கத்தலுவை பூர்வாராமைச் சுவரோவியங்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கத்தலுவை பூர் வாராமை தென் மாகாணத்தில் காலி மாவட்டத்தில் கத்தலுவைப் பிரதேசத்தில் அமைந் துள்ளது. 1840 அளவில் அவ்விகாரையில் இருந்த கத்தலுவை குணரத்ன தேரரினால் இவ்விகாரை மனை செய்விக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. ‘ முதன்மையான விகாரை மனையானது கருப்பக் கிரகம், மண்டம் ஆகிய இரண்டு விகாரை அம்சங்களையும் கொண்டிருந்ததாகவும், பின்னர் பிரதட்சண பாதை, துவார மண்டபம் ஆகியன உருவாக்கப்பட்ட கூறப்படுகின்றது. இப்புதிய மாற்றங்கள் செய்யப்பட்டதன் பின்னரே விகாரை ஓவியங்கள் வரையப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

இச்சுவரோவியங்களில் 1884 – 1886 ஆகிய ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே கத்தலுவை சிலைமனை ஓவியங்கள் 19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் (1880) பூர்த்தி செய்யப்பட்டவையென அனுமானிக்கப்படுகின்றது. இச்சிலை மனையில் உள்ள ஓவியங்களுள் பிரதட்சணைப் பாதையின் வெளிச் சுவர்களில் உள்ள ஓவியங்களே மிக முக்கியமானவையாகும். கர்ப்பக்கிரகத்திலும் மண்டபத்திலும் பிரதட்சணைப் பாதையின் உட்புறத்திலும் காணப்படும் ஓவியங்களும் கணிசமான முக்கியத்துவத்தைப் பெறும் படைப்புக்களாகும். இந்த விகாரை ஓவியங்கள் காலிப் பிரதேச ”கடொல்கல்லே” ஓவியப் பரம்பரை யைச் சேர்ந்த ”மகா சித்தரா”, ” பொட்டே சித்தரா” ஆகிய இரண்டு ஓவியர்களால் வரையப் பட்டவையாகக் கருதப்படுகின்றது.

கத்தலுவை பூர்வராமை விகாரை மனை ஓவியங்கள் மூலம் பௌத்த ஜாதகக் கதைகள் ஆறு (6), புத்தர் பெருமானின் வாழ்க்கையுடன் தொடர்புடைய கதைகள், பௌத்த இலக்கியக் கதைகள் ஆகியன காட்டப்பட்டுள்ளன. அத்தோடு, சுவர்க்கலோகம், நரகலோகம் ஆகிய விடயப்பொருள்களும் அடங்கியுள்ளன.

ஜாதக் கதைகள்:
வெஸ்ஸந்தர, கத்தஹாரீ, சுல்ல தம்மபால, தேமிய, மகா சுத்தசோம, கண்டகால, நிமி ஆகிய ஜாதகக் கதைகள் அடங்கியுள்ளன.

புத்தர் பெருமானின் வாழ்க்கையுடன் தொடர்புடைய நிகழ்வுகள்

பௌத்த இலக்கியக் கதைகள்:
நந்தீய உபாசக்க வஸ்துவ, சோரெய்ய சிட்டான, பட்டாச்சாரா வஸ்துவ, மகதன சிட்டான, மசுறுசிட்டான.

கத்தலுவை விகாரை ஓவியங்களின் ஓவியப் பண்புகளைக் கருதும்போது பல மோடிகளை இனங்காண முடிகின்றது. இந்த ஓவியங்கள் வெவ்வேறு கட்டங்களில் வரையப்பட்டிருத்தல் அதற்கான காரணமாகும் எனத் தெரிகின்றது.

தென் பிரதேச பாணியின் முதற்கட்டம்

கத்தலுவை விகாரையில் காணப்படும் எளிய மோடி சார்ந்த ஓவியங்கள், களனி விகாரை ஓவியங்களை ஒத்த தன்மையைக் காட்டி நிற்கின்றன. இந்த ஓவியங்களில் இயற்கைத் தன்மையை மூலாதாரமாகக் கொண்டு உருவங்கள் கட்டியெழுப்பப்பட்டுள்ள பண்புகளையும் காண முடிகின்றது.

இரண்டாவது மோடி – வெளியில் இடைவெளிகள் இழிவான, அதிக அலங்கரிப்புக்களைக் கொண்ட விரிவான தகவல்களை உள்ளடக்கிய முறை

கத்தலுவை விகாரையின் இரண்டாம் கட்ட ஓவியப் பாணியானது இலங்கையின் ஓவியக் கலையின் பெருமளவு விரிவான தகவல்களையும் அதிக அலங்கரிப்புக்களையும் குறைவான இடைவெளியையும் கொண்ட ஒரு பாணியாகும். இவ்வோவியங்களுள், தாழ்நாட்டு ஓவியப் பண்புகளைப் பெருமளவுக்குக் காட்டும் ஓவியங்கள் தொடர்பாகவே இங்கு கவனஞ் செலுத்தப்படுகின்றது. கத்தலுவை விகாரைக்கே உரித்தான பண்புகளைக் காட்டும் ஓவியங்களாக, கத்தலுவை பூர்வாராமை விகாரையின் வலது பக்க வெளிச்சுவரில் காணப்படும் பெருஞ் செல்வந்தன் (மக தன சிட்டுவரயா) கதையைக் காட்டும் ஓவியம் முக்கியமான ஒரு படைப்பாகும். இந்த ஓவியங்களில் மோடிக்கு அமைய, இடைவெளி இழிவாகக் காட்டப்பட்டுள்ளதோடு, அதிக அலங்கரிப்புக்களைக் கொண்ட அதிக விவரங்களைப் கொண்ட (பரொக் பண்புகள்) இயல்புகளைக் காண முடிகின்றது.

பெருஞ் செல்வந்தனின் கதை

பெருஞ் செல்வந்தன் கதையின் விடயப் பொருள் புத்தர் கால பாரதத்தில் வாரணசி நகரத்தில் இசிபத்தனையில் வாழ்ந்த “மகதன” எனும் பெருஞ் செல்வந்தனின் கதையாகும். அக்கதையின் மூலம் கல்வியறிவற்ற பெருஞ் செல்வங்களைப் பெற்றிருந்த செல்வந்தன் ஆடிப் பாடிக் களிக்கும் பழக்கம் காரணமாக, செல்வத்தை இழந்து இறுதியில் ஏழ்மை நிலையை அடையும் விதம் விவரிக்கப்பட்டுள்ளது. ஆடல் பாடலுக்காக அதிக அளவில் செல்வத்தைச் செலவு செய்த தனவந்தனைக் காட்டுவதற்காக சமகால பண்பாட்டு உருவங்கள் இந்த ஓவியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பண்டைய இலக்கியக் கதைகளைச் சித்திரிக்கும்போது சமகால உருவங்களை அதனுடன் தொடர்புபடுத்திச் சமகால சமூகத் திருவிழா போன்று ஆடல் பாடல்களில் ஈடுபட்டிருப்போர் தொடர்கதை கூறல் முறை மூலம் காட்டப்பட்டுள்ளது. கட்டட நிர்மாணப் பகுதிகள் மற்றும் தளவாடங்களுக்காக ஐரோப்பியப் பண்புகள் சேர்க்கப்பட்டுள்ளதோடு, கதையில் வரும் பாத்திரங்களின் ஆடையணிகள் மூலம் மேலைத்தேய ஆண்கள் பெண்களின் இயல்புகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாகப் பெண்களின் தலையணிகள், ஆபரணங்கள், இசைக்கருவிகளில் மேலைத்தேயப் பண்புகள் வெளிக்காட்டப்பட்டுள்ளன.

பெருஞ் செல்வந்தனின் கதை

இந்நிகழ்வுகள் வரையப்பட்டுள்ள விதத்தின் மூலம் வெளியில் இடைவெளி குறைவாகக் காட்டப்பட்டிருத்தல் ஒரு சிறப்பியல்பாகும். அதிக விரிவான தகவல்களை உள்ளடக்கி மனை உருவங்களை வரையும் போது ஒன்றையொன்று மறைக்கும் வகையில் வடிவங்களும் உடல் நிலைகளும் காட்டப்பட்டுள்ளன. அதிக அலங்கரிப்புப் பண்புகளை உள்ளடக்கி, ஓவியத்தின் கட்டடக் கலை வடிவங்களும் கூட, பல்வேறு அலங்கரிப்பு அம்சங்களைக் கொண்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது.

வர்ணப் பயன்பாட்டின்போது மத்திய கண்டிய ஓவியங்களில் காணப்பட்ட வர்ணப் பயன் பாட்டுக்குச் சார்பாக அதிலும் கூடுதலாக வர்ணப் பயன்பாட்டை இந்த ஓவியங்களில் காணலாம். செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட வர்ணங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய தன்மை காரணமாக நியமமாக வரையறைப்பட்ட வர்ணப் பயன்பாட்டிலிருந்து வேறுபட்டுச் செல்லும் தன்மையையும் இந்த ஓவியங்களில் காணலாம். மத்திய கண்டிய ஓவியங்களில் பிரதானமாக சிவப்பு, வெள்ளை , மஞ்சள், கறுப்பு ஆகிய நான்கு வர்ணங்களும் பயன் படுத்தப்பட்டிருந்த போதிலும், தென்பிரதேச மரபைச் சேர்ந்த இந்த ஓவியங்களுக்காக, அவ்வர்ணங்களுக்கு மேலதிகமாக நீலம், பச்சை ஆகிய வர்ணங்களும் பரவலாகப் பயன் படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவ்வர்ணங்களின் வெவ்வேறு பேதங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களையும் காண முடிகின்றது. ஒவ்வோர் உருவத்தைச் சூழவும் திட்டவட்டமான மெல்லிய கருநிறப் புறவரை கோடு பயன்படுத்தப்பட்டுள்ளது. வெண்ணிறமான ஒட்டுமொத்த ஓவியத்தில் மத்திய கண்டிய ஓவியங்களை ஒத்த மனித உருவங்கள் பக்கத் தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளதோடு, அச்சமச்சீர் உருவப்பயன்பாடு குறைவாக உள்ளது. அத்தோடு, மனித உருவங்களின் ஆளடையாளத் தனித்துவம், பாத்திரப் பண்புகள் ஆகியவற்றை வெளிக்கொணரவும் முயற்சி செய்யப்பட்டுள்ளது. அசைவியக்கங்களும் அதிக தகவல்கள் முன்வைக்கப்பட்டிருத்தலும் இந்த ஓவியங்களின் தெள்ளத்தெளிவான பண்புகளாகும். குறிப்பாக ஆடையணிகளும் கட்டடங்களும் அதிக அலங்கரிப்புக்கள் மூலம் அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் மனை உட்புறக் காட்சிகளுக்காகவும் கடுமையான வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மூன்றாவது பாணி – தென்பிரதேச மரபைச் சேரந்த தனித்துவமான பிரபலமான பண்புகளைக் கொண்ட ஓவியங்கள்

கத்தலுவை பூர்வாராமை விகாரை ஓவியங்களுள் தென்பிரதேச மரபைச் சேர்ந்த தனித்துவமான பிரபலமான பண்புகளைக் காட்டும் ஓவியங்களாக சுத்தசோம சாதகக் கதை, சுல்ல தர்மபால சாதகக் கதை, பட்டாச்சாரா கதை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்தவை. கத்தலுவைப் பூர்வாராமை விகாரையின் வடக்குப் புற வெளிச்சுவரில் வரையப்பட்டுள்ள மகா சுத்தசோம சாதகக் கதையில், மாளிகையில் தொங்கும் விளக்குகள், கட்டடக் கலை அம்சங்கள் ஆகியவற்றின் மூலம் ஐரோப்பிய கட்டடக் கலைப் பண்புகளைத் தெளிவாகக் காண முடிகின்றது.

சுத்தசோம சாததக் கதை
அரசமாளிகைப் பெண்டிர்
சுல்ல தர்மபால சாதகக் கதை
அரச குடும்பம்

“மகதன” பெருஞ் செல்வந்தனின் கதையில் வரும் ஓவியங்களின் அளவுக்கு ஒட்டுமொத்த ஓவியம் முழுவதிலும் அலங்கரிப்புக்கள் காணப்படாத போதிலும், தென்பிரதேச ஓவியங்களுக்கென தனித்துவமான பிரதான கதையுடன் நேரடித் தொடர்பு காணப்படாத போதிலும், மலர் அலங்காரக் காட்டுருக்கள் இந்த ஓவியங்களிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக பெண்களின் ஆடையணிகளுக்காக, மரபு ரீதியான அலங்கரிப்பு அம்சங்களைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட நுணுக்கமான அலங்கரிப்புக்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. மாளிகைத் தூண்கள், மின் உபகரணங்களிலும் அதிக அலங்கரிப்புத் தன்மை காணப்படுகின்றது. ஓவியத்தில் உருவங்கள் நிரம்பியுள்ள தன்மை காணப்படுகின்றது. உட்புறக் காட்சிகள் கடுமையான நிறத்திலும், வெளிப்புறக் காட்சிகளின் பின்னணி சிவப்பு நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.

தென்பிரதேச மரபின் சிறப்பான தனித்துவப் பண்பாகிய யதார்த்தவாதப் பண்புகளைக் காட்டும் ஓர் ஓவியமாக பட்டாச்சாரா கதை’ யைக் குறிப்பிடலாம். இயற்கை உலகை உள்ளது உள்ளவாறாகக் காட்டுவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாக மரஞ்செடிகொடிகள் காட்டப்பட்டிருப்பதை இனங்காண முடிகின்றது. பொது நியமங்களையும் இயற்கை உலகையும் அதே வடிவத்தில் காட்டுவதோடு எடுக்கப்பட்ட முயற்சியும் இதற்குத் துணையாக அமைந்துள்ளது. மனித உருவங்கள் தனிக் குணவியல்புகளைக் காட்டும் வகையிலும் இயற்கைத் தன்மையுடனும் காட்டப்பட்டிருத்தலைப் இதனைப் பட்டாச்சாரா பாத்திரத்தில் தெளிவாகக் காண முடிகின்றது.

பட்டாச்சாரா கதை
பட்டாச்சாரா கதை
error: Content is protected !!