எகிப்திய கட்டடக்கலை

இறப்புக்குப் பிந்திய வாழ்க்கை பற்றிய சமய எண்ணக்கருக்கள் மற்றும் அந்நம்பிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு எகிப்திய நாகரிகத்தில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கட்டட நிர்மாணங்கள் பெரும்பாலும் புதைகுழி (பிரமிட்) களும் வழிபாட்டுத்தலங்களுமாகும். எகிப்திய கட்டடக் கலையின் ஆரம்பக் கட்டத்தில் தர்ப்பைப்புல், பப்பைரசுக் குழாய்கள், மூங்கிற் குழாய்கள், மரம், களி, சுடாத களிமண் கட்டிகள் போன்றவை பயன்படுத்தப்பட்ட போதிலும் பிற்காலத்தில் அதற்கான மூலப்பொருட்களுக்குப் பதிலாக கற்குற்றிகளைப் பயன்படுத்தி உறுதிமிக்க நிரந்தரமாக கட்டடங்கள் கட்டப்பட்டன. மேலும் சொசர் மன்னனின் காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் இம்ஹொட்டெப் (Inhotep) எனப்படும் பண்டைய கலைஞரின் முன்மாதிரிகளைத் தழுவி, பிற்காலத்தில் பாரிய கட்டடங்களை உருவாக்குவதில் எகிப்திய நாகரிகம் வெற்றி கண்டது. எகிப்தில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடங்கள் சார்ந்த வகையில் ஏனைய கலைப்படைப்புக்களான ஓவியம், சிற்பம், செதுக்கு வேலைபாடுகள் ஆகிய கலை வடிவங்களும் விருத்தியடைந்தன.

பிரமிட்டுக்கள் அதாவது புதைகுழிகள்

பிரமிட்டுக்கள் அதாவது புதைகுழிகள் எகிப்தியரது மிக முக்கியமான படைப்புக்களாகக் கருதப்படுகின்றன. இறப்புக்குப் பிந்திய வாழ்க்கை தொடர்பாக அவர்கள் கொண்டிருந்த மூட நம்பிக்கை காரணமாக பூதவுடல்களை (மம்மிகளை – Mummy) அடக்கஞ் செய்வதற்காக புதைகுழி மனைகள் அமைத்தனர். இறந்தவுடலைப் பாதுகாப்பதற்கான ஒரு மனையை அமைப்பதே பிரமிட் ஆக்கத்தின் நோக்கம் எனத் தோன்றுகிறது. குறிப்பாக அப்புதைகுழி மனைகள், பாராக்கள் மற்றும் பிரபு வம்சத்தினருக்காகவே அமைக்கப்பட்டன. முதலாவது அரச பரம்பரை ஆட்சிக்கு முன்னர் தொடக்கம் பல நூற்றாண்டு காலமாக அரச பரம்பரையினருக்கு புதைகுழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்புதைகுழி களில் முதலில் மண் குவியல்கள், மஸ்ரபா(Mastaba), படிமுறைப் பிரமிட்டு (Step pyramid), பிரமிட்டு (Pyramid) என வளர்ச்சியடைந்த பல கட்டடங்களை இனங்காணலாம்.

மஸ்ரபா (Mastaba)

ஆரம்ப கால எகிப்திய மக்கள் இறந்த உடலை (பூதவுடலை)ப் புதைத்து அதன்மீது மண், கல், மரக்கிளைகள் போன்றவற்றை இட்டு மூடினர். பின்னர், அநிர்மாணிப்பின் அடிப்படையான தன்மையைக் கொண்ட மஸ்ரபா எனப்படும் கட்டடத்தை அமைத்தனர். அதற்கமைய முதலாவது அரச பரம்பரையினருக்காக மஸ்ரபாக்கள் அமைக்கப்பட்டுவந்துள்ளன. மஸ்ரபா எனப்படும் இப்பண்டைய புதைகுழி நிர்மாணிப்புக்கள் ஆரம்பக் காலகட்டத்தில் கற்களினால் அல்லது செங்கற்களினால் கட்டப்பட்ட சாய்வான சுவர்களைக் கொண்ட செவ்வக வடிவக் கட்டடங்களாகும்.

முதலாவது அரச பரம்பரைக்காலத்தின்போது மேற்குறிப்பிட்ட மஸரபாக்களின் வடிவம் மேலும் சிக்கலான தன்மையைப் பெற்றுள்ளது. அவ்வாறான சிக்கலான மஸ்ரபாக்களில் சில அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இறந்தவருக்காகக் கிரியைகள் செய்வதற்காகவும் அவரது பிரதியுருக்களை இட்டுவைப்பதற்காகவும் மஸ்ரபாவில் அறைகள் அமைக்கப்பட்டன. கிரியைகள் செய்யும் அறைக்கும் பிரதியுருக்களை இட்டுவைக்கும் அறைக்கும் கீழாக நிலத்தினுள்ளேயே பூதவுடல் (மம்மி) இட்டு வைக்கப்பட்டுள்ளது. முன் அரசபரம்பரைக் (கி.மு. 2960 – 2649 வரை) காலத்தைச் சேர்ந்த இவ்வாறான பல மஸ்ரபாக்கள் நைல்நதிக் கரையில் அமைக்கப்பட்டிருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

படிக்கட்டு பிரமிட்

எகிப்திய புதைகுழி மனைகளின் அடுத்த கட்ட வளர்ச்சி படிக்கட்டுப் பிரமிட்டுக்கள் ஆகும். நான்காம் அரச பரம்பரை காலகட்டம் வரையில் மஸ்ரபாக்கள் நிர்மாணிக்கப்பட்டவையாயினும் மூன்றாம் அரச பரம்பரைக்காலம் முதல் மஸ்ரபாவுக்குப் பதிலாக படிக்கட்டுப் பிரமிட்டு எனும் புதிய மாதிரியமைப்பைக் கொண்ட புதைகுழி மனைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கீழிருந்து மேல்நோக்கிச் செல்லும்போது படிப்படியாகச் சிறியதாகுமாறு மஸ்ரபாக்கள் ஒன்றின்மீது வைத்து அமைக்கும் மாதிரிக்கு அமையவே அடுக்குமுறைப் பிரமிட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மஸ்ரபாவானது பிரமிட்டு வரையும் வளர்ச்சியடைவதன் மாறுநிலைக் கட்டமாக இந்த படிக்கட்டுப் பிரமிட்டுக்களைக் குறிப்பிடலாம். இம்போட்டெப் எனப்படும் அரச கட்டடக்கலைஞரால் திட்டமிடப்பட்ட சொசர் மன்னனின் படிக்கட்டுப் பிரமிட்டு இந்த மாதரியமைப்பைக் கொண்டது. மெம்பிஸ் நகரத்தைத் தலைநகராகக் கொண்ட கீழ் எகிப்தின் மயானமாகிய, நைல் நதிக்கரையில் ‘சக்காரா” எனும் பிரதேசத்தில் உள்ள இது கி.மு. 2681 – 2662 காலப்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்து. சொசர் (Djoscr) மன்னனுக்காக நிர்மாணிக்கப்பட்ட மஸ்ரபாவை உள்ளடக்கி, அது மறைக்கப்படும் வகையில் இரண்டாவதாக இந்த படிக்கட்டுப் பிரமிட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பெரிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த பிரமிட்டின் தற்போதைய உயரம் ஏறத்தாழ 204 அடி ஆகும்.

திட்டப்படம் இவ்வாறான படிக்கட்டுப் பிரமிட்டுக்களுக்கான மற்றுமோர் உதாரணமாக மிடம்ஹி பிரதேசத்தில் நிரமாணிக்கப்பட்டுள்ள சென். பெரு (Scnfcru) எனும் பாராவோவினது புதைகுழி நிர்மாணிப்பைக் குறிப்பிடலாம். இது கி.மு. 2613 – 2589 காலப்பகுதியை நான்காவது அரச பரம்பரையைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. இதன் உயரம் ஏழத்தாழ 210 அடி ஆகும். இதன் அடிப்படையான அமைப்பு மெசப்பாத்தேமிய “சிங்குரட்” எனும் கட்டட வகையைச் சேர்ந்தது.

சென்ஸபெரு(Sentcru) என்பவரின் புதைகுழி அமைப்பு, கி.பி. 2613-2589, மிட்மிஹி

சென்பெரு (Senfcru) மன்னனின் காலத்திலேயே புதைகுழி நிர்மாணிப்பானது முக்கோணவடிவ எளிய கேத்திரகணித வடிவத்தைக் கொண்ட பிரமிட்டு மாதிரி வரையில் படிப்படியாக விருத்தியடைந்தமையை வளைவான பிரமிட்டின் (Bcnt lyramid) மூலம் அறிய முடிகிறது. எகிப்தின் நெக்ரோபோலிஸ் பிரதேசத்தில் உள்ள 344 அடி உயரமான இந்த வளைவான பிரமிட்டை அதன் விருத்திப்பருவத்தின் மற்றுமொரு கட்டமாமகக் கருதலாம்.

பிரமிட்

பிரமிட்டின் விருத்தியடைந்த வளர்ச்சிக் கட்டமாகக் கருதப்படுவது நான்கு பக்கங்களையும். சதுரவடிவ அடியையும் கொண்ட பிரமிட்டாகும். நான்காவது அரச பரம்பரையின் ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதியளவில் இவ்வடிவத்தில் புதைகுழிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பண்டைய இராசதானியைச் சேர்ந்த கீசாவில் (Giza) காணப்படும் மூன்று பிரமிட்டுக்களும் எகிப்திய நாகரிகத்தின் சிறப்பான புதைகுழி நிர்மாணிப்புக்களாகக் கருதப்படுகின்றன. கூஃபு (Khufu) அதாவது சியாப்ஸ் (Chcops) , காஃப்ரே (Khcfrc) அதாவது செஃப்ரன் (Chephren) மன்னனின் பிரமிட்டு, மென்குரே (Menkaurc) பிரமிட்டு ஆகியனவே எகிப்தியப் பிரமிட்டுக்களுள் முக்கியமான மூன்று பிரமிட்டுக்களாகும்.

கூஃபு பிரமிட்

இம்முப்பிரமிட்டுக்களுள் மிகப்பெரிய பிரமிட்டு கி.மு. 2601 – 2528 காலத்தைச் சேர்ந்த கூஃபு (Khufu) அதாவது சியொப்ஸ் (Chcops) மன்னனின் பிரமிட்டாகும். அதன் உயரம் ஏறத்தாழ 480 அடி ஆகும். இந்த நிர்மாணிப்புக்காக 2.5 தொன் நிறையுள்ள ஏறத்தாழ நூறாயிரம் (100,000) கற்பாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு அதற்காக பாரிய ஊழியப்படையும் உயிரிய தொழினுட்ப அறிவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இந்நிர்மாணங்கள் பாராக்களின் வலிமையை எடுத்துக்காட்டும் ஆக்கங்களாகக் கருதப்படுகின்றன. இந்த பிரமிட்டுக்களின் உள்ளே மன்னனின் கல்லறை, அரசியின் கல்லறை, நிலத்தில் உள்ளே அமைக்கப்பட்ட போலியான கல்லறை ஆகியவற்றை உள்ளடக்கி திட்டமிடப்பட்டுள்ளது. நான்காவது அரச பரம்பரையானது 200 வருடங்களின் பின்னர் முடிவடைவதோடு ஐந்தாம் ஆறாம் அரச பரம்பரைகளின்போது நிர்மாணிக்கப்பட்ட பிரமிட்டுக்கள், முன்னர் குறிப்பிட்ட முப்பெரும் பிரமிட்டுக்களைவிட அளவில் சிறியவையாகும்.

கற்களைக் குடைந்து அமைத்த கல்லறைகளும் (Rock cut tombs) ஆலயங்களும்

பண்டைய இராசதானியில் பிரபல்யம் பெற்றுக் காணப்பட்ட பிரமிட்டு நிர்மாணிப்பானது மத்திய இராசதானிக் காலத்தில் படிப்படியாக வழக்கொழிந்தது. புதிய இராசதானிக் காலத்தில் நைல் நதிக் கரையில் கற்குன்றுகளைக் குடைந்து புதைகுழிகள் நிர்மாணித்தல் பிரபல்யமடைந்து. மேலும் இப்புதைகுழி நிர்மாணிப்புக்களோடு கூட்டாக ஆலயங்களும் தோற்றம் பெற்றன. ஹட்செப்சுட் அரசியின் ஆலயம் மற்றும் 19 ஆம் அரச பரம்பரையைச் சேர்ந்த இரண்டாம் ரமேசஸ் மன்னனின் அபூசிம்பள் தேவாலயம் போன்றவை இவ்வாறான கற்பாறைகள் சார்ந்த புதைகுழி மற்றும் ஆலய நிர்மாணிப்புகளுக் கான உதாாரணங்களாகும்.

ஆலயங்கள்

18ஆம் அரச பரம்பரையாகும்போது எகிப்திய ஆலய நிர்மாணிப்புக்கள் இறந்த உடல்களை இட்டு வைப்பதற்காக மாத்திரமன்றி பாராக்கள் வழிபட்ட தெய்வங்களை முதன்மையாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக புதிய இராசதானிக்காலத்தின்போது பாரிய தூண்கள், தீராந்திகளைக் கொண்ட தேவாலயங்களைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த ஆலயங்கள் அமூன் தெய்வம், அமூன் தெய்வத்தின் மனைவியான மூட்தேவி, மகனாகிய கொன்சு தெய்வம் ஆகிய பல்வேறு தெய்வங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவ்வாறான பல ஆலயங்கள் கானக், லக்சோர் பிரதேசங்களில் காணப்படுகின்றன. அத்தூண்களின் உச்சியிலும் உடலிலும் இருந்து பெற்ற அலங்கார அம்சங்களால் அழுகுபடுத்தப்பட்டுள்ளது. பப்பைரசு இலைகள், தாமரை மலர், சிறு மூங்கில் குழாய்கள் போன்று சூழலில் இது இதழ்களின் தன்மையும் எகிப்திய கட்டடக் கலையின் சிறப்பான ஓர் அங்கமாகும்.

அமூன் ஆலயம் – காணக், தீப்சு – New Kingdom,Temple of Amun-Ra (1570-1100 BC), Karnak, Thebes

புதிய இராசதானியின் தலைநகரமாகிய தீப்க நகரில் (தற்போது லக்சோர் எனப்படும் பிரதேசத்தில்) அமைந்துள்ளது. இது அமூன் தெய்வத்திற்காக நிர்மணிக்கப்பட்ட ஒரு புனிதஸ்தலமாகும். 18ஆம் இராச பரம்பரையைச் சேர்ந்த அமென்ஹெட்டொப் மன்னனினால் கி.மு. 1350 இல் இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அப்பணிகள் 19ஆம் இராச பரம்பரையைச் சேர்ந்த இரண்டாம் ரமேசஸ் மன்னனினால் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

இத்தேவாலயம் உட்பட ஒட்டுமொத்த கட்டடத் தொகுதியும் உயரமான மதிலினால் சூழப்பட்டுள்ளது. துவார மண்டபத்தின் இரு புறங்களிலும் சாய்வான வடிவத்தில் அமைக்கப்பட்ட இரண்டு பாரிய சுவர்கள் உள்ளன. அவற்றின் ஊடாக நுழைந்தவுடன் பாரிய இரு வரிசைத் தூண்களாலான ஒரு திறந்த மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தில் நீண்ட கிடைத்தளம் செவ்வகவடிவானது. அதற்கு அப்பால் அமைந்துள்ள இரண்டாம திறந்த மண்டபமும் செவ்வக வடிவமுடையது. அங்கு காணப்படும் தூண்கள் மிகப் பெரியவை. இம்மண்டபத்தின் பின்னர் புனித கருப்பக்கிரகம் அமைந்துள்ளது.

இத்தேவாலயக் கட்டடத் தொகுதியின் 5000 சதுரமீற்றர் பரப்பளவுள்ள தூண்கள், தீராந்திகள் இடப்பட்ட மண்டபமானது, எகிப்திய கட்டடக்கலை மாதிரியினது இயல்புகளை நன்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்பது பிரபல்யமான ஒரு கருத்தாகும். ஒன்றுடனொன்று அருகருகே அமைந்த ஏறத்தாழ 52 அடி உயரமான தூண்கள் இம்மண்டபத்தின் தனிச் சிறப்பாகும். அவ்வொவ்வொரு தூணினதும் சுற்றளவு ஏறத்தாழ 12 அடி ஆகும். வட்டவடிவமுள்ள பாரிய கற்பாளங்களை இணைத்து அமைக்கப்பட்டுள்ள இத்தூண்களின் உடற்பகுதியில் பல்வேறு செதுக்கு வேலைப்பாடுகள் உள்ளன. தூண்களின் போதிகையில் பப்பைரசு இலைகள் போன்ற தன்மையுடையது. இவ்வாறான தன்மையைக் கொண்ட தூண்கள் மூலம் ஆலயத்தின் காம்பீரத்தன்மை எடுத்துக்காட்டப்படுகின்றது. புனரமைக்கப்பட்டுள்ள இம்மண்டபத்தின் வடக்குப் புறச் சுவரில் காணப்படும் Setils Campaigns எனும் செதுக்கல் வேலைப்பாட்டின் மூலம் வேட்டையாடல் சந்தர்ப்பங்கள் காட்டப்பட்டுள்ளன. அமூன் தேவாலயத்தில் தற்போது காணப்படும் இச்செதுக்கல் வேலைப்பாடுகள் புதிய இராசதானியைச் சேர்ந்த அரிய கலைப்படைப்புக்களாகும்.

அபூசிம்பல் ஆலயம் Temple of Ramcsscs II, Abu Simbel. 19th Dynasty.ca. 1279-1213 bce

அபூசிம்பல் ஆலயம் சிட்டி | எனும் மன்னனின் மகனாகிய ரமேசஸ் மன்னனின் நிரமாணிப்பாகும். ரமேசஸ் மன்னன், ஹிட்டயிற்களுக்கு எதிராகப் போராடி சிரியாவின் ஒரு பகுதியையும் கைப்பற்றி மீண்டும் எகிப்து நாகரிகத்தில் பாராக்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினார். அவரது ஆட்சிக்காலத்தில் உயரிய தரமான படைப்பாக்கங்கள் உருவாயின. அவரது நிர்மாணிப்புக்களுள் அபூசிம்பல் ஆலயம் தனிச்சிறப்பான மற்றைய பெரும்பாலான பாரா மன்னர்களைப் போன்றே இம்மன்னனும் தனக்காகவும் அமூன், ஹொரக்தி, பதத் ஆகிய தெய்வங்களுக்காகவும் இந்த ஆலயத்தை நிர்மாணித் துள்ளன. 67 வருட காலமாக நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த ஆலயம் புதிய இராசதானியின் 19ஆம் அரச பரம்பரைக்கு உரியதாகும். மேலும் இது கி.மு. 1279 – 1213 காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. நைல் நதியின் மேற்குக் கரையில் இருந்த இந்த நிர்மாணிப்பு அக்காலத்தில் கீழ் லுபியாவில் ‘குஷ்னம்’ என அழைக்கப்பட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகும். தற்காலத்தில் இது அஸ்வான் எனும் பிரதேசத்தைச் சேர்ந்ததாகும். அஸ்வான் அணைக்கட்டு நிர்மாணிப்பின்போது இதன் ஆரம்ப அமைவு இடமாற்றப்பட்டது. இயல்பாக அமைந்திருந்த ஒரு கற்குன்றை உட்குடைந்து, அபூசிம்பல் ஆலயமும், அதன் துவாரமண்டத்துக்கு முன்னே உள்ள பாரிய விக்கிரகங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆலயத்தில் உட்புறத்தே பல சிற்பங்களும் செதுக்கல் வேலைப்பாடுகளும் உள்ளன.

ஆலயத்தின் எதிரேயுள்ள சோடியாகக் காட்டப்பட்டுள்ள அமர்ந்தநிலைச் சிற்பங்கள் ரமேசஸ் மன்னனுடையவை. அவை ஏறத்தாழ 70 அடி உயரமானவை. விறைப்பான, நேரிய, நெகிழ்வற்ற தன்மையை வெளிக்காட்டும் இச்சிற்பங்கள் அவற்றின் பாரிய தன்மை காரணமாக காம்பீரத் தன்மையையும் காட்டுகின்றன. நுழைவாயிலுக்கு மேலே சூரியக் குறியீட்டுடன் அமூன் தெய்வம் காட்டப்பட்டுள்ளது. ஆலயத்தின் உட்புறத்தினுள் புகுவதற்குரிய பகுதி இருபுறமும் உள்ள சிற்பங்கள் ஒசைரிஸ் தெய்வத்தைக் காட்டுகின்றன. அவை ஏறத்தாழ 32 அடி உயரமானவை.

error: Content is protected !!