கண்டிக் காலத்திற்குரிய தாழ்நிலப் பிரதேசத்து மரபுவழிச் சித்திரங்கள்

 • கண்டிக் காலத்து தாழ்நிலப் பிரதேசத்து சித்திரக் கலைப் பண்புகளைக் கொண்ட சுவரோவியங்களை நாட்டின் மேற்கு, தெற்கு கரையோரப் பிரதேசங்களில் காணலாம்.
 • கி.பி. 16ம் நூற்றாண்டுக்குப் பின்னர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்களின் வருகையின் காரணமாக கண்டிக் காலத்து சித்திரக் கலைப்பாணியில் மாற்றம் ஏற்பட்டு அவை மேற்கத்தேயரின் கலாசாரப் பண்புகளைக் கொண்டதாகக் காணப்பட்டன.
 • 19ம் நூற்றாண்டின் இறுதியில் தாழ்நிலப் பிரதேசங்களில் பிரபல்யமாக பரவலடைந்த இவ்வோவியப்பாணி வெளிநாட்டவர்களின் செல்வாக்கையும் சமூகப் பின்னணியின் தாக்கத்தையும் கொண்டதாகக் காணப்பட்டன.
 • தாழ்நிலப் பிரதேசத்தில் விகாரை ஓவியங்கள் உலர்ந்த சாந்தின் மீது ஓவியங்கள் வரையும் நுட்ப முறையைக் கொண்டு வரையப் பட்டுள்ளன.
 • பிரதானமாக பெளத்த சமய நிகழ்வுகளும் பெளத்த ஜாதகக் கதைகளுமே விடயப் பொருள்களாக உள்ளன.

தாழ்நாட்டுப் பிரதேசத்து விகாரை ஓவியங்களில் காணப்படும் பொதுப் பண்புகள்:

 •  நிரைகளாக வரைந்திருந்தல், தொடர்ச்சியான கதை வெளிப்படுதல், ஒரு பக்கத்துக்கு திரும்பிய உருவங்கள்.
 • உருவங்களை சுற்றி மென்மையான இரேகைகளால் நிறைவைக் காட்டியிருத்தல்.
 • ஒட்டு மொத்த சித்திரத்தினுள் அளவுத் திட்டம் கவனிக்கப்படாமை.
 • தூரதரிசன இயல்புகளையும் முப்பரிமாண இயல்புகளையும் காட்ட முற்பட்டிருத்தல்.
 • பின்னணியை அலங்கரிப்பதற்காக பலவித அலங்கார வடிவங்களை உபயோகித்திருத்தல்.
 • ஆடை அணிகலன்களை அலங்காரமாக, விளக்கபூர்வமாக காட்டியிருத்தல்.
 • ஐரோப்பிய பாணியில் அமைந்த கட்டட நிர்மாணம், தளபாடங்கள், ஆடை அணிகள் காட்டப்பட்டிருத்தல்.
 • மஞ்சள், நீலம், நரை பச்சை, சிவப்பு, கறுப்பு, வெள்ளை போன்ற வர்ணங்களை மெல்லிய , கடும் நிறம் கொண்டதாக உபயோகித்தல், முப்பரிமாண இயல்பு வெளிப்படுத்தல்.
 • பின்னணிக்குப் பொதுவாக சிவப்பு வர்ணத்தை விட சாம்பல், கறுப்பு, கடும் நீலம் போன்ற வர்ணங்களை உபயோகித்திருத்தல்.

தாழ்நாட்டுப் பிரதேசத்து விகாரை ஓவியங்கள் காணப்படும் விகாரைகள்

 1. கத்தளுவ விகாரை ஓவியங்கள் ⇒
 2. கரகம்பிட்டிய சுபோதாராமய விகாரை ஓவியங்கள் ⇒
பயிற்சி வினாக்கள்

1. கண்டி தாழ்நிலப் பிரதேச சித்திரங்கள் காணப்படும் பிரதேசங்கள் எவை?
2. இக்கால ஓவியங்களில் காணத்தக்க பிரதான மாற்றம் யாது?
3. தாழ்நிலப் பிரதேச ஓவியங்கள் வரையப்பட்ட நுட்பமுறை யாது?
4. தாழ்நிலப் பிரதேச சித்திரங்களின் பிரதான கருப்பொருள் யாது?
5. தாழ்நிலப் பிரதேச சித்திரங்கள் காணப்படும் விகாரைகள் இரண்டு தருக.
6. தாழ்நிலப் பிரதேச சித்திரங்களின் பொதுப் பண்புகளைக் குறிப்பிடுக.

error: Content is protected !!