சிற்பமானது கிரேக்கத் தொன்மை யுகத்தைச் சேர்ந்த கலைப்பண்புகளைக் கொண்ட ஒரு கலைப்படைப்பாகும்.
- கைகளிரண்டும் உடைந்து போயுள்ள இந்த சலவைக் கற்சிற்பம் கி.பி. 1820 இல் மெலோ தீவில் கண்டுபிடிக்கப்பட்டது.
- இடது கையில் ஏந்திய கண்ணாடியினால் தனது உடலழகைப் பார்க்கும் ஒரு பெண் இச்சிற்பத்தினால் காட்டப்பட்டுள்ளது என்பது கலைவிமர்சகர்களின் கருத்தாகும்.
- பெண்ணின் அழகும், பெண் உடலின் லலிதத்தன்மையும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ள இச்சிற்பம், கிரேக்கச் சிற்பக்கலைப்படைப்புக்களுள் உயரிய தரமுடைய ஒரு படைப்பாகக் கருதப்படுகின்றது.
- பெண் உருவின் இடையைச் சுற்றியுள்ள ஆடையின் மடிப்புகள் சரியும் விதம் இயல்பான முறையிற் காட்டப்பட்டுள்ளது.
- இச்சிற்பம் அன்ரி சொவ் எனும் கலைஞரால் படைக்கப்பட்டது.
பரிதிவட்டம் எறிபவர் (Discobolus)
- பரிதிவட்டம் எறிபவர் சிற்பமானது கிரேக்கத் தொன்மை யுகத்தைச் சேர்ந்த கலைப்பண்புகளைக் கொண்ட ஒரு படைப்பாகும்.
- பரிதிவட்டம் எறிய ஆயத்தமாகும் விளையாட்டு வீரர் ஒருவர் இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது.
- இப்படைப்பில் விளையாட்டு வீரனின் மெய்ந்நிலையின்படி, ஆண் உடலின் வலிமை, வலுவான அசைவு, உடலின் சமநிலை, சந்தம் போன்றவை மிகச்சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.
- தசைச்செயற்பாட்டைக் காட்டும் வகையில் விளையாட்டு வீரனின் மெய்நிலை சிறப்பாகக் காட்டப்பட்டுள்ள இச்சிற்பம் சலவைக் கல்லினால் வடிக்கப்பட்டுள்ளது.
- கி.மு. 450 காலத்தைச் சேர்ந்த பரிதிவட்டம் எறிபவர், சிற்பத்தின் மூலப்படைப்பு வெண்கலத்தினால் செய்யப்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படுவதோடு அது சிற்பக் கலைஞர் மைரன் (Myron) இனது படைப்பாகும்.
ஹேர்மிகாம் டயோனீசும் (Hermes and Dionysus)
- கி.மு. 330 – 320 காலத்தைச் சேர்ந்த இச்சிற்பம் கிரேக்க நாட்டு, ஒலிம்பியாவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறப்பான முழுமைப்புடைப்புச் சிற்பமாகும்.
- கிரேக்க தொன்மை யுகத்தைச் சேர்ந்த கலைப்பண்புகளைக் கொண்ட இது பிரெக்சிடேல்ஸ் (Praxiteles) எனும் சிற்பக் கலைஞரால் வடிக்கப்பட்ட ஒரு படைப்பாகும்.
- இச்சிற்பம் 7 அடி 1 அங்குல உயரமுடையதாக, சலவைக் கல்லினால் வடிக்கப்பட்டுள்ளது.
- ஹேர்மிஸ் தனது வலது காலை ஊன்றி, இடது காலை முழங்காலில் மடித்து வைத்திருப்பதோடு, இடது கையில் டயொனீசஸ் எனும் குழந்தையைத் தூக்கி வைத்திருப்பதாக இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
- ஹேர்மிஸ் இனது உருவத்தில் வலது கை உடைத்து போயுள்ளதோடு, அதன் மிச்சமுள்ள பகுதியை நோக்குகையில், அக்கையை மேலே உயர்த்தி வைத்திருக்கும் நிலையே காட்டப்படுகின்றது. அக்கையில் ஒரு கொத்து திராட்சைப் பழங்கள் இருந்திருக்கக்கூடும்.
- ஆணின் உடலில் காணத்தக்க தசைகளின் தன்மை, குணப் பண்புகள், விகிதாசாரம், போன்ற இயல்புகள் சிறப்பாக இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளன.
- இடது கையில் தாங்கியிருக்கும் துணி காரணமாக சிற்பத்தின் சமனிலை பேணப்பட்டுள்ளது.
- இங்கு காட்டப்பட்டுள்ள குழந்தை உருவில் மென்மை, மழலைக்குணம் போன்ற இயல்புகளைக் காட்டுவதில் கலைஞன் வெற்றி பெறவில்லை எனத் தோன்றுகின்றது.
- இச்சிற்பம் தற்போது கிரேக்க நாட்டு, ஒலிம்பியாவில் தொல்பொருட் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதீனா தேவதையின் உருவம் (Athena Parthenon)
- சிற்பம் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பீடியஸ் (Phidias) எனும் கலைஞனால் வடிவமைக்கப்பட்டதாகும்.
- தொன்மை யுகத்தைச் சேர்ந்த இச்சிலை ஏறத்தாழ 48 அடி உயரமானது.
- ஓர் மரத்தில் செதுக்கப்பட்டு தங்கத்தினாலும், யானைத் தந்தத்தினாலும் கவசமிடப்பட்டுள்ள அதீனா தேவதையின் உருவம் மிகச் சிறப்பானதொன்றாகும்.
- இடது கையில் ஓர் ஈட்டியையும் ஒரு கேடயத்தையும் தாங்கியுள்ளது. வலது உள்ளங்கையில் நைக் (nike) அதாவது வெற்றி என்பதை குறியீடாகக் காட்டும் பண்டைய கிரேக்கத் தேவதையின் உரு காணப்படுகின்றது.
- கேடயம், பாதம், தலைக் கவசம், பாதணி ஆகிய பண்டைய கிரேக்க நாட்டு ஆடையணிகளுடன் காட்டப்பட்டுள்ளது.
- மென்மையான ஆடையின் தன்மையைக் காட்டுவதாக மடிப்புக்களை நுணுக்கமாக வெளிப்படுத்துவதில் கலைஞர் வெற்றி கண்டுள்ளார்.
- அதீனா தேவதை உருவத்தின் மூலம் வலிமை, போர், வீரத்துவம் (நிமிர்ந்த நிலை) பெண்ணுக்குரிய நளினம் போன்ற இயல்புகள் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
லக்கூன் சிற்பம் (Laocoon)
- லக்கூன் சிற்பம் ஹெலனிஸ்ரிக் காலத்தைச் (கி.மு.5) சேர்ந்த கலைப் பண்புகளைக் கொண்ட ஒரு படைப்பாகும்.
- இது சலவைக் கல்லினால் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு கலைப்படைப்பாகும்.
- பாரிய கடற் பாம்பொன்றிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஒரு தந்தையும், இரண்டு புதல்வர்களும் எடுக்கும் முயற்சி இச்சிற்பத்தில் வடிக்கப்பட்டுள்ளது.
- தந்தையின் முதுமையையும் புதல்வர்களின் இளமையையும் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. வயோதிபத் தந்தையின் தைரியமும் வலிமையும் பாம்பிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சியும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- யாதார்த்த பாணிக்கு அமைவாக முகத்தில் வேதனை, அச்சம், திகில், விடாமுயற்சி, போன்றவை நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
- எட்டு (8) அடி உயரமான இச்சிற்பம் தற்போது உரோமபுரியில் வத்திக்கான் அரும்பொருட்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வினாக்கள்
தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு தரப்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புக.
1. இது …………………………………… எனும் சிற்பமாகும்.
2. இச் சிற்பமானது கிரேக்க ………………………………………….. காலத்தைச் சேர்ந்த கலைப்பண்புகளைக் கொண்டது.
3. பெண்ணின் அழகும், பெண் உடலின் லலிதத்தன்மையும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ள இச்சிற்பமானது ………………………………………….. ஊடகமாகக் கொண்டது.
4. இடது கையில் ஏந்திய ………………………………………. யினால் தனது உடலழகைப் பார்க்கும் ஒரு பெண் இச்சிற்பத்தினால் காட்டப்பட்டுள்ளது.
5. இச்சிற்பம் …………………………………………. எனும் கலைஞரால் படைக்கப்பட்டது.
1. சிற்பம் ……………………………………….. எனும் கலைஞனால் வடிவமைக்கப்பட்டதாகும்.
2. இச் சிற்பமானது கிரேக்க ………………………………………….. காலத்தைச் சேர்ந்த கலைப்பண்புகளைக் கொண்டது.
3. இச் சிற்பமானது மரத்தில் செதுக்கப்பட்டு ………………………………………, ……………………………………….. ஆகியவற்றால் கவசமிடப்பட்டுள்ளது.
4. இதன் வலது உள்ளங்கையில் ………………………………. என்ற வெற்றி என்பதை குறியீடாகக் காட்டும் பண்டைய கிரேக்கத் தேவதையின் உரு காணப்படுகின்றது.
5. அதீனா தேவதை உருவத்தின் மூலம் …………………………………………. உணர்வுடன் பெண்ணுக்குரிய நளினம் போன்ற இயல்புகள் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு அதன் கலை அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.
1. இனங்காண்க : ………………………………………
2. கலைஞர் : .…………………………………………
3. காலம் : .…………………………………………………
4. ஊடகம் : .……………………………………………
5. உணர்வு வெளிப்பாடு : .……………………
1. இனங்காண்க : ………………………………………
2. கலைஞர் : .…………………………………………
3. கிரேக்க காலம் : .…………………………………
4. ஊடகம் : .……………………………………………
5. உணர்வு வெளிப்பாடு : .……………………
6. கருப்பொருள் : ……………………………………….