எம்.சார்ளிஸ்

  • எம்.சார்ளிஸ் அல்லது மாலிகாவகே சார்ளிஸ் என்னும் கலைஞர் இலங்கையின் சித்திரக் கலையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய யுக புருஷராகக் கருதப்படுகிறார்.
  • இவர் 1880 ஆம் ஆண்டு யூன் மாதம் 25ஆம் திகதி அம்பலாங்கொடையில் பிறந்தார். இவர் பாளி, சிங்களம், சமஸ்கிருதம் எனும் மொழிகளைக் கசடறக் கற்றார். கொழும்பு மாலிகாகந்த வித்யோதயப் பிரிவேனாவில் உயர் கல்வியைக் கற்றார்.
  • அக்காலத்தில் புகழ்பெற்ற ஓவியரான ரிச்சட் ஷென்றிக்கஸ் என்பவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
  • அத்துடன் கடொல்கல்கே மகா சித்தர குருன்னான் சேயின் கீழ் விகாரை ஓவியங்கள் வரைய ஆரம்பித்து அதனைத் தொடர்ந்தார்.
  • இவர் வரைந்த தனித்துவமான முதல் ஓவியம் கொழும்பு மாலிகாகந்த விகாரையில் அமைந்துள்ளது.
  • காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கை வாழ் மக்கள் பலர் மேற்கத்ததேய பழக்க வழக்கங்களைப் பின்பற்றியதுடன் விக்ரோரியா மகாராணியின் அரச குடும்பத்தினரின் படங்களையும், சர்வதேச நிலக்காட்சிகளையும் தமது வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கப் பயன்படுத்தினர். இக்கால கட்டத்தில் எம்.சார்ளிஸ் என்னும் ஓவியர் பௌத்த ஓவியங்களை வரைந்து ஜேர்மனிக்கு அனுப்பி அவற்றை லிதோ அச்சு முறையில் அச்சிட்டு சிங்கள பௌத்த மக்களுக்கு விநியோகித்தார்.
  • கி.பி. 1923 ஆம் ஆண்டளவில் லிதோ அச்சு முறையில் கிட்டத்தட்ட 36 ஓவியங்கள் அளவில் அச்சிட்டு வெளியிட்டார். அவற்றுள் சில :
    • சித்தார்த்தரின் பிறப்பு.
    • தாமரைப் பூவில் நடந்து வருதல்.
    • கல்வி கற்றல்.
    • சித்தார்த்தரின் திருமணம்.
    • சித்தார்த்தரும் பிரஜாபதி கோதமியும்.
    • துறவறம் பூணுதல்.
    • சீவலி பிக்கு.
  • இவரது பௌத்த ஓவியங்கள்
    1. விகாரை ஓவியம்
    2. லிதோ முறையில் அச்சிடப்பட்ட ஓவியங்கள்
      என இரு வகைகளைக் கொண்டுள்ளன.
  • எம்.சார்ளிஸ் கலைஞர் தனது ஓவியங்களை மேற்கத்தேயக் கலை மரபின் தாக்கத்தைக் கொண்டு அவற்றுக்கு ஒத்ததாக வரைந்துள்ளார்.
  • சித்திரக் கலையைப் போன்றே இவர் சிலை செய்வதிலும் வல்லவராகக் காணப்பட்டார். மாத்தறை வெஹெறகேனயில் உள்ள பாரிய புத்தர் சிலை இவரது திறமையை எடுத்துக் காட்டுகிறது.

எம்.சார்ளிஸ் வரைந்த ஓவியங்கள் காணப்படும் பௌத்த விகாரைகள்

  1. கொழும்பு மாலிகாகந்த விகாரை
  2. கரகம்பிட்டிய சுபோதாராமய
  3. மத்துகம பாந்திய சிறி மங்கலாராமய
  4. பொத்து பிட்டிய பூஜாராமய

எம்.சார்ளிஸ் ஓவியக் கலைஞரின் ஓவியங்களிற் காணப்படும் கலை அம்சங்கள்

  • சரியான ஒழுங்கிணைப்பு
  • தூரதரிசனத் தன்மை
  • ஒளி நிழல் காட்டல்
  • நிறப் பிரயோகம்
  • அலங்காரத் தன்மை
  • ஐரோப்பியக் கலை மரபின் ஒத்த தன்மை
  • பௌத்த சமயஞ்சார் ஓவியக் கலைக்கு பெரும் பணியாற்றிய இவர் 1955ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி இறைபதமடைந்தார்.

இளவரசன் சித்தார்த்தனும் தாயாரும் (லிதோ அச்சுப்படம்)

  • மேலைத்தேய மற்றும் கீழைத்தேய இயற்கைவாத ஓவியப்பாணியைத் தழுவி இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
  • மறுமலர்ச்சிக்கால ஓவியக் கலைஞர்கள் வரைந்த கன்னி மரியாளையும் யேசு பாலகனையும் காட்டும் மடோனா ஓவியங்களின் தாக்கத்தை இதில் காணலாம்.
  • ஓவியத்திலுள்ள மனித உருவங்களில் அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ள ஆடையணிகள் கீழைத்தேய ஓவியப்பாணியின் தாக்கத்தைக் காட்டுகின்றன. குறிப்பாக இந்திய மரபைச் சேர்ந்த ஆடையணிகளின் இயல்புகள் தெளிவாகத் தென்படுகின்றன.
  • ஓவியத்தில் பலவர்ணங்களைக் கொண்டு முப்பரிமாண இயல்புகள் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
  • சித்தார்த்தகுமாரனும் தாயாரும் மாளிகையினுள் தனிமையாக இருக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
  • ஒட்டுமொத்த ஓவியத்தின் முன்பகுதியும், பின்பகுதியும் மாத்திரம் காட்டப்பட்டுள்ளன. மாளிகைச் சாளரத்தின் மூலம் காட்சியளிக்கும் பின்னணி தூரக்காட்சி இயல்புகளைக் கொண்ட நிலத்தோற்றக் காட்சியாகக் காட்டப்பட்டுள்ளது.

தாமரைப் மலர் மீது நடந்து வருதல் (லிதோ அச்சுப்படம்)

  • ஓவிய வெளியின் ஆழம் வெளிப்படுத்துமாறு தூரக்காட்சி இயல்புகளை உள்ளடக்கி, இயற்கைவாதப் பாணியில் இந்த ஓவியம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
  • முன்பகுதி, இடைப்பகுதி, பின்பகுதி என்றவாறாக தளத்தின் மீது தூரக்காட்சி இயல்புகளின்படி உருவங்களும் பல நிகழ்வுகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
  • ஓவியத்தின் பின்பகுதி வெளியானது தூரக் காட்சி இயல்புகளுடன் நிலத்தோற்றக் காட்சிகளைக் கொண்டுள்ளது.
  • முப்பரிமாண இயல்புகள் வெளிப்படுமாறு வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பயிற்சி வினாக்கள்

1. M. சார்லிஸ் வரைந்த ஓவியங்களின் இரண்டு வகைகளும் எவை?
2. M. சார்லிசினால் வரையப்பட்ட லித்தோ அச்சு ஓவியங்கள் இரண்டின் பெயர் தருக?
3. M. சார்லிசின் ஓவியங்களில் காணக்கூடிய கலை மரபு/ கலைத்தளுவல் பற்றி குறிப்பிடு..
4. சித்தாத்தரும் தயாரும் என்ற ஓவியம் எந்த ஓவியங்களுக்கு ஒப்பிடப்படுகின்றது.
5. சார்லிசினுடைய ஓவியங்களின் காணப்படும் கலை அம்சங்களைக் குறிப்பிடுக?
6. M. சார்லிசினுடைய விகாரைச் சித்திரங்கள் காணப்படும் விகாரைகளைக் குறிப்பிடுக.

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு அதன் கலை அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1. இனங்காண்க : ………………………………………………….
2. கலைப்பாணி : ………………………………………………….
3. கலைஞன் : …………………………………………………
4. வர்ணப்பிரயோகம் : ………………………………………
5. சிறப்பம்சம் : ………………………………………………….

1. கலைஞன் : ………………………………………………………
2. கருப்பொருள் : ………………………………………………..
3. வர்ணப்பிரயோகம் : ……………………………………..
4. ஒழுங்கமைப்பு : ……………………………………………..
5. உணர்வுவெளிப்பாடு : ………………………………….

error: Content is protected !!