கரகம்பிட்டிய சுபோதாராமயா விகாரை ஓவியங்கள்

மேல் மாகாண, கொழும்பு மாவட்டத்தில், தெகிவளைப் பிரதேசத்தில் கரகம்பிட்டிய சுபோதாராமய அமைந்துள்ளது. கரகம் பிட்டிய சுபோதாராமயவுடன் இணைந்த வரலாறு இரண்டு வகைப்பட்டது. அவற்றுள் ஒன்று மன்னர்களுடன் இணைந்த வரலாறாகும். மற்றையது தற்கால விகாரை யுடன் இணைந்து அண்மைக்கால வரலாறாகும். இலங்கையின் வரலாற்று விவரங்களுக்கமைய, இதன் பண்டைய தகவல்கள் முதலாம் பராக்கிரமபாகு மன்னன் காலம் வரை நீண்டு செல்கின் றது. அதன் பின்னர், அது பதினெட்டாம் நூற்றாண்டில் இராசாதி ராஜசிங்கன் ஆட்சி செய்த காலம் வரையில் நீண்டு செல்கின்றது. மேலும், ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன் ஆட்சிக் காலத்துடனும் சுபோதாராமய வுக்கு தொடர்பு உண்டு. கரகம்பிட்டிய சுபோதாராமயவின் தற்போதைய நிர்மாணிப்புக்களின் வரலாறு கி.பி. 1820 வரையில் நீண்டு செல்கின்றது.

கரகம்பிட்டிய சுபோதாராமையில் இரண்டு இடங்களில் சுவரோவியங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று சிலை மனை ஆகும். மற்றையது தர்மசாலை (போதனை மண்டபம்) ஆகும். இந்த ஓவியங்களுள் தென் பிரதேச மரபைச் சேர்ந்த ஓவியங்களில் இரண்டு மோடிகளைத் தெளிவாகக் காண முடிகின்றது.

(1) பிரபல்யமிக்க தென்பிரதேச மரபைச் சேர்ந்த ஓவியங்கள்
(2) நிலைமாறு பண்புகளைக் கொண்ட ஓவியங்கள்

இலங்கையின் பாரம்பரியமான சுவரோவிய மரபினது கலைத்துவப் பண்புகளிலிருந்து பெருமளவுக்கு விலகிச் சென்றுள்ள ஒரு மோடியினது பண்புகளைக் கொண்ட இரண்டாம் மோடியைச் சேர்ந்த ஓவியங்களில் ஐரோப்பிய இயற்கை வாத நிலத்தோற்றக் கலையின் மூலம் பெற்ற செல்வாக்கைக் காணலாம். இதற்கான ஓர் உதாரணமாக சுபோதாராமையின் சிலை மனையில் பிரதட்சண பாதையின் சுவரில் உள்ள உம்மக்க சாதகக் கதையைக் காட்டும் ஓவிய வரிசையைக் குறிப்பிடலாம். இந்த ஓவியங்கள் 1897 காலத்தைச் சேர்ந்தவை.

கரகம்பிட்டிய சுபோதாராமய விகாரையில் பிரபல்யம்மிக்க தென்பிரதேச மரபைச் சேர்ந்த ஓவியங்களை சிலை மனையில் காணலாம். அவை கி.பி. 1850 – 1860 காலத்தைச் சேர்ந்தவையாகும். புத்தர் பெருமானின் வாழ்க்கை நிகழ்வுகளும் சாதகக் கதைகளுமே இந்த ஓவியங்களின் கருப்பொருள்களாக அமைந்துள்ளன. அவற்றுள் சிறப்பான ஓர் ஆக்கமாக நிமி சாதகத்தைக் குறிப்பிடலாம்.

இளவரசர் சித்தரித்தரின் முதல் தியானம்

கரகம்பிட்டிய சுபோதாராமையில் சித்தார்த்த குமாரனின் வாழ்க்கையைக் காட்டும் நிகழ்வுத் தொடர், அதிக அலங்காரங்களையும், அழகிய வர்ணங்களையும் கொண்ட ஒரு ஆக்கத் தொடர் ஆகும். அந்த ஓவியங்களுள் தூண்டுதல்’ எனும் ஓவியத்தின் மூலம் புத்தத்துவம் கிடைப்பதைத் தவிர்க்கவென வந்த மாரனின் புதல்வியர்களான தண்ஹா , ரதீ, ரங்கா ஆகிய மாரமாதுக்களைக் காட்டுகின்றது. மாரனின் புதல்வியர்கள் வாத்தியக் கருவிகளை இசைத்த வண்ணமிருப்பது காட்டப்பட்டுள்ளது.

தூண்டுதல்
சித்தார்த்த குமாரன் பிறப்பு

மாரனின் புதல்வியர் அணிந்துள்ள ஆடையணிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலங்கையின் சமூகப் பண்பாட்டைக் காட்டி நிற்கின்றன. தாழ்நாட்டு ஓவியக் கலையின் ஒரு பொதுப் பண்பாகிய, அதிக அலங்காரங்களைக் கொண்ட தன்மை, இந்த ஓவியப் படைப்பின் ஆடையணிகளில் காட்டப்பட்டுள்ளது. மூன்று பெண் உருவங்களும் முன்னோக்கிய முறையில் காட்டப்பட்டுள்ளன. அவர்களது கைகளால் அபினயங்கள் முன்வைக்கப்படுகின்றன. ‘சித்தார்த்த குமாரன் பிறப்பு’ எனும் ஓவியத்திலும் அவ்வாறான பண்பைக் காணமுடிகின்றது. தாழ்நாட்டு ஓவியக் கலையின் ஒரு பொது இயல்பாகிய அதிக அலங்கரிப்பு, அதிகளவாக விபரங்களைக் காட்டல் ஆகியவற்றுக்கு இது ஒரு நல்ல உதாரணமாகும். இந்த ஓவியங்களில் அடங்கியுள்ள அலரி மரம், நாகலிங்க மரம் ஆகியன இயற்கைத் தன்மையை ஒத்ததாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.

மஹாஜனக ஜாதகம் – விதேஹாவின் ஆட்சி
கதஹரி ஜாதகா – அரண்மனையில் அரசர் பரனாஸ்

புத்தரின் வாழ்க்கைத் தகவல்களைக் காட்டும் ஓவியத் தொடரில், புத்தத்துவத்தைப் பெற முன்னர், ‘மாரனைத் தோற்கடித்தல்’ (இயமனைத் தோற்கடித்தல்) எனும் நிகழ்வைக் காட்டும் ஓவியம் பிரபல்யமானது. மத்திய கண்டிய மரபின்படி உட்கூரையில் ஒரு பெரும் ஆக்கமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள அவ்விடயப்பொருள், தென் பிரதேச மரபின் கீழ் தொடர் ஓவியமாக முன்வைக்கப்பட்டுள்ள மையைக் காண முடிகின்றது. கையில் ஆயுத மேந்திய மாரர்கள், பூமிமாதா ஆகியவை காட்டப்பட்டிருக்கும் விதம் மத்திய கண்டிய மரபிலும் பெரிதும் வேறுபட்டதாகும். இந்த ஓவியத்தில் உயிர் உருவங்களுக்கு நிறந் தீட்டுவதற்காக, மஞ்சள், கறுப்பு, நீலம், சிவப்பு, பச்சை, கபிலம் போன்ற வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்னணிக்காக ஒரு பொது நிறம் பயன்படுத்தப்படவில்லை. இப்பண்பு தென்பிரதேச ஓவிய மரபுக்கு உரியதாகும். (மத்திய கண்டிய மரபைச் சேர்ந்த சுவரோவியங்களின் பின்னணி சிவப்பு நிறமானது) உருவங்களைச் சூழ வரையப்பட்டுள்ள புறவரைகோடுகள் மற்றும் பின்னணிக்காக நீல நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளமை இங்கு காணப்படும் ஒரு சிறப்பியல்பாகும்.

error: Content is protected !!