ஐரோப்பாவின் வரலாற்றுக்கு முற்பட்ட குகை ஓவியங்கள்
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைக் கற்றாயும்போது பிரதானமாக முன் கற்காலம் (Paleolithic Age), இடைக் கற்காலம் (Mesolithic Age), புதிய கற்காலம் (Neolithic Age) என மூன்று பகுதிகளாகப் பிரித்துக் காட்டலாம். வரலாற்றுக்கு முந்திய படைப்பாக்கங்களுள் பெரும்பாலானவை இக்காலப் பகுதிகளுள் முன் கற்காலத்தையே (Paleolithic Age) சேரும். இம்முன் கற்காலமானது, அதன் சிக்காரந்த தன்மையைக் கற்றாய்தலை இலகுபடுத்தும் நோக்குடன் கீழ் முன் கற்காலம் (Lower Paleolithic), இடை முன் கற்காலம் (Middle Paleolithic) மற்றும் மேல் முன் கற்காலம் (Upper Paleolithic) என் மூன்று பிரிவுகளாக வகுத்துக் காட்டப்பட்டுள்ளது.
முன் கற்காலத்தைச் சேர்ந்த கீழ் மற்றும் இடை முன் கற்காலங்களாகக் கருதப்படும் கி.மு. 2,000,000 தொடக்கம் கி.மு. 40,000 வரையிலான நீண்ட காலப்பகுதியானது மனிதக் கூர்ப்பு (பரிணாமம்) படிப்படியாக நிகழ்ந்த ஒரு காலமாகக் கருதப்படுகின்றது. இக்காலப்பகுதியில் வாழ்ந்த மானிடனின் கலைச் செயற்பாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை . அதன் பின்னர் உள்ள கி.மு. 40,000 தொடக்கம் கி.மு. 10,000 வரையிலான மேல் முன் கற்காலமாகக் கருதப்படும் காலப்பகுதியைச் சேர்ந்தவையான மானிட ஆக்கங்கள் உலகெங்கும் பரவலாகக் கண்டறியப்பட்டுள்ளன.
வரலாற்றுக்கு முந்திய கலைச் செயற்பாடுகள் இடம்பெற்ற மேல் முன் கற்காலம் பற்றிக் கற்றாய்வதை மேலும் இலகுபடுத்துவதற்காக அது, ஒரிக்னேசியன் (Aurignacian), கிரவெட்டேசன் (Gravettian), சொலுற்றியன் (Solutrean), மக்டலீனியன் (Magdalenian) என்று நான்கு காலப்பகுதிகளாக வகுத்துக்காட்டப்பட்டுள்ளது.
1. முன் கற்காலம் (Paleolithic Age 2,000,000-10,000 BCE)
1.1 கீழ் முன் கற்காலம் (Lower Paleolithic 2,000,000 -100,000 BCE)
1.2 இடை முன் கற்காலம் (Middle Paleolithic 100,000 -40,000 BCE)
1.3 மேல் முன் கற்காலம் (Upper Paleolithic 40,000 -10,000 BCE)
1.3.1 ஒரிக்னேசியன் (Aurignacian 34,000 – 28,000 BCE)
1.3.2 கிரவெட்டேசன் (Gravettian 28,000 – 22,000 BCE)
1.3.3 சொலுற்றியன் (Solutrean 22,000 – 18,000 BCE)
1.3.4 மக்ட லீனியன் (Magdalenian 18,000-10,000 BCE)
2. இடைக் கற்காலம் Mesolithic (10,000 -8000 BCE)
3. புதிய கற்காலம் Neolithic (8000 – 2000 BCE)
மேற்படி முன் கற்காலமாகக் கருதப்படும் காலப்பகுதியைச் சேர்ந்த வரலாற்றுக்கு முந்திய ஓவியங்களும் சிற்பங்களும் உலகில் மானிடக்கலை வரலாற்றின் முதன் முதலான கலைப் படைப்புக்களாகக் கருதப்படுகின்றன. அவ்வாறான படைப்புக்கள் ஐரோப்பாவின் பல்வேறு பிரதேசங்களில் காணப்படுகின்றன. அவற்றுள் பிரான்சின் லாஸ்கோ (Lascaux), பொன்ட்-டீ-கோமே (Font-de-Gaume). சோவேட் கேவ் (Chauvet Cave), ஸ்பெயின் நாட்டின் அல்டமீரா (Alttamira) ஆகிய குகைகளில் காணப்படும் ஓவியங்கள் ஐரோப்பாவின் வரலாற்றுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த சிறப்பான ஓவியப் படைப்புக்களாகக் கருதப்படுகின்றன.
விடயப் பொருள்
ஐரோப்பாவில் வரலாற்றுக்கு முந்திய குகை ஓவியங்களுக்காகப் பரவலாகப் பயன்பட்டுள்ள கருப் பொருள் விலங்கு உருவங்களாகும். அத்தோடு மனிட உருவங்களும் இனங்காணப்படாத பல்வேறு குறியீட்டு உருவங்களும் அவற்றில் உள்ளன. குகைகளின் உட்புறச் சுவர்களில் அதிக அளவில் விலங்கு உருவங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த விலங்குருவங்கள் குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் மிகப் பிரபல்யமான கருத்து, அம்மானிடர்களில் வாழ்க்கைத் தொழிலுடன் தொடர்புடைய உண்மையான அனுபவங்கள் இந்த ஓவியங்களாகக் காட்டப்பட்டுள்ளன என்பதாகும். அவர்கள், வேட்டையாடும் வேளைகளில் தாம் பெற்ற அனுபவங்களை ஏனையோருக்கு வெளிப்படுத்துவதற்கான ஓர் ஊடகமாக அல்லது நம்பிக்கைகள் சார்ந்ததாக ஓவியம் வரைதலை பயன்படுத்தியிருக்கலாம் என்பது கலை வரலாற்றாசியர்களின் கருத்தாகும். அவ்வாறு விலங்கு உருவங்கள் பெருமளவில் வரையப்பட்டிருத்தலானது எதிர்காலத்தில் வேட்டையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் எனும் நம்பிக்கையைக் காட்டுவதாகவும் கருதப்படுகின்றது. குகையினுள் வாழ்ந்தோரில் ஒரு பகுதியினர் வேட்டையாடுவதற்காக வெளியே சென்ற பின்னர் எஞ்சியிருப்போர் ஆயதங்கள் செய்வதிலும் ஓவியங்கள் வரைவதிலும் ஈடுபட்டிருப்பர் எனக் கருதப்படுகின்றது.
மாதிரி (Form)
முன் கற்கால சித்திரங்களின் மாதிரி பெருமளவுக்குச் சமமானது. குகையினுள் பிரவேசிப்பதற்கான சிறிய வாயிலைக் கொண்டதாகவும் உள்ளே பரம்பிய குகைத் தொகுதிகளைக் கொண்டதாகவும் இக்குகைகள் இயற்கையாகவே அமைவு பெற்றுள்ளன. அவ்வாறான ஒரு குகை, “குகைத் தொகுதி” எனப்படும். நீள, அகல, உயரத்தில் பெரியவையான இக்குகைகளின் உட்புறச் சுவர்களிலும் உட்கூரையிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
நுட்பமுறை
வரலாற்றுக்கு முற்பட்ட ஓவியங்கள் நேரடியாக, வெறும் பாறைச் சுவர்களின் மீதே வரைப்பட்டுள்ளன. அவர்கள் வர்ணப்பூச்சுக்கான படையைப் (Paint receiving layer) பயன்படுத்தவில் ஐரோப்பாவில் வரலாற்றுக்கு முற்பட்டகால குகை ஓவியங்களை வரைவதற்காக மூன்று நுட்பமுறைள் கையாளப்பட்டுள்ளன. அவற்றுள் வரையும் நுட்பமுறையையே பெருமளவுக்குக் காணமுடிகின்றது. வரைதல் முறைகள் இரண்டு உள்ளன. அதற்கமையக் கோட்டுச் சித்ரதிரங்களும் (Line drawing) வர்ண ஓவியங்களுமே (Painting) அவையாகும். அவற்றோடு கற்சுவரைக் கூரிய ஆயுதங்களால் கீறி (Engraving) ஆக்கிய உருவங்களும் பொதுவாக சகல குகைகளிலும் பெருமளவில் காணப்படுகின்றன. இக்குகைகளில் காணப்படும் மற்றுமொரு விசேடமான ஆக்கம் அச்சுப் பதித்த கை, கால் அடையாகளங்கள் (Hand and Foot prints) ஆகும்.
ஒட்டுமொத்தமாக, வரலாற்றுக்கு முற்பட்ட ஓவியங்களுக்காக வரையறுக்கப்பட்ட சில வர்ணங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள், சிவப்பு, கறுப்பு, கபிலம், ஊதா ஆகிய நிறங்களைத் தெள்ளத் தெளிவாகக் காணமுடிகின்றது. இவ் வர்ணங்கள் யாவும், மண், களி, செந்நிறக் கற்கள், மிருகங்களின் இரத்தம் போன்ற இயற்கையான பொருள்களைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பாவின் வரலாற்றுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த சிறப்பான ஓவியப் படைப்புக்கள் காணப்படும் முக்கிய இடங்கள்