எகிப்திய நாகரிகத்தைச் சேர்ந்த கலைப்படைப்புக்கள்

அமைவிடம்

எகிப்திய நாகரிகம் நைல் நதிக்கரையில் தோன்றியது. அது பழைமை வாய்ந்த விவசாய நாகரிங்கள் சிலவற்றுள் ஒன்றாகும். ஹெரடோட்டஸ்” எனும் வரலாற்றாசிரியர் கூறுவதற்கிணங்க, எகிப்து என்பது, நைல் நதியின் ஒரு பொக்கிசமாகும். (பீ.வீ. ராவோ, உலக வரலாறு, பக்கம் 18). இந்நாகரிகத்தின் பரம்பல் நைல் நதியின் மேற்பகுதியில் ஆரம்பித்து மத்திய தரைக் கடல் வரை சென்று முடிவடைவதைக் காணலாம். அதன் தொடக்கப் பகுதி மேல் எகிப்து எனவும் இறுதிப்பகுதி கீழ் எகிப்து எனவும் அழைக்கப்படுகின்றது.

வரலாற்றுப் பின்னணி

காலப்பகுதிகள்

எகிப்திய நாகரிகத்தின் அரச பரம்பரைக்கு முற்பட்ட இராசதானிகளின் ஆரம்பமானது, கி.மு. 5450 தொடக்கம் கி.மு. 2960 வரையிலான பண்டைக்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. (Janson) எகிப்திய நாகரிகம் ஓர் இராசதானியாகக் கட்டியெழுப்பப்படல் அதாவது முதலாக இராசதானிக் காலகட்டத்தின் ஆரம்பம் கி.மு. 3000 இற்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தது. அது கி.மு. 3100 இல் நர்மேர் மன்னனின் காலத்தில் நிகழ்ந்தது. அதற்கமைய முதலாவது அரச பரம்பரையிலிருந்து 31 ஆம் அரச பரம்பரை வரையிலான காலப்பகுதி எகிப்திய நாகரிகத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. எகிப்திய நாகரிகத்தைக் காலப்பகுதிகளின்படி பயிலுவதை இலகுபடுத்துவதற்காக எகிப்திய நாகரிகத்தின் சமூக – அரசியல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதனைச் சில காலகட்டங்களாகப் பிரித்து இனங்காணலாம்.

  1. அரச பரம்பரைக்கு முற்பட்ட காலம் கி.மு. 5450 – 3100 (Predyanastic)
  2. முன் அரச பரம்ப ரை கி.மு. 3100 – 2649 (Early Dyanastic – Dvanastic 1,2)
  3. பண்டைய இராசதானி கி.மு. 2649 – 2150 (Old Kingdom – Dyanastic 3,6)
  4. மத்திய இராசதானி கி.மு. 2040 – 1640 (Middle Kingdom – I)yanastic 11,13)
  5. புதிய இராசதானி கி.மு. 1550 – 1070 ( New Kingdom – Dyanastic 18.20)

எகிப்து அரச பரம்பரையும் காலங்களும்

அந்தந்தக் காலப்பகுதிகளில் ஆட்சி புரிந்த அரச பரம்பரைகளுக்கு அமையவே எகிப்திய வரலாறு பகுப்பாய்வு செய்யப்படுகிறது. அரச பரம்பரைக்கு முற்பட்ட காலம் என்பது எகிப்திய நாகரிகம் குடியிருப்புக்களாக உருவாகிய காலப்பகுதியில் ஆரம்பித்த காலமாகும். புதிய கற்காலத்தைச் சேர்ந்த கி.மு. 5000 அளவில் நைல் நதிக்கரையில் மனிதன் குடியிருக்கத் தொடங்கிய மற்றும் பிராணிகளைச் சாதுவாக்கிப் பயிர்ச் செய்கையை ஆரம்பித்த காலப்பகுதியில் ஆரம்பித்த காலமாகும்.

எகிப்திய நாகரிகத்தின் முன் அரச பரம்பரைக் காலமாகக் கருதப்படுவது கி.மு. 2960 தொடக்கம் 2640 வரையிலான முதலாவது அரச பரம்பரைக் காலமாகும். நைல் நதிக்கரையில் மேல், கீழ்ப் பிரதேசங்களில் தோன்றிய மேல் எகிப்து, கீழ் எகிப்து ஆகிய இராசதானிகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடுகளைத் தீர்த்துவைத்து, அவ்விரு இராசதானிகளையும் ஐக்கியப்படுத்தி வலிமைமிக்க ஓர் அரசாக உருவாக்குவதில் கி.மு. 3150 – 3125 காலத்தில் நர்மர் {Narmer) அதாவது மெனஸ் (Mencs) மன்னன் வெற்றிகண்டான். அம்மன்னன் முதலாவது தலை நகரமாக மெம்பிஸ் (Memphis) நகரத்தைக் கட்டியெழுப்பினான். அதிலிருந்து ஏறத்தாழ 500 வருடகாலம் மெம்பிஸ் நகரம் பாராக்களின் தலைநகரமாக இருந்தது. கி.மு. 3100 – 2680 வரையிலான காலப்பகுதியே முன் இராசதானிக்காலம் எனப்படுகின்றது.

முதலாம் இரண்டாம் இராசதானிகளின் பின்னர் ஆறாவது அரச பரம்பரை ஆட்சி வரையிலான காலப்பகுதியில் எகிப்து நாகரிகத்தின் பண்டைய இராசதானி யுகத்தைச் (கி.மு. 2649 – 2150) சேர்ந்ததாகும். மூன்றாம் அரச பரம்பரையைச் சேர்ந்த சோசர் மன்னன் காலத்தில் அங்கு கைத்திறன் கலைகளின் விருத்தியைக் காண முடிந்தது. குறிப்பாக ஆதியான கட்டடக்கலைஞரையும் இந்த மூன்றாம் அரச பரம்பரைக் காலத்திலேயே இனங்காண முடிகின்றது. சக்காரா பிரதேசத்தில் கட்டியெழுப்பப்பட்ட சோசர் மன்னனது மாளிகையில் உள்ள கட்டட நிர்மாணத்தில் ஈடுபட்ட கலைஞராக இம்ஹொதெப் (Inhotcp) எனும் அமைச்சர் இனங்காணப்பட்டுள்ளார். எகிப்திய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மிகப்பழைய கலைஞராக இவர் கருதப்படுகின்றார்.

எகிப்து பண்டைய இராசதானிக் காலத்தின் பின்னர் முன்னர் ஒருபோதும் ஐக்கியப்படாத நகரங்களை முதன்மையாகக்கொண்ட நகர அரசுகள் சிலவற்றின் கீழே ஆட்சி இடம்பெற்றது. இந்த நகர அரசுகளை ஒன்ற சேர்த்து ஏழாவது அரசபரம்பரையைப் பிரதிநிதிததுவப்படுத்திய ‘மென்துஹொரெப்’ (Menthuhotep) மன்னனுக்கும் பின்னர் தோன்றிய காலப்பகுதி மத்திய இராசதானி யுகம் (கி.மு. 2040 – கி.மு. 1640) எனப்படுகிறது. அதற்கமைய தீப்சு நகரத்தை மையமாகக் கொண்டு இந்த மத்திய இராசதானி கட்டியெழுப்பப்பட்டது. இக்காலப்பகுதியை அரசியல் சிக்கல்கள் அதிகம் இடம்பெற்ற ஒரு காலமாகக் குறிப்பிடலாம். பிரதேச மன்னர்கள் கலகம் விளைவித்தனர். மத்திய ஆசியாவிலிருந்து (மத்திய கிழக்கிலிருந்து) வந்த ஆக்கிரமிப்பாளர்கள் இப்பிரதேசத்தில் குழறுபடியான ஒரு நிலைமையை உருவாக்கினர். மேலும் இக்காலப் பகுதியில் மன்னனின் அதிகாரத்துக்குச் சமமான அதிகாரத்துடன் வமிசாதிபதிகளின் அதிகாரமும் காத்திரமாக வளர்ச்சியடைந்தது. அது அவர்களது கலைப்படைப்புக்களின் மீது பெரிதும் தாக்கம் விளைவித்தது.

மத்திய இராசதானியில் ஏற்பட இந்த அரசியல் ஸ்திரமற்ற தன்மையானது பிரமிட்டுக்களையோ அது போன்ற யாதேனும் பாரிய நிர்மாணிப்புக்களையோ அமைப்பதற்குப் பொருத்தமான பின்னணி யாகக் காணப்படவில்லை. மத்திய இராசதானியைச் சேர்ந்த கலைப்படைப்புகள் 1! ஆம் 13 ஆம் இராசபரம்பரைக் காலகட்டத்தில் சிறியளவுக்கு ஆரம்பமாகியது. ஹிக்சாசுக்களின் (Hlycsos) மிலேச்சத்தனமாக ஆக்கிரமிப்புக்கள் எகிப்தியக் கலைப்படைப்புக்கள் அழிவடைவதற்கு ஏதுவாகின. மேலும் அக்காலப் பகுதியில் தொழினுட்ப ரீதியில் விருத்தி ஏற்பட்டமையையும் காண முடிகின்றது. குறிப்பாக உலோக வார்ப்பு வேலை மற்றும் உலோகங்களைக் கொண்டு உயரிய தரமுள்ள கருவிகள் செய்தல் போன்றவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

18ஆம் அரச பரம்பரையிலிருந்து இருபதாம் அரச பரம்பரை வரையிலான காலம் புதிய இராசதானியைச் சேர்ந்தது. ஏறத்தாழ 500 ஆண்டுகளின் பின்னர். ஹிக்சோக்கன் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த எகிப்திய நகரத்தின் சுபீட்சம் மீண்டும் உருவாதலும் கலைப் பாரம்பரியங்களின் புது மறுமலர்ச்சியும் புதிய இராசதானிக் காலகட்டத்தில் இடம்பெற்றன. இதில் முதன்மை பெறும் சில ஆட்சியாளர்கள் உள்ளனர். அவர்களுள், ஹத்ஷெப்சுட் (Flatshopsut) அரசி, மூன்றாம் துட்மோஸஸ் (Thutinoscs), நான்காம் அமென்ஹொரெப் (Aincnholcp) அதாவது அக்கென் அட்டன்/ அக்கெனாட்டன் (Ak-hc-atcn), டூட்டன்காமன் (Tutankanon), இரண்டாம் ஏமேசஸ் (Ramcsus – II) ஆகிய மன்னர்கள் முக்கியமானவர்களாவர். அவர்கள் அயல் நாடுகளையும் தமது அரசுடன் இணைத்துக்கொள்ள முற்பட்டதோடு புதிய சமய எண்ணக்கருக்களை உள்ளடக்கிய அரசியலை நடைமுறைப்படுத்துவதில் முன்னோடியாகவும் இருந்தனர்.

எகிப்திய நாகரிக ஆட்சியாளர்கள் ‘பாராக்கள்’ (Pharaoh) என அழைக்கப்பட்டனர். அவர்கள் எகிப்தின் போக்கைத் தீர்மானித்த பிரதான சக்தியாகக் காணப்பட்டனர். அவர்கள் தெய்வீகச் சக்தியை உடையவர்கள் என எகிப்தியர்கள் நம்பினர். அவர்கள் அரசின் தலைவர்களாக மட்டுமன்றிச் சமய அமைப்பின் தலைவர்களாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். அவர்களே வம்சாதிபதிகளை நியமித்தனர். அக்கால எகிப்திய சமூகத்தில் வம்சாதிபதிகளைத் தவிர பெரும்பாலானோர் விவசாயிகளாகவும் தொழிலாளர்களாகவும் அடிமைகளாகவும் காணப்பட்டனர்.

எகிப்தியர்கள் கி.மு. 3000 அளவில் எழுத்துமுறையொன்றினையும் அமைத்துக் கொண்டனர். அவ்வெழுத்து முறை ஹைரோகிளி.ஃபிக்ஸ் (Hieroglyphics) அதாவது உருவ எழுத்து முறையாகும்.

எகிப்திய கலைப்படைப்புக்கள்

எகிப்தியரின் கலையும் வாழ்வும் பிரதானமாக இரண்டு விடயங்கள் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இறப்பும் இறப்புக்குப் பிந்திய வாழ்க்கையுமே அவையாகும். எகிப்திய நாகரிகமானது அதற்கே உரித்தான இயல்புகளைக் கொண்ட விசேடமான கலைப் பாரம்பரியத்தை உடையதாகும்.

நீண்ட வரலாற்றைக்கொண்ட எகிப்திய நாகரிகமானது ஆயிரக்கணக்கான வருடங்களில் கூட அதன் கலைப் பாணியில் மிகச் சிறிய சில மாற்றங்களுக்கே உள்ளாகியுள்ளது. இது எகிப்தியக் கலைப் படைப்புக்களின் ஒரு விசேட இயல்பாகும். எகிப்தியச் சமூகத்தின் வாழ்க்கைக்கோலம், சிந்தனை, கலைத்துவம் போன்றவை தொடர்பான மனப்பாங்குகள் கடுமையான மூடநம்பிக்கைகளின் கட்டுப்பாட்டின் கீழ் நீண்ட காலமாக மாற்றமடையாது காணப்பட்டமையே இதற்கான காரணமாகும். எகிப்தியக் கலைப்படைப்புக்கள் மீது செல்வாக்குச் செலுத்தியுள்ள மற்றைய காரணி இறப்புக்குப் பிந்திய வாழ்க்கை தொடர்பாக அவர்கள் கொண்டிருந்த மூட நம்பிக்கையாகும். அவர்களது கலைப் படைப்புக்களை கட்டட நிர்மாணிப்புக்கள், ஓவியங்கள், சிற்பங்கள் போன்ற அனைத்துப் படைப்புக்களும் அந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

எகிப்தியக் கலையைச் சேர்ந்த பெரும்பாலானவை “பிரமிட்டுக்கள்” எனப்படும் புதைகுழி நிரமாணிப்புக்களிலேயே காணப்படுகின்றன. இக்கலைப் படைப்புக்கள் அவர்களது சமயத்துடனும் நம்பிக்கைகளுடனும் இறுக்கமாக இணைந்தவையாகும். இக்கலைப்படைப்புக்களில் அவர்களது வாழ்க்கைத் தகவல்களையும் அவர்கள் வழிபடும் மற்றும் நம்பும் வெவ்வேறு கடவுள் மற்றும் புனிதக் குறியீடுகளை சிற்பங்களாகவும் காட்டியுள்ளனர். இறந்தவர்களின் உடலை அடக்கஞ் செய்வதோடு மேலதிகமாக அவரது உடலுருவத்தைக் காட்டுவதற்காக சிற்பங்கள் உருவாக்கினர். மேலும் ஆன்மாவுக்குத் தேவையான நினைவு கிடைப்பதற்காக இறந்தவரது வாழ்க்கையின் வெவ்வேறு சந்தர்ப்பங்கள் அவற்றின் மீது ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.

error: Content is protected !!