ஏ.சீ.ஜீ.எஸ். அமரசேகர (1883 – 1983)

ஏ.சீ.ஜீ.எஸ். அமரசேகர, கி.பி. 1883 இல் தென்மாகாணத்தைச் சேர்ந்த தொடந்துவை எனும் கிராமத்தில் பிறந்தார். அவரது முழுப்பெயர், ஏப்ரஹாம் கிரிஸ்டோஃபர் கிரகரி சூரிய அரச்சி அமரசேகர என்பதாகும். இவர், பிரித்தானிய ஆட்சியினரின் கலைச் சங்கத்தின் உறுப்பினராவர். அச்சங்கத்தின் செயலாளராகவும் உப தலைவராகவும் செயற்பட்ட அவர் பிற்காலத்தில் அதன் முதலாவது சுதேச தலைவராகவும் செயற்பட்டார்.

ஏ.சீ.ஜீ.எஸ். அமரசேக்கர , சித்திரக்கலை பயிலுவதற்காக, இலங்கை அற்லியர் கலாநிலையத்தில் சேர்ந்து, பிரித்தானிய அக்கடமிக் கலையின் வரைதல் தொடர்பான நம்பிக்கையாகக் காணப்பட்ட அகடமிக் யதார்த்தவாத (Academic Realism) முறையை நன்றே பயின்றார். இயற்கையைச் சிறப்பாகப் போலச் செய்தல், நிறச் சேர்மானத்தின்போது நிறங்களின் வேறுபாட்டை தெளிவாகக் காட்டாமை, தூரதரிசம், ஆழம் போன்ற இயல்புகளைக் காட்டுதல் அகடமிக் யதார்த்தவாத முறையியலுக்கு மேலதிகமாக, அவர், கிரேக்கக் கலையின் இலட்சியமான மனித உடலை வரைதல் மற்றும் சிற்பம் வடிக்கும் முறையையும் அவர் ஏற்றுக்கொண்டார். அவர் எண்ணெய் வர்ணம், நீர் வர்ணம் ஆகிய இரண்டு ஊடகங்களிலும் வர்ணம் தீட்டுவதில் சிறப்புப் பெற்றவர் ஆவார். 

ஏ.சீ.ஜீ.எஸ். அமரசேகர ஒரு ஓவியர் மாத்திரமன்றி செல்வாக்குச் செலுத்தும் தன்மைகெண்ட ஒரு சித்திர ஆசிரியருமாவார். அவர் ஓர் ஆசிரியர் என்ற வகையில் பிரித்தானிய அக்கடமிக் கலையில் வரைதல் தொடர்பான நம்பிக்கையாகக் காணப்பட்ட , அக்கடமிக் யதார்த்தவாத முறையின்பால் தனது மாணவரை ஈர்ந்தார். ஜீ.எஸ். பெர்னாந்து, ஜஸ்டின் தரணியகல போன்ற இலங்கையின் நவீன சித்திரக் கலைஞர்கள் அமரசேக்கவிடம் சித்திரக்கலை பயினறோராவர். சித்திரக்கலையின் மேம்பாட்டுக்காக அவர் சித்திரக் கலைப் பாடசாலையொன்றினையும் நடத்திச் சென்றார். “அமரசேகர சித்திரக் கலைப் பாடசாலை” என அமைக்கப்பட்ட அப்பாடசாலையின் ஆரம்ப காலப் பெயர், லங்கா அற்லியர் கலைக்கழகம் (Lanka Artlier Academy) என்பதாகும். கலைஞர் அமரசேகர அவர்களும் அப்பாடசாலையின் பழைய மாணவர்களுள் ஒருவராவர்.

தெற்காசிய மக்கள் வாழ்க்கையோடிணைந்த நிகழ்வுகளும் மெய்யுருக்களுமே (Portrait) அவரது பிரதான ஓவியக் கலைத் தலைப்புக்களாயின. அவரது ஓவியங்களுள் “பேயோட்டியின் மகள், ”தச்சனின் வீடு” போன்றவை தெற்காசிய மக்கள் வாழ்க்கையோடிணைந்த கருப்பொருள்களுள் முதன்மையானவையாகும். அவர் வரைந்த மெய்யுருவங்களுள் எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்க, ஆனந்த சமரக்கோன், திஸ்ஸ றணசிங்ஹ, குணபால மலலசேக்கர, சிரிமாவோ பண்டார நாயக்க, டீ.எஸ். சேனாநாயக்க போன்ற பிரமுகர்களின் உருவப்படங்கள் முதன்மையானவை. – இவை தவிர நிலத்தோற்றக் கருப்பொருளைக் கொண்ட ஓவியங்களையும் அமரசேக்கர வரைந்துள்ளார்.

ஆனந்த சமரகோன்
புலர்ஸ் வீதி
புலர்ஸ் வீதி
ஏ.சீ.ஜீ.எஸ். அமரசேகர கலைஞரின் கலைப் படைப்புக்களில் காணப்படும் பண்புகள் 
  • வெளி மீது நேர்த்தியான ஒழுங்கு திரட்டுகை 
  • தூரநோக்கு விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருத்தல். 
  • ஒளியும் இருளும் மற்றும் முப்பரிமாண இயல்புகள் காட்டப்பட்டிருத்தல். 
  •  பிரித்தானிய அகடமிக் யதாரத்தவாத முறையியல்கள் பயன்படுத்தப்பட்டிருத்தல்.

பேயோட்டியின் மகள்

இலங்கையின் பாரம்பரியமான மக்கள் வாழ்க்கையில் ஓர் அம்சமாகிய சாந்திக் கிரியைகளோடிணைந்த ஒரு படைப்பாக, பேயோட்டியின் மகள் எனும் எண்ணெய் வர்ண ஓவியத்தைக் குறிப்பிடலாம் இவ்வோவியத்தில் வர்ணங்கள், கோடுகள், தள வடிவங்கள், ஒளியும் – இருளும் பேன்ற அம்சங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்தச் சித்திரிப்பு, உச்ச இயற்பண்புவாதமாகப் (அகடமிக் யதார்த்தவாத) பிரயோகிக்கப்பட்டுள்ளது.

”பேயோட்டியின் மகள்” எனும் இவ்வோவியத்தின் உத்திமுறையானது, பிரித்தானிய அக்கடமிக் கலையின் வரைதல் தொடர்பான முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இச்சித்திரத்தில் தூரதரிசனம், முற்குறுக்கம், வர்ணங்களின் இடைச்சாயல்களைப் பயன்படுத்துவதன் மூலம்  தடிப்பையும்   முப்பரிமாணத் தன்மையையும் கட்டியெழுப்புதல், இயற்கையைச் சிறப்பாகப் போலச் செய்தல் போன்ற பண்புகள் காத்திரமாகக் காணப்படுகின்றன. அப்பண்புகளைப் பிரித்தானிய அகடமிக் கலையின் வரைதல் தொடர்பான முறையில் அடங்குபவையாகக் குறிப்பிடலாம்.

வீடொன்றினுள் பேயோட்டிக்குரிய ஆடையணிகளை அணிந்த நிலையில் இருக்கும் ஒரு யவதி தமது எதிரே உள்ள மூலமுதல் எதுவென்று தெரியாத  தீச்சுவாலை கண்டு பயப்படும் நிலையை எடுத்துக்காட்டுவதாக இச்சித்திரம் அமைந்துள்ளது. அத்தோடு ‘கரா’ பேய் வேடமுகம், ”கோலம்” வேடமுகம், உடுக்கு. தாழ்ப்பாள் இட்ட கதவு, பேயோட்டி மகளின் உடலின் அளவைவிடப் பெரிய அளவான அவளது நிழல் போன்றவையும் இவ்வோவியத்தில் அடங்கியுள்ளன.

இவ்வோவியத்தின் ஒட்டுமொத்த வெளி, தனி நிறத்தாலானது.   அத்தனி நிறை வெளியில் பேயோட்டியின் மகளும் ‘கரா’ பேய் வேடமுகமும் தீச்சுவாலையும் முதன்மையாகத் தெள்ளத் தெளிவாக அமைந்துள்ளன. இந்த மூன்று உருவங்களுக்கும் இடையே காணப்படும் முக்கோணத் தொடர்பானது இச்சித்திரத்தின் உயிரோட்டத்துக்கும் அர்த்தத்திற்கும் அடிப்படையானது. மேலும் அவ்வுருவங்களின் அமைவானது நிழலினாலும், ‘கோலம்’ வேடமுகத்தினாலும் மேலும் அர்த்தபுஷ்டியானதாக்கப்படுகின்றது. திகில், பீதி, வியத்தகு தன்மை ஆகியவற்றைச் சேர்த்து வரையப்பட்டுள்ளன. இச்சித்திரம் தெற்காசிய பாரம்பரியமான மக்கள் வாழக்கையைக் காட்டுவதோடு அது எதிர்காலத்துடன் கொண்டுள்ள வேறுபாடுகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.

போயோட்டியின் மகள் எனும் சித்திரம் செந்நெறி (Classical) வர்ணத் தொடரை உள்ளடக்கி ஆக்கப்பட்டுள்ளது. தனிவர்ணம் (Monochrome) இச்சித்திரம் முழுவதில் பரவியுள்ளது. தனி வர்ணப் பிண்ணனி மீது மூலவர்ணங்களான நீலமும் சிவப்பும் மஞ்சளும் தெள்ளத் தெளிவாகத் தென்படுமாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது துணைவர்ணப் பின்னணி மீது மூல வர்ணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்ப வர்ணத்தின் மீது வெப்பவர்ணமும் வெப்பவர்ணத்தின் மீது குளிர்வர்ணமும் எதிர்ப்படச் செய்யப்பட்டுள்ளது.

தச்சனின் வீடு (தொழிலின்மை )

முதலியார் ஏ.சீ.ஜீ.எஸ். அமரசேக்கர அவர்கள் தெழிலின்மை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஓவியம் ‘தச்சனின் வீடு’ எனும் பெயரிலேயே பெரிதும் பிரபல்யமடைந்துள்ளது. கொழும்பு தேசிய கலாபவனத்தில் நிரந்தரமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம்   கன்வஸ் மீது  எண்ணை  வர்ணத்தினால் தீட்டப்பட்டுள்ளது. தச்சன் வீட்டு வறுமை நிலையை வெளிப்படுத்திக்காட்டுவதற்காக இந்த ஓவியத்தில் மனித உருவங்களும் வர்ணங்களும் மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளன.

இயற்கைவாத, யதார்த்தவாத பாணிகளுக்கமைய மனித உருவத்தின் அழகும் உள்ளார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடும் அக்கலைப்படைப்பில் நன்கு வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. ஆக்க வெளியின் மீது ஆழத்தைக் காட்டுவதன் மூலம் தூரநோக்குப் பண்புகள் வெளிக்காட்டப்பட்டுள்ளன. அதாவது இருபரிமாண வெளி மீது முற்பகுதி, நடுப்பகுதி, பிற்பகுதி ஆகிய மூன்று தளங்களில் ஓவியம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தச்சனின் வீடு எனும்” ஓவியம், செந்நெறி வர்ணத் தொகுதியைக் கொண்டது. செந்நெறி வர்ணம் என்பது, தனிவர்ணத் தன்மை (monochrom) ஆகும். யன்னலின் ஊடாக வீட்டினுள் புகும் சூரிய ஒளி இயற்கைத்தன்மை மிக்கதாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. யன்னலின் ஊடாகக் காட்டப்படும் ஒளியின்  தன்மை மூலம் ஒட்டுமொத்த ஆக்கத்தினை பயன்படுத்தப்பட்டுள்ள வர்ணங்கள், இருள் ஒளித்தன்மை (Chiaroscuro) கோட்பாட்டின்படி முப்பரிமாண இயல்புகளுடன் காட்டப்பட்டுள்ளன.

error: Content is protected !!