உபோஸதகர
பிக்குகளின் சங்கக் கருமங்களை ஆற்றுவதற்காக நிர்மாணிக்கப்பட்டவையே ‘உபோஸ்தா கர’ ஆகும். ‘சங்காராமய’ (விகாரை) அமைந்துள்ள நிலத்தின் மிக உயர்வான இடத்திலேயே ‘உபோஸதரகர’ அமைக்கப்படும். பிக்குகளின் ஒழுக்கம் உயரிய மட்டத்தில் காணப்படுதல் வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதற்காகவே இக்கட்டடம், விகாரைக் கட்டடத்தொகுதியில் மிக உயர்ந்த இடத்தில் அமைக்கப் பட்டதாகக் கருதப்படுகின்றது.
உபோஸ்தா கரய தொடர்பாக தற்போது காணப்படும் மிகப் பண்டைய சான்றாக, அனுராதபுர மகமெவுனா பூங்காவில் உள்ள லோவா மகா பிராசாதய இனைக் குறிப்பிடலாம். அனுராதபுரக் காலத்தைச் சேர்ந்த ரத்னபிரசாதயாவும் அவ்வாறான மற்றுமொரு கட்டடமாகும். பொலனறுவை ஆலாகனைப் பிரிவெனாவில் உள்ள பத்தசீமா பிரசாதய எனப்படும் ‘உபோஸ்தாகரய’ மிகச் சிறப்பான ஒரு கட்டுமானமாகும்.
‘உபோஸ்தாகரய’ தொடர்பாக தற்போது காணப்படும் மிகப் பண்டைய சான்று, அனுராதபுர மகமெவுனா பூங்காவில் அமைந்துள்ள துட்டகைமுனு மன்னனால் கட்டுவிக்கப்பட்ட லோவா மகா பிராசாதய ஆகும். ஒன்பது மாடிகளைக் கொண்ட ஒரு கட்டடமாகிய இது ஒரு பல்தொழில் கட்டடமாகும். அதில் பிக்குகளின் அறைகளும் தரும போதனை மண்டபமும் உபோஸ்தராகரயவும் காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இங்கு பிக்குகளின் அறைகள் அவர்களது சிரேட்டதன்மைக்கு அமைய ஒதுக்கி வழங்கப்பட்டன.
இதன் நிலமாடி, கல்லினாலும் சுவர்களாலும் ஆக்கப்பட்டிருந்ததாகவும் மேல் மாடிகள் மரத்தினால் அமைக்கப்பட்டிருந்ததாகவும் நம்பப்படுகின்றது. அது நிர்மாணிக்கப்பட்டு சிறிது காலத்தில் தீயில் எரிந்து அழிவுற்றதாகவும் சத்தாதிஸ்ஸ மன்னன் அதனை ஏழு மாடிகளாக்கி மீண்டும் கட்டியெழுப்பிய தாகவும் மகாவம்சம் கூறுகின்றது. (மகாவம்சம் பக்: 33) இது அக்காலத்தில் தெற்காசியாவில் நிர்மாணிக்கப்பட்ட மிக உயரமான கட்டடமாகக் கருதப்படுகின்றது. தற்போது லோவ மகா பாய கட்டடம் 232 அடி நீளமும் 231 அடி அகலமும் கொண்டதாகக் காணப்படுவதோடு, 1600 கல் தூண்களே எஞ்சியிருப்பதையும் காண முடிகின்றது. இக்கல் தூண்கள் முதலாம் பராக்கிரமபாகு மன்னன் காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றது. பஸ்நாயக்க 2001:84) இதன் கூரை உலோக ஓடுகளால் வேயப்பட்டிருந்தமையால் இது லோவா மகாபாய எனும் பெயரில் பிரபல்யமடைந்தது.