காவற்கல்

பௌத்த சமய மற்றும் அரசன் சார்ந்த கட்டடங்களின் படிக்கட்டு அடிவாரத்தில் உள்ள சந்திரவட்டக்கல்லின் இரு புறங்களிலும் கொரவக்கல்லுக்கு முன்னாலும் உள்ள செவ்வக வடிவக் கற்பாளமே காவற்கல் எனப்படுகின்றது. இக்காவற்கல்லானது, நாகசிலா, அரக்கல, ஆரக்சாகல எனும் பெயர்களாலும் வழங்கப்படுகின்றது. கொரவக்கல்லானது முன்னோக்கி வழுக்கிச் செல்வதைத் தவிர்ப்பதற்காக இடப்பட்ட ஆப்புக் கல்லே (கூஞ்சகல) இதன் ஆரம்ப வடிவமாகும் என சாள்ஸ் கொடகும்புர கூறுகின்றார். இதற்கு உதாரணமாக அவர், இராஜாங்கனை அத்திக்குச்சி விகாரையின் வட்டதாகே, அனுராதபுர வெஸ்ஸகிரிய காவற்கற்களை எடுத்துக்காட்டுகின்றார். இந்தக் கருத்துக்கு எதிரான சான்றுகள், தம்புள்ளை சோமாவதி தாதுகோபத்துக்கு அருகேயிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்கனை அத்திக்குச்சி விகாரை
சோமாவதி

காவற்கல் வளர்ச்சி

எதுக்கல வேலைப்பாடுகளைக் கெணர்ட செவ்வக வடிவ கற்பாளமாக ஆரம்பித்த காவற்கல்லானது படிப்படியாக கலைத்துவ அம்சங்களைக் கொண்டதாக வளர்ச்சியடைந்துள்ளது. காவற்கல்லின் வளர்ச்சி ஆறு கட்டங்களின் / படிமுறைகளின் கீழ் இடம்பெற்றுள்ளது. ஆரம்பக்கட்டத்தில் கவாற்கல்லின் இரு அந்தங்களும் வட்டவடிவமாக அமைக்கப்பட்ட செவ்வக வடிவக் கற்பாளமாகக் காணப்பட்டது.

இரண்டாவது கட்டத்தின் உசசியின் நடுவே புடைப்பான பிதுக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டத்தில் அழகுபடுத்துவதற்கான ஓர் அங்கமாக காவற்கல்லுடன் நிறைகுடம் (புன்கலச) சேர்க்கப் பட்டுள்ளது. கற்பக விருட்சத்தை (கல்ப விருடசய) கொண்ட நிறைகுடங்களையும் காணமுடிகின்றது. காவற்கல்லில் சேர்க்கப்பட்ட இந்த முதலாவது செதுக்கல் வேலைப்பாட்டின் பின்னர், குள்ளர் (வாமனர்) உருவங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அத்தோடு நாக உருவங்களைக்கொண்ட காவற்கற்களையும் இனங்காண முடிகின்றது. பின்னர், திக்குப்பாலகர் (திசா பாளக்க) உருவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கவாற்கல்லின் மிக விருத்தியடைந்த கட்டமாக அதனுடன் மகாதோரணம் சேர்க்கப்பட்ட மட்டத்தைக் குறிப்பிடலாம்.

காவற்கல்லின் ஒரு செதுக்கல் வேலைப்பாடாக நிறைகுடம் சேர்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எனைய வாயில் அம்சங்களாகிய கொரவக்கல், சந்திரவட்டக்கல் ஆகியவற்றிலும் அலங்கார வேலைப்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. காவற்கல்லினது வளர்ச்சியின் போது குள்ளர் (வாமனர்) உருவங்களாக குபேரனின் கடல்படு புதையல்களைக் காக்கும் சுங்க, பத்ம ஆகிய இரண்டு வகை பைரவர்களை காவற்கல்லில் காணலாம். காளிதாசனின் ‘மேகதூதில் குறிப்பிடப்பட்டடுள்ளதற்கிணங்க. குபேரனது சேவகர் ஒருவரது வீட்டின் வாயிலின் இரு புறங்களிலும் இந்த உருவங்கள் காணப்படுகின்றன. இந்த குள்ளர் உருவங்களின் தலைமீது சுங்க, பத்ம வடிவங்கள் காட்டப்பட்டுள்ளதோடு, அதன் மூலம் அவர்களின் அடையாளத் தனித்துவத்தை இனங்காணலாம். இதற்காக ஓர் உதாரணமாக அனுரராதபுர விஜயபாகு மாளிகை வயிலின் காணப்படும் வாற்கல்லைக் குறிப்பிடலாம்.

காவற்கல்லின் வளர்ச்சிகட்டங்களைக் காட்டும் சில உதாரணங்கள்

படிமுறை 1 – செவ்வகவடிவக் காவற்கல்

படிமுறை 2 – உச்சியில் பிதுக்கம் கொண்ட காவற்கல்

படிமுறை 3 – நிறைகுடத்தைக் கொண்ட காவற்கல்

படிமுறை 4 – நாக உருவம் கொண்ட காவற்கல்

படிமுறை 5 – பைரவர் உருவம் கொண்ட காவற்கல்

படிமுறை 6 – நாகராசர் உருவத்தைக் கொண்ட காவற்கல்

காவற்கல்லின் மிக விருத்தியடைந்த கட்டத்தில், அதுவரையில் வெவ்வேறாகப் பயன்படுத்தப்பட்ட சங்க, பத்ம, பைரவர் உருவங்கள், நாக உருவம் ஆகிய அனைத்து அம்சங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் திக்குப் பாலகர் (திசா பாலக்க) உருவதம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விருத்தியடைந்த கட்டத்தின்போது மகார தோரணமும், ஒரு புறத்தே கம்பமொன்றின் மீது திசைகளைக் காட்டும் பிராணி உருவமும் காவற்கல்லுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இலங்கையில் -சிறப்பான இடத்தைப் பெறுகின்றது.

அபயகிரி விகாரை ரத்ன பிரசாதய – காவற்கல்

இக்காவற்கல்லில் மூவளைவு (திரி பங்கர) உடல்நிலையைக் கொண்ட, திக்கு பாலகர் உருவம், இடது கையில், பூரண கும்பத்தையும் வலது கையில் வளைவான சாமரையை அல்லது வளைவான பூங்கொடியொன்றைத் தாங்கியுள்ளது. அழகிய ஆடையணிகள் தரித்து தலையில் உயரமான கிரீடமொன்றினையும் தாங்கி உள்ளது. காவற் கல்லின் அடிவாரத்தில் சங்க, பத்ம உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. கலைத்துவ அம்சங்களைப் பொறுத்தமட்டில் உயரிய இடத்தைப் பெறும், ரத்ன பிரசாதக் காவற்கல்லின், மேற்பகுதியின் வில்வளைவு போன்ற பகுதியானது, நான்கு மகர வாய்களைக் கொண்ட ஒரு தோரணத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அம்மகர தலைகளுக்கு இடையே காதலர்களும் இராட்சகர்களும் (யோத) மகரவாயினுள் ஈர்க்கப்பட்டுச் செல்லும் விதம் செதுக்கப் பட்டுள்ளது. மகர உருவம் ‘காலம்’ என்பதற்காக குறியீடாதலால் காலத்தினால் அனைத்தும் காவுகொள்ளப்படும், அதாவது அழிக்கப்படும் எனும் கருத்து இதன் மூலம் காட்டப்படுகின்றது என்பதை அனுமானிக்கலாம். அதற்கமைய கலைத்துவ அம்சங்களையும் அர்த்தபுஷ்டியான தன்மையையும் கொண்ட காவற்கல்லானது காலத்துக்கேற்ப இலங்கைக் கட்டடக் கலையின் தனிச்சிறப்பான ஒரு கலைப்படைப்பாக அமைந்தது. மகர தோரணம் இல்லாத போதிலும் கூட மிக சிறந்த தன்மையைக் கொண்ட காவற் கற்களைப் பொலனறுவை, வட்டதாகே பிரவேச வாயிலில் காண முடிகின்றது. மேலும் காவற்கல்லுக்கான செதுக்கல் வேலைப்பாடுகளைத் தெரிவு செய்துள்ள சில சந்தர்ப்பங்களில் பெண் உருவங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் ஒரு விசேட பண்பாகும். (அபயகிரி விகாரையின் மகசென் மாளிகையில் கிழக்குத் திசைப் பிரதேச வாயிலில் தமது மனைவியுடன் இருக்கும் திக்குப் பாலகர் உருவமொன்று காணப்படுகின்றது.)

ரத்ன பிரசாதய
பொலனறுவை வட்டதாகே

காவற்கல்லுக்காக ஆரம்ப காலத்தில் இடப்பட்ட குறியீடுகளாக, பூரண கும்பத்தினால் சௌபாக்கியமும் பைரவர் உருவங்களினால் பாதுகாப்பும் குறிக்கப்படுகின்றன. காவற்கல்லின் வளர்ச்சியடைந்த கட்டத்தில் அதன் பிரதான உருவமாகிய நாக இராச உருவம் அதாவது திக்குப் பாலகர் உருவம் அனுடன் சேர்க்கப்பட்டுள்ளது. திக்குப் பாலகர் உருவங்களாக திருதராட்டிரன், விதுரன், விரூபாட்சன், ராவணன் ஆகிய தெய்வங்களின் உருவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நான்கு தெய்வங்களும் (சத்தர வரம் தெய்வங்கள்) பௌத்த பாதுகாப்புத் தெய்வங்களாகக் கருதப்படுவதோடு, அவர்கள் புனித கட்டங்களின் தாதுகோபங்களிலும் வாகல்கடை மற்றும் காவற் கற்களிலும் பாதுகாப்பாளர்களாக இலங்கைக் கலைஞர்களால் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. (விக்ரமகமகே). திக்குப் பாலகர் உருவங்களைக் கொண்ட காவற்கற்களில் நான்கு திக்குகளையும் குறிப்பதற்காக யானை, எருது, குதிரை, சிங்க உருவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதற்கமைய, அந்தந்தத் திசைக்கு ஒப்பாக, காவற்கல்லுடன் தூணின் மீது யானை (கிழக்கு), எருது (தெற்கு), சிங்கம் (வடக்கு), குதிரை (மேற்கு) ஆகியன இடப்பட்டுள்ளன. இவ்வாறாக அனுராதபுர அபயகிரி விகாரை ரத்த பிராசாதய இனது கிழக்கு வாயிலின் காவற்கல்லின் இடது புறத்தே யானை உருவம் காணப்படுகின்றமையால் அது கிழக்குத் திசையைக் காட்டுகின்றமை தெளிவாகின்றது.

error: Content is protected !!