கட்புலக்கலை / காண்பியக்கலை

காண்பியக்கலை – ஓர் அறிமுகம்

”காண்பியக்கலை” என்பதன் எளிமையான சொற்பத அர்த்தம் ”கண்களையும் காணுதலையும் அடிப்படையாகக்கொண்ட கலை என்பதாகும். ஓவியமும் சிற்பமும் ஆரம்பத்திலிருந்தே கட்புலக கலையின் பிரதான கருப்பொருளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. காண்பியக்கலையுடன் தொடர்புடைய மிகப் பண்டைய ஆக்கங்களாக வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் ஆக்கங்களான ஓவியங்களும் சிற்பங்களும் காணப்படுகின்றன. மறுமலர்ச்சிக் காலத்தை அடையும்போது காண்பியக்கலையின் பிரதானமான ஒரு கருப்பொருளாகக் கட்டடக்கலையும் கவனத்திற் கொள்ளப்பட்டது.

பிற்காலத்தில் பிரயோகக் கலையின் (Applied art) கிளைகளும் காண்பியக்கலையின் உப கிளைகளாக வளர்ச்சியடைந்துள்ளன. கைத்தொழில்துறை வடிவமைப்பு (Industrial design), வரைகலை வடிவமைப்பு (Graphic design), நவநாகரிகப் பாணிகள் வடிவமைப்பு (Fashion design), உள்ளக வடிவமைப்பு (Interior design) போன்றவை அதில் அடங்கும். இதற்கமைய காண்பியக்கலை எனும் பதம், நுண் கலைகள் (Fine arts), பிரயோகக்கலைகள் (Applied arts), அலங்காரக் கலைகள் (Decorative art), கைத்திறன் கலைகள் (Craft) ஆகியன அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் பயன்படுத்தப்படுகின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒளிப்படக் கலையும் கட்புலக் கலையின் ஒரு விடயப்பரப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. இத்தொழினுட்ப வெற்றியின் விருத்தி காரணமாகத் தோன்றிய சினிமாக்கலையும் (film making), வீடியோக் கலையும் காண்பிக்கலையின் வலிமைமிக்க இரண்டு உப கிளைகள் ஆகும். சமகாலத்தில் கணினித் தொழினுட்பத்தின் விருத்தி காரணமாக, காண்பியக்கலைகள் துறைானது மற்றமொரு பரந்த துறையாக விரிவடைந்துள்ளது. அதற்கமைய அசைவூட்டம் (Animation), முப்பரிமாண மாதிரியாக்கம் (3D- modeling), வீடியோ விளையாட்டுகக்கள் (Video games), பல்லூடகக்கலை (Multimedia art) என்றவாறாகப் பரந்துபட்ட பரப்புக்கள் காண்பியக்கலைகள்’ என்பதில் அடங்குகின்றன. அவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சில பரப்புகள் மாத்திரம் கீழே தரப்பட்டுள்ளன.

 1. ஓவியம் (Painting)
 2. சிற்ப ம் (Sculpture)
 3. கட்டடக்கலை (Architecture)
 4. அச்சுக்கலை (Print making)
 5.  மட்பாண்டக் கலைகள் (Ceramic)
 6. வரைகலை (கிரபிக்கு) வடிவமைப்பு (Graphic design)
 7. துணிமணி மற்றும் தைத்த ஆடைகள் கலை (Textile & Wearable art)
 8. ஒளிப்படக்கலை (Photography)
 9. தாபனக் கலை (Installation)
 10.  ஆற்றுகைக் கலைகள் (Performance)
 11. பல்லூடகக்கலை (Multimedia art)
 12. சினிமா (Cinema)

வெவ்வேறு விடயப்பரப்புக்களில் பரம்பியுள்ள காண்பியக்கலைப்படைப்பாக்கத் துறையின் வரலாறறையும் நவீனத்துவத்தையும் அறிவதற்காக ஓவியம், சிற்பம், கட்டடக்கலை ஆகய கலைய படைப்புக்கள் மீது மாத்திரம் இங்கு கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது. பகுத்தறிவுச் சிந்தனை, நயத்தல் ஆகியவற்றில் பயிற்சி பெறும் நோக்கில் கீழே தரப்பட்டுள்ள படைப்பாக்கங்களின் கலைத்துவப் பண்புகளை விளங்கிக்கொள்வதற்காக, கட்புலக்கலையின் அடிப்படை அம்சங்களையும் கோட்பாடு களையும் அறிவது அவசியமாகும்.

error: Content is protected !!