காண்பியக் கலைக் கோட்பாடுகள்

ஏற்கனவே விவரிக்கப்பட்ட காண்பியக் கலையில் அடிப்படை அம்சங்களைக் கலைப்படைப் பொன்றில் வரிசைப்படுத்துவதற்குரிய ஒழுங்குவிதிக் கோவையே கட்புலக்கலைக் கோட்பாடாகும்.

அவற்றை வரிசைப்படுத்தும் அதாவது ஒழுங்குபடுத்தும் விதத்தின் மூலம் படைப்பாக்கத்தின் வெளிப்பாட்டுத்தன்மை மீது செல்வாக்குச் செலுத்தலாம். அவ்வாறான சில கோட்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன.

சமனிலை (Balance)

யாதேனும் கலைப்படைப்பில் கட்புலம் சார்ந்த அடிப்படை அம்சங்கள் முறைமையாகவும் தருக்கரீதியாக தொடர்புடனும் பிரிந்து செல்வதே சமனிலை என்பதால் கருதப்படுகின்றது. மற்றுமொரு விதமாகக் கூறுவதானால் யாதேனும் கலைப்படைப்பில் கட்புல ரீதியில் காணப்படும் சமனிலையையே இது குறிக்கின்றது. வர்ணம், கோடுகள் (ரேகைகள்) தளம் ஆகிய அடிப்படை அம்சங்களைக் கலைப்படைப்பினுள் தாபிக்கும் விதத்துக்கமைய சமனிலை கட்டியெழுப்பப்படும். இதனைப் பிரதானமாக இரண்டு பிரிவுகளாக வகுத்துக் காட்டலாம். சமச்சீர்ச் சமனிலை (Symmetrical Balance), சமச்சீரில் சமனிலை (Asymmetrical Balance) ஆகியவையே அவையாகும். இவை தவிர ஆரையச் சமநிலை (Radial Balance) எனப்படும் சமநிலைப்படுத்தல் முறையொன்றும் உண்டு .

சமச்சீர்ச் சமனிலை
சமச்சீரில் சமனிலை
ஆரையச்சமனிலை

சமச்சீர்ச் சமநிலை

வெளியின் மத்தியிலிருந்து கட்புல அடிப்படை அம்சங்களை விகிதசமனாக இரு புறங்களிலும் சமப்படுத்துவதே சமச்சீர்ச் சமனிலையின்போது செய்யப்படும். பெரும்பாலும் இது மையக் கோட்டையோ, மையப் புள்ளியையோ அடிப்படையாகக் கொண்டு அதன் இரு புறங்களிலும் அல்லது அதனைச் சூழ அமைக்கப்படும் கட்புலக் கூறுகளின் சமனிலையான பிரிப்பை எடுத்துக்காட்டும். உதாரணமாக டாவின்சி வரைந்த இராப் போசன விருந்து எனும் ஓவியம் சமச்சீர்ச் சமனிலையை ஒரு படைப்பாகும். இந்த ஓவியத்தில் இயேசு பிரான் மத்தியில் காட்டப்பட்டும் உருவங்கள் அதாவது சீடர்களும் சாளரங்கள் போன்றவையும் சமமா அமையுமாறும் வரையப்பட்டுள்ளது.

இறுதிப் போசன விருந்து

சமச்சீரில் சமநிலை

சமச்சீரல்லாச் சமனிலையின்போது காண்பியக் கூறுகள் அளவுப் பரிமாணப்படி பிரிந்து காணப்படுவதில்லை. எனினும் ஒட்டுமொத்தமாக நோக்குகையில் வர்ணங்கள், கோடுகள், தளம் ஆகியவற்றின் பொருத்தப்பாடு காரணமாகச் சமனிலை கட்டியெழுப்பப்படும். இதனை அருபமச் சமனிலை எனக் குறிப்பிடலாம். ஜோன் மீரோ வரைந்த உலகின் பிறப்பு (The Birth of the World) அவ்வாறான ஓர் ஓவியமாகும். அருபம் ஒரு படைப்பான இது கேத்திரகணித உருவங்கள் சிலவற்றைக் கொண்டுள்ளது. இடது பக்கப்பகுதியில் தளவடிவங்கள் அதிகமாகக் காணப்பட்ட போதிலும், வலது பக்கத்ததில் உள்ள கோளத்தின் சிவப்பு நிறம் காரணமாக இந்த ஓவியம், அருபமச் சமனிலையைப் பெற்றுள்ளது. மேலும் வன்கோ வரைந்த ‘நட்சத்திர இரவு’ எனும் ஓவியமும் இடது புறத்தே உள்ள சைப்பிரசு மரங்கள் வலது புறத்தே உள்ள சந்திரனின் மஞ்சள் நிறம் ஆகியன காரணமாக ஒட்டுமொத்தமாகச் சமனிலைத் தன்மையைக் காட்டுகின்றது.

உலகின் பிறப்பு (ஜோன் மீரோ)
நட்சத்திர இரவு (வன்கோ)

ஆரையச் சமநிலை

ஆரையச் சமனிலையின்போது ஒரு மையப் புள்ளியிலிருந்து கட்புல ” உள்ளடக்கப்படும்.

சந்தம் லயம் (Rhythm)

கட்புல அடிப்படை அம்சங்களை ஒரேயடியாக யாதேனும் கோலத்தின்படி வரிசைப்படுத்துவதாலும் இடப்படுத்துவதாலும் சந்தம் கட்டியெழுப்பப்படும். எனவே சந்தம் என்பது கட்புல ரீதியில் உருவாக்கப்படும். இலயம் (Tempo) ஏதாவது கோலம் ஆகும். சந்தத்தை ஏற்படுத்துவதற்காகப் பொதுவாகப் பயன்படுத்தப் படும் உத்தி, ஒரே கட்புல அம்சத்தை மீண்டும் மீண்டும் பாவித்தல் ஆகும். தாமரை இதழ்கள், பூங்கொடி, கல்பிந்து போன்ற பெரும்பாலான வடிவமைப்புக்களில் இந்த உத்தியின் மூலம் சந்தம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

பூங்கொடி வடிவமைப்புகள்

நவீன யுகக் கலைஞர்கள், சந்தத்தைக் கட்டியெழுப்புவதற்காக மேற்படி உத்திகளைவிட வேறுபட்ட உத்திகளைக் கையாள்வதையும் காணமுடிகின்றது. கட்புலக்கலைக் கலைஞர்கள் பரவலாகப் பயன்படுத்தும் அவ்வாறான சில சந்தங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

சீரான/ஒழுங்கான முறைமையான சந்தம் (Regular rhythm)
ஒன்றுவிட்ட சந்தம் (Alternating rhythm)
This image has an empty alt attribute; its file name is G-12-045-1024x511.jpg
எழுமாறான சந்தம் (Random rhythm)
This image has an empty alt attribute; its file name is G-12-044.jpg
பாயும் சந்தம் (Flowing rhythm)
This image has an empty alt attribute; its file name is G-12-046.jpg
பியேட் மொன்றியனின் கிடையான மற்றும் நிலைக்குத்தான கோடுகளின் அமைவு
This image has an empty alt attribute; its file name is G-12-030.png
விலெம் 2 கூனிங் – வேகமான, சுயாதீனமான சந்த வெளிப்பாடு

வன்கோ போன்ற கலைஞர்கள் தமது படைப்பாக்கங்களுக்காகப் பாயும் சந்தைத்தைப் பயன்படுத்தியதோடு, வில்லியம் டிக்கூனிக் போன்ற கலைஞர்கள் எழுமாறான சந்தத்தைப் பொருத்தப்பாடுடையதாகப் பயன்படுத்தினர். ஜக்சன் பொலாக் போன்ற கலைஞர்களின் படைப்பாக்கங்களில் பெரிதும் வேகமான, சுயாதீனமான சந்த வெளிபாட்டைக் காண முடிகின்றது. மொன்றியான் போன்ற கலைஞர்களின் படைப்பாக்கங்களில் கட்டியெழுப்பப்பட்டுள்ள சந்தம், இதனிலும் வேறுபட்டது. அவரது படைப்புக்களில் கிடையான மற்றும் நிலைக்குத்தான கோடுகளின் அமைவு மற்றும் அவற்றினால் கட்டியெழுப்பப்படும் சிறிய சதுரங்கள் மற்றும் அவற்றின் வர்ண முரண் மூலமே சந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறாகக் கட்புலக் கலைஞனின் வெளிபாட்டுப் பாங்கிற்கு அமைவாக அவற்றுக்கே உரியதான வெவ்வேறு சந்தங்கள் பிறப்பிக்கப்படும்.

ஒருமைப்பாடும் பன்மைப்பாடும் (Unity & Variety)

யாதேனும் கலைப்படைப்பின் கட்புலப் பொருள்கள் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து செயற்படுதலே ஒருமைப்பாடு எனப்படுகின்றது. ஆக்க ஒருமைப்பாட்டைப் (Composition Unity) பிரதானமாக இரண்டு பகுதிகளாக வகைப்படுத்திக் காட்டலாம். அவற்றுள் ஒன்று புனைவு ஒருமைப்பாடாகும். கலைப்படைப்பொன்றில் கட்புல அடிப்படை அம்சங்களைப் புனையும்போது கட்டியெழுப்பப்படும் உள்வாரியான தொடர்பே இதன் மூலம் கருதப்படுகின்றது. இந்தத் தொடர்பை விளங்கிக்கொள்வதற்காக “பன்மைப்பாடு” என்பதை இனங்காண்பது மிக முக்கியமானது. பின்வரும் படத்தை அதற்கான ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம். சமமான வர்ணமும் வேறுபட்ட வடிவங்களும் ஒருபுறத்தே காட்டப் பட்டுள்ளன. அதில் சமமான வர்ணத்தின் மூலம் ஒருமைப்பாடு காட்டப்பட்டுள்ளது. உருவங்களின் அளவு வேறுபாட்டினால் பன்மைப்பாடு காட்டப்படுகின்றது. அவ்வாறே படத்தில் மற்றைய பக்கத்தில் சம அளவான உருவங்களின் மூலம் ஒருமைப்பாடும் வெவ்வேறு நிறங்கள் மூலம் பன்மைப்பாடும் காட்டப்பட்டுள்ளது.

ஒருமைப்பாட்டின் இரண்டாவது வகை, எண்ணக்கரு சார்ந்த ஒருமைப்பாடு (Conceptual Unity) ஆகும். படைப்பாக்கத்தினால் காட்டப்படும் எண்ணக்கருக்களுக்கு இடையேயும் யாதேனும் கூட்டாகச் செயற்படும் தன்மை காணப்படலாம் என்பதே இதன் மூலம் குறிக்கப்படுவதால்

வின்சன்ட் வன்கோ – ‘நட்சத்திர இரவு
ஹென்ரி மதீஸ்

வின்சன்ட் வன்கோவினால் வரையப்பட்ட நட்சத்திர இரவு எனும் ஓவியம் ஒருமைப்பாட்டை விளங்கிக்கொள்வதற்கு மிகப் பொருத்தமான ஒரு படைப்பாகும். இந்த ஓவியத்தின் சைப்பிரசு மரங்கள், தொலைவில் காட்சியளிக்கும் நகரம், மலைத்தொடர், நட்சத்திரங்கள், சந்திரன் ஆகிய பல கட்புலப் பொருள்கள் காணப்படுகின்றன. எனினும் ஒட்டுமொத்த ஓவியத்தினால் வெளிப்படுத்தப்படும் இரவின் அழகையும் மறைவான வியத்தகு தன்மையையும் கட்டியெழுப்புவதற்காக அவை அனைத்தும் கூட்டாகச் செயற்படுகின்றன. இந்த இயல்பே ஒருமைப்பாடு எனப்படுகின்றது.

ஒத்திசைவு (Harmony)

கலைப்படைப்பொன்றில் கட்புல அடிப்படை அம்சங்கள் ஒன்றுடனொன்று நன்கு பொருந்தி யமைவதே ஒத்திசைவு என்பதால் கருதப்படுகின்றது. இதன்போது ஒன்றுக்கொன்று வேறுபட்ட கட்புலப் பொருள்கள், ஒவ்வொன்றும் தமக்கிடையே இடைத்தொடர்புகளைக் கட்டியெழுப்பிக்கொள்ளும். அழகு வெளிப்பாட்டுக்கு ஒத்திசைவு இன்றியமையாதது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உதாரணமாக மனித உருவமொன்றில் அழகு வெளிப்பாட்டுக்காக அதன் தலை, கைகள், கால்கள், முண்டம் போன்ற அனைத்துப் பகுதிகளும் ஒத்திசைவுடன் பொருத்தியமைதல் வேண்டும். வசிலி கன்டிஸ்கி யினால் வரையப்பட்ட ஒழுங்கமைப்பு iv (1913- Composition iv) எனும் ஓவியம் ஒத்திசைவை இனங்காண் பதற்கு மிகப் பொருத்தமான ஓர் உதாரணமாகும். இந்த ஓவியத்தில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட வடிவங்கள், வர்ணங்கள் பலவற்றின் பரஸ்பர ஒத்திசைவு காரணமாக ஓர் இசை வெளிப்பாட்டைப் போன்ற அமைப்புடையதான அழகை ஓவியர் கட்டியெழுப்பியுள்ளார்.

ஒழுங்கமைப்பு (Compsition) வசிலி கன்டிஸ்கி
தூரதரிசனம் (Perspective)

இருபரிமாண ஊடகத்தில் அண்மை – சேய்மையைக் காட்டுவதற்குப் பயன்படும் ஒரு கட்புல உத்தியே தூரதரிசனம் ஆகும். மற்றுமொரு விதமாகக் கூறுவதானால், இது யாதேனும் வெளியின் ஆழத்தைக் காட்டுவதற்காகப் பயன்படுத்தும் ஒரு நுட்பமுறையாகும். தூரதரிசனத்தைக் காட்டுவதற்காகக் கையாளப்படும் பல உத்திகள் உள்ளன. கோட்டுத் தூரதரிசனம், சூழ்நிலைத் தூரதரிசனம், வர்ணம் சார்ந்த தூரதரிசனம் எனும் பாகுபாடு அவற்றுள் முக்கியமானதாகும்.

கோட்டுத் தூரதரிசனம் (Line perspective)

இங்கு மறையும் புள்ளி (Vanishing point) வரை செல்லும் கோடுகள் மூலம் அண்மையில் உள்ள பொருள்கள் பெரியவையாகவும் சேய்மையில் உள்ள பெருள்கள் சார்பளவில் சிறியவையாகவும் காட்டப்படும். ஒரு புள்ளி, இரண்டு புள்ளி, மூன்று புள்ளி என மறையும் புள்ளிகளின் தொகை வேறுபடலாம். கோட்டுத் தூரதரிசனத்தைப் பயன்படுத்தி முதன் முதலாக வரையப்பட்ட ஓவியங்களுள் ஒன்றாக ‘மெசாச்சியோ’ எனும் ஓவியர் வரைந்த ”வரிப்பணம்’ (Tribute Money) எனும் ஓவியத்தைக் குறிப்பிடலாம்.

ஒரு தனிப்புள்ளித் தூரதரிசனம்
இரண்டு புள்ளித் தூரதரிசனம்
பல புள்ளித் தூரதரிசனம்

சூழ்நிலைசார்ந்த தூரதரிசனம் (Atmospheric Perspective)

பரம்பிச் செல்லும் போது அதன் விரிவான இயல்புகள் மறைந்து போதல், அடிப்படை அம்சங்கள் மங்கிப்போதல், தெளிவற்றுப்போதல் போன்ற இயல்புகளை சூழ்நிலைசார்ந்த தூரநோக்கில் காணலாம்.

வர்ணத் தூரதரிசனம் (Colour Perspective)

தொலைவில் உள்ளவற்றினது வர்ணங்களின் பிரகாசமும் வர்ணப் பெறுமானமும் (கடுமையும்) குறைவடைந்து செல்வதே இங்கு கவனத்திற் கொள்ளப்படும், உதாரணமாக, மலைத் தொடரொன்று தூரத்தூரச் செல்லும் போது மிகத் தொலைவில் உள்ள மலைகள் பெரும்பாலும் நீல நிறத்தில் காட்டப்படும். வர்ணத் தூரதரிசனத்தின்போது இந்த இயல்பு வலியுறுத்தப்படுவதால் ஆழம் எடுத்துக்காட்டப்படும்.

அளவுப் பிரமாணம் (Proportion)

அளவுப்பிரமாணம் என்பது யாதேனும் பொருளுக்குரிய கணித விகிதங்கள் அனைத்துமாகும் என எளிமையாக வரையறுக்கலாம். இதற்காக யாதேனும் கட்புல அடிப்படை அம்சங்கள் அல்லது அவற்றின் கூறுகளுக்கு இடையேயான சார்பளவிலான விகிதங்கள் கவனத்திற்கொள்ளப்படும். உதாரணமாக, மனித உடலின் விகிதமானது தலையின் எட்டு மடங்காகும் என்பதை கிரேக்கச் சிற்பக்கலைஞர்கள் பயன்படுத்தினர். இது கிரேக்க தொல்சீர் சிற்பக்கலையில் மனித உடல் தொடர்பான ஓர் அளவுப் பிராமாணக் கோட்பாடாகும்.

நவீனத்துவக் கலைஞர்கள், மனித உடலின் விகிதங்களை விகாரப்படுத்தல், சிதைத்தல் மற்றும் மிகைப்படுத்தல் மூலம் வெளிக்காட்டி, வலிமையை முனைப்புறுத்தியுள்ளனர். பப்லோ பிக்காசோ, சல்வதோர் டாலி ஆகியோரின் கலைப்படைப்புகளை இதற்கான உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

அளவுப்பிரமாணமானது, யாதேனும் பொருளைக் கட்புல ரீதியில் சரியாகக் கட்டியெழுப்புவதற்கும் இரண்டு பொருள்களுக்கு இடையிலான வேறுபாட்டைக் காட்டுவதற்கும் அவசியமானது.

தலையின் அளவிலும் எட்டுமடங்கான உடலைக் கொண்ட மனித உருவங்கள்.
முப்பரிமாண இயல்புகள் (3 Dimensional features)

இயற்கை உலகில் உள்ள பொருள்களின் தன்மையை இருபரிமாணத் தளத்தில் காட்டுவதற்காகப் பயன்படுத்தும் ஓர் உத்தியே முப்பரிமாண இயல்புகளாகும். முப்பரிமாணத் தன்மையைக் காட்டுவதில் முக்கியத்துவம் பெறும் மற்றுமிரண்டு முக்கிய காரணிகளாக, கனவளவு (volume) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கனவளவு என்பது யாதேனுமொரு பொருள் அதன் : ஆழம் என்றவாறு இயல்புகள் மூலம் வெளியில் தனதாக்கிக்கொள்ளும் இடத்தின் அன்னை திணிவு என்பது, மேற்படி அடிப்படையான இடத்தின் அளவு, ஒளி-நிமல் கன இயல்புகளையும் உள்ளடக்கியதாகக் கோடுகளால் நிழற்றுவதாலும், வர்ணத்தினால் கட்டியெழுப்புவதாகும். இதன் மூலம் முப்பரிமாண இயல்பு கட்டியெழுப்பப்படும்

ஒளி-நிழல் காட்டுதல், நிறங்களின் செறிவை மாற்றுதல், கியுரொஸ்கியுரோ (Chiaroscuro) நுட்பமுறை போன்றவை முப்பரிமாண இயல்பைக் கட்டியெழுப்புவதற்காகப் பயன்படுத்தப்படும் உத்திகளாகும். கியுரொஸ்கியுரோ (Chiaroscuro) எனும் பதம் ஒளி-நிழல் எனும் பொருளைத் தரும்.

இத்தாலியச் சொல்லொன்றிலிருந்து தோன்றியுள்ளது. யாதேனும் பொருளின் ஒளி-நிழலின் நுண்மையான மாற்றங்களுக்கு ஒப்பானவாறு வர்ணங்களின் செறிவை மாற்றி உருண்டு திரண்ட தன்மையும் முப்பரிமாணத்தன்மையும் இதன் மூலம் கட்டியெழுப்பப்படும்.

முப்பரிமாண இயல்புகளைக் காட்டுவதற்கான டாவின்சி பயன்படுத்திய சுமோட்டோ (Sfumoto) உத்தி மற்றுமொரு முக்கியமான முறையாகும். இம்முறையின் போது வர்ண மொன்றின் நடுத்தர நிறத்தை மிக நுணுக்கமாக வெளிப்படுத்திக்காட்டும் வர்ண வேறுபாடுகள் காரணமாக, தெளிவற்ற அல்லது மெல்லிய புகார் (hazy effect) போன்ற தன்மையுடன் வர்ணம் பூசப்பட்டுள்ளது. மொனாலிசா ஓவியம், இந்த உத்தியை இனங்காண்பதற்குப் பொருத்தமான ஓர் உதாரணமாகும்.

error: Content is protected !!