காந்தார மற்றும் மதுரா கலை ஆக்கங்கள்

குஷான காலமும் புத்தர் சிற்ப ஆக்கங்களும்

கி.பி. முதலாம் நூற்றாண்டானது, குப்த காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் இந்தியாவின் வடமேல் எல்லையில் இந்திய வரலாற்றிலும் பொதுவாக ஆசிய வரலாற்றிலும் செல்வாக்குச் செலுத்திய கலைப் படைப்புக்கள் உருவான ஒரு காலமாகும். இப்பிரதேசம் வெளிநாட்டு அதாவது கிரேக்கத்துடன் தொடர்புடைய ஆட்சி முறையொன்றுடன் கூடியதாக இருந்தது. இந்த இந்திய கிரேக்க தொடர்பானது கி.மு. நான்காம் நூற்றாண்டில் இடம்பெற்ற அலெக்சாண்டரின் ஆக்கிரமிப்புக் காலம் வரை நீடிக்கிறது. மௌரிய காலத்துக்குப் பின் வட இந்தியாவில் காணப்பட்ட உறுதியற்ற அரசியல் நிலையானது, வெளிநாட்டவர் இந்தியாவை ஆக்கிரமிக்கும் சூழல் உருவாகக் காரணமாக அமைந்தது. இந்தக் கிரேக்க ஆக்கிரமிப்பும் இவ்வாறான சூழலில் தான் இடம்பெற்றது. மௌரிய ஆட்சி வீழ்ச்சியடைந்ததன் பின்னர் உருவான உறுதியற்ற அரசியல் தன்மை காரணமாக, வட இந்தியாவில் ஆட்சியமைத்த வெளிநாட்டு அரச குலத்தவர்களாக குஷாணர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் வட இந்தியாவில் மட்டுமன்றி மத்திய ஆசியப்பகுதிகளிலும் தமது ஆதிக்கத்தைப் பரப்பியதற்கான சான்றுகள் உள்ளன.

குஷாணர்களின் வரலாற்றை நோக்கும்போது சீன துர்கிஸ்தான் பிரதேசம் அவர்களின் தாய் நிலமாகக் கருதப்படுகிறது. (இந்திய வரலாறு – கல்வி வெளியீட்டுத் திணைக்களம் 2004:197) குஷாண இராஜ பரம்பரையின் முதற் தலைவர் குஜல கெட்பசியஸ் என்பது வரலாற்றாசிரியர்களின் கருத்தாகும். குஜல கெட்பசியஸ் இனது காலத்துக்குப் பின் அவனது மகன் வீமா கெட்பசியஸ் ஆட்சியைக் கைப்பற்றினார். அவனது ஆட்சி மதுரை வரை பரவியது. இவனது ஆட்சிக்குப் பின் கனிஷ்க மன்னன் ஆட்சியைக் கைப்பற்றினான். குஷாண மன்னர்களுள் சிறந்த ஆட்சியாளராக அவன் கருதப்படுகிறான். கனிஷ்க மன்னன் (கி.பி. 78 – 144) தற்போதைய பெஷாவோர் நகரமாகக் குறிப்பிடப்படும் பழைய புருஷபுரம் நகரத்தையே தனது ஆட்சியின் மத்திய நிலையமாகத் தெரிவு செய்தார். தற்போது இது ஆப்கானிஸ்தான் எனப்படுகிறது. வரலாற்றுச் சான்றுகளின்படி கனிஷ்க மன்னனுடைய ஆட்சி உத்தர பிரதேசம், பஞ்சாப், வடமேல் இந்தியாவின் சில பிரதேசங்கள், வட சிந்தீ ராஜ்புத்தானா, மால்வா, கதியவார் வரை வியாபித்துக் காணப்பட்டது. (இந்திய வரலாறுகல்வி வெளியீட்டுத் திணைக்களம்) காஷ்மீர் பகுதியையும் கனிஷ்க மன்னன் ஆண்டதாக ஹியுன்சாங் இன் ‘நாடுதேடல் அறிக்கை குறிப்பிடுகிறது.

கனிஷ்க அரசனுடைய காலம் கலாசார ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பெக்ரியன் கிரேக்க, ஷக்க காலங்களில் ஆரம்பித்த இந்திய கிரேக்க கலை கனிஷ்க மன்னனின் காலத்தில் மேன்மேலும் வளர்ச்சியடைந்ததற்கான சான்றுகள் உள்ளன. இக்காலப் பருவத்திற்குரிய கலாசார வரலாற்றில் இந்திய கிரேக்க பண்புகளைப் பிரதிபலித்த காந்தார கலை மரபும் தேசிய கலைப் பண்புகளைப் பிரதிபலித்த மதுரா மரபும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. பௌத்த கலை தொடர்பாக சிற்பக்கலையும் செதுக்கல் கலையும் விருத்தியடைந்து காணப்பட்ட இக்காலப் பகுதியில் இவை மத்திய ஆசியாவிலும் கிழக்கத்தேய நாடுகளிலும் பரவியமைக்கான சான்றுகள் பெறப்பட்ட சிதைவுகளில் இருந்து கிடைத்துள்ளது.

error: Content is protected !!