எஸ்.பீ. சார்ள்ஸ்

  • 1916 மாத்தறை வெலிகமவில் பிறந்த எஸ்.பீ. சார்ள்ஸ் கொக்மாதுவே நாணயக்கார எனும் கலைஞனின் கீழ் சித்திரக் கலையை பயின்று அது தொடர்பான அறிவை வளர்த்துக்கொண்டார்.
  • பாரம்பரிய பௌத்த ஓவியங்களை பிரதி பண்ணும் பணிக்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் பெருமளவு ஒத்துழைப்பு வழங்கிய கலைஞராவார்.
  • எஸ்.பீ. சார்ள்ஸ் அவர்கள் 1944 இல் கொழும்பு தொழினுட்பக் கல்லூரியின் சித்திரக் கலைப்பிரிவில் ஜே.டீ.ஏ. பெரேராவிடம் சித்திரக்கலையைப் பயின்றார்.
  • இலங்கை அரசாங்கத்தின் தேசிய கொடியினதும் பாராளுமன்றத்தின் குறியீடான செங்கோலினதும் நிர்மாணிப்புகளுக்காக அவர் வழங்கிய ஒத்துழைப்பு மிகவும் சிறந்தது.
தேசிய கொடி
  • தற்பொழுது பாவனையிலுள்ள தேசிய கொடி 1949 இல் நிர்மாணிக்கப்பட்டது.
  • இலங்கையின் தனித்துவத்தையும் அபிமானத்தையும் பிரதிபலிக்கும் வகையில் தேசிய குறியீடுகளுடன் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொடியின் வர்ணங்களும் குறியீடுகளும் உணர்ந்தும் பொருள்

  • சிங்கம் வாளேந்திய சிங்கம் – மகிமை, மேன்மை
  • வாள் – இறையாண்மை
  • நான்கு அரச இலைகள் – நான்கு வித நற்பண்புகள் (அன்பு, கருணை, அனுதாபம், சமத்துவம்)
  • செம்மஞ்சள் – தமிழ் இனம்
  • பச்சை – முஸ்லிம் இனம்
  • சிவப்பு – சிங்கள இனம்
செங்கோல்
  • செங்கோல் பாராளுமன்றத்தில் சபாநாயகருடைய அதிகார பலத்தைக் குறிக்கிறது.
  • அத்துடன் அது முழு மந்திரி சபையின் அதிகார பலத்தையும் குறிக்கிறது.
  • பாராளுமன்றத்தில் கூட்டமொன்று ஆரம்பிக்கும்போது செங்கோலை ஏந்திய படைக்கள சேவகரை (ஆயஉந-டிநயசநச) தொடர்ந்து சபாநாயகர் சபைக்குள் பிரவேசிப்பார்.
  • பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு ஏற்ப 1949 இல் செங்கோல் இந்நாட்டு பாராளுமன்றத்திற்கு அறிமுகப்படுத்தப் பட்டது.
  • இச் செங்கோலை வடிவமைத்த பெருமை எஸ்.பீ. சார்ள்ஸ் அவர்களைச் சார்ந்ததாகும்.
  • 1947 இல் எஸ்.பீ. சார்ள்ஸ் அவர்கள் வரைந்த செங்கோலின் திட்டமைப்புக்கு ஏற்ப பிரித்தானிய அரசர்களின் ஆபரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று இதை நிர்மாணித்தது
  • செங்கோலை வடிவமைக்கும் பொழுது தேசிய தனித்துவப் பண்புகள் நன்றாகப் புலப்படும் விதத்தில் பாரம்பரிய அலங்கார வேலைப்பாடுகளும், கட்டமைப்புகளும் உபயோகப்படுத்தப்பட்டன.
  • 122உஅ நீளமுடைய செங்கோலை நிர்மாணிக்க தங்கம், வெள்ளி, இரத்தினக்கற்கள் பயன்படுத்தியதுடன் கைப்பிடிக்கு கருங்காலி மரப்பலகை பயன்படுத்தப்படுத்தப்பட்டது.
  • கருங்காலி மரப்பிடியின் மத்தியில் பினர மலர், (பலாப்பெத்தி) தாமரை இதழ்களினாலான அலங்கார வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.
  • கருங்காலி பிடிக்கு மேற்பகுதி பொலநறுவை மரபுக்குரிய தங்கம், வெள்ளியாலான தூணின் உச்சி காணப்படுகின்றது.
  • அதன் முன்பகுதியில் மாணிக்கக் கற்கள் பதித்த முத்துவலை (முத்துதெல்) அலங்கார வேலைப்பாடு உள்ளது.
  • தூணின் உச்சியில் கண்டி சம்பிரதாயத்துக்கு ஏற்ற வெள்ளியினால் அமைக்கப்பட்ட தாமரை மலர் வேலைப்பாடுகளைக் கொண்ட போதிகை அமைப்பு காணப்படுகிறது. (இது ஹிந்தகல விகாரையின் போதிகை அமைப்பின் தழுவலைக் கொண்டது.)
  • போதிகைக்கு அடுத்ததாக வெள்ளியால் அமைக்கப்பட்ட சதுரமுகி காணப்படுகிறது. நிலைத்தன்மை, நீதி, செழுமை என்பவற்றை அடையாளப்படுத்தி சூரியன் சந்திரனும், தர்ம சக்கரம், நிறைகுடம் என்பவையும் அதில் செதுக்கப்பட்டுள்ளன.
  • சதுரமுகியின் மீது வெள்ளியால் அமைக்கப்பட்ட 15 உஅ விட்டமுடைய செங்கோலின் முக்கிய பகுதியான கோளம் காணப்படுகிறது. கோள வடிவத்தின் மீது வாளேந்திய சிங்கத்தின் உருவம் சிறு புடைப்பு முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • கோளத்தின் மேல் பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் வெள்ளி, தங்கம் போன்றவற்றினால் நிர்மாணிக்கப்பட்ட தாமரை மலரிதழ்கள் (பலாப்பெத்தி) கோலம் காணப்படுகிறது.
  • அதற்கு மேல் பகுதியில் எட்டு மூலைகளைக்கொண்ட பளிங்கு உள்ளது. அது சைத்தியத்தின் கலசக்கொத்து உச்சியிலுள்ள சூடாமாணிக்கத்தின் வடிவத்தை ஒத்துள்ளது. அது தூய்மை, மேன்மை என்பவற்றை அடையாளப்படுத்துகிறது.
  • இவ்வாறான அமைப்புடைய செங்கோல் சிங்கள மன்னர் ஆட்சிக்காலத்தில் உபயோகித்த ய~;டிய, சோலுலீய, லீலாதண்டய எனும் பெயர்களால் குறிப்பிட்ட நிர்மாணிப்புகளுக்கு ஒத்த தன்மையைக் கொண்டிருக்கிறது.

பயிற்சி வினாக்கள்

1. இலங்கையின் தேசியக்கொடி மற்றும் செங்கோல் போன்றவற்றின் நிர்மாணிப்பிற்கு பங்களிப்பு வழங்கிய சித்திரக் கலைஞர் யார?
2. இலங்கையின் தேசியக் கொடியில் காணப்படும் நிறங்களும் குறியீடுகளும் உணர்த்தும் பொருள் யாது?
3. பாராளுமன்றத்தில் சபாநாயகருடைய அதிகார பலத்தைக் குறிப்பது எது?
4. செங்கோலில் பயன்படுத்தப்பட்டுள்ள ஊடகங்கள் எவை?
5. செங்கோலில் காணப்படும் அலங்கார உருக்கள் எவை?

error: Content is protected !!