கத்தளுவ விகாரை ஓவியங்கள்
- தென்மாகாணத்தின் காலி நகருக்கு அண்மித்துள்ள கத்தளுவ விகாரையின் சுவரோவி யங்கள் 19ம் நூற்றாண்டின் இறுதிக் காலப் பகுதியைச் (கி.பி. 1886) சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
- கடொல்கல்லே “மகா சித்தரா” (சிறிய சித்தரா) வும் பொட்ட சித்தராவும் கத்தளுவ விகாரை ஓவியங்கள் வரைந்த கலைஞர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- தாழ்நாட்டுப் பிரதேசத்து சுவரோவியங்கள் மீது ஐரோப்பிய செல்வாக்கும் சமகால சமூகப் பின்னணியின் தாக்கமும் ஏற்பட்ட விதத்தை எடுத்துக் காட்டும் ஓவியங்களாக இவை கருதப்படுகின்றன.
- கத்தளுவ விகாரையின் ஓவியங்களின் தொனிப்பொருளாக அமைந்த விடயங்களைப் பின்வருமாறு காட்டலாம்.
♦ பெளத்த ஜாதகக் கதைகள்
(வெஸ்ஸந்தர , மகாசுத்த சோம், தேமீய , சுள்ள பதும் )
♦ புத்த பெருமான் காலத்தின் சமகால சமூக நிகழ்வுகள்
(மகாதன செல்வந்தரின் கதை, பட்டாசாரா கதை , நந்திய பக்தனின் கதை )
- இப்படைப்புகளுக்கு மேலதிகமாக,
♦ நரகக் காட்சிகள்
♦ இருபத்து நான்கு காட்சி (சூவிசிவி வறணய )
♦ உட்கூரை ஓவியங்கள்
♦ சுவர்க்கத்தின் காட்சிகள்
போன்றவையும் வரையப்பட்டுள்ளன.
மகாதன செல்வந்தரின் கதை – இசையும் களிப்பும்
- கத்தழுவை விகாரைச் சுவரோவியங்களுள் ஒன்றாகும். இந்த ஓவியத்தில் மகாதன செல்வந்தரின் இல்லத்தில் நடைபெற்ற ஆடல், பாடல் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
- கலைஞர்கள் ஐரோப்பிய முறையில் ஆடையணிந்து ஐரோப்பிய இசைக்கருவிகளை இசைப்பது காட்டப்பட்டுள்ளது.
- பின்னணியில் உள்ள கட்டடம் ஐரோப்பிய பண்புகளைக் கொண்டுள்ளது.
- ஆடை அணிகள், இசைக்கருவிகள், கட்டட நிர்மாணங்கள், தளபாடங்கள் என்பன அக்காலக் கலைஞர் கண்ட ஐரோப்பிய பொருட்களுக்கு அமைந்ததாகக் காணப்படுகின்றன.
- தொடர்ச்சியாக கதை கூறும் முறையில் வரையப்பட்ட ஓவியத்தின் ஒரு பகுதி இதில் காட்டப்பட்டுள்ளது.
- தளத்தை முழுவதும் பயன்படுத்தி இவ்வோவியம் வரையப்பட்டுள்ளது.
- கோடுகளையும் தள வடிவங்களையும் பயன்படுத்தி சிக்கலான முறையில் வெளி நிரப்பப்பட்டுள்ளது.
- மஞ்சள், கறுப்பு, வெள்ளை , நீலம், சிவப்பு, பச்சை , கபில நிறம் போன்ற வர்ணங்களையும், அவற்றின் வேறுபாடுகளையும் உபயோகித்து ஓவியங்கள் வர்ணம் தீட்டப்பட்டுள்ளன.
- மஞ்சள், கறுப்பு, கபில நிறம் போன்ற வர்ணங்களை உபயோகித்து பின்னணியை வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
- உருவங்களை சுற்றி கறுப்பு நிறத்தில் கோடுகள் வரையப்பட்டுள்ளன.
- வர்ணங்களை மென்மையான முறையில் உபயோகித்து முப்பரிமாணத் தன்மை வெளிக் காட்டப்பட்டுள்ளது.
- ஒட்டுமொத்த ஓவியத்தில் உயிரோட்டமான தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
- வர்ணங்கள் தட்டையாகவன்றி வர்ணத் தடங்கள் (Patches) கையாளப்பட்டுள்ளது.
சுத்தசோம ஜாதகக் கதை – அரண்மனையில் மாதர்கள்
- கத்தழுவை விகாரைச் சுவரோவியங்களுள் ஒன்றாகும். பிரம்மதத்த அரசனின் அரண்மனைப் பெண்கள் இருவர் அளவளாவும் காட்சி காட்டப்பட்டுள்ளது. ஒரு பெண் அரசிக்கு சாமரை விசிறுவதைக் காணலாம்.
- தொடர்ச்சித்திர முறையில் வரையப்பட்ட சித்திரத்தில் வடிவங்கள் விறைப்புப் பாங்கான தன்மையில் பக்கப்பாடாக வரையப்பட்டுள்ளது.
- அலங்கார மலர்களாலும் இரேகைகளினாலும் பெண்களின் ஆடை அணிகள் அலங்கரிக்கப் பட்டுள்ளன. விசேடமாக ஐரோப்பிய விளக்கு என்பவற்றைக் குறிப்பிடலாம்.
- கட்டட நிர்மாணம், வீட்டுத் தளபாடம் என்பவை ஐரோப்பிய பாணியில் அமைந்ததாகக் காணப்படுகின்றன.
- மஞ்சள், கறுப்பு, வெள்ளை , நீலம், சிவப்பு, பச்சை , கபில நிறம் வர்ணங்களை வர்ண பேதங்களை உபயோகித்து வர்ணம் தீட்டப்பட்டிருக்கிறது.
- உருவங்களைச் சுற்றி கறுப்பு நிறக்கோடுகள் காணப்படுகின்றன. அவை ஓவியத்தின் விரிவான தன்மைகளைக் காட்டியுள்ளன.
- பின்னணியாக கறுப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருத்தல், பின்னணி வெளியை நிரப்புவதற்காக பல்வேறு அலங்கரிப்பு வடிவமைப்புகள் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்த ஒளிப்படத்தின் சிறப்புப் பண்பாகும்.
பயிற்சி வினாக்கள்
கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள வாக்கியங்கள் எழுதுக.
இனங்காண்க : …………………………….
கருப்பொருள் : …………………………….
கலைஞர் : ……………………………………..
ஒழுங்கமைப்பு : ………………………….
நுட்பமுறை : ………………………………..
சிறப்பம்சம் : ……………………………..
வர்ணப்பயன்பாடு : …………………….
இரேகைப்பயன்பாடு : ……………….
இனங்காண்க : …………………………….
கருப்பொருள் : …………………………….
கலைஞர் : ……………………………………..
ஒழுங்கமைப்பு : ………………………….
நுட்பமுறை : ………………………………..
சிறப்பம்சம் : ……………………………..
வர்ணப்பயன்பாடு : …………………….
இரேகைப்பயன்பாடு : ……………….