இஸ்லாமிய பள்ளிவாசலின் அடிப்படை அம்சங்கள்

  • அராபிய வியாபாரிகள் வணிகத்தின் பொருட்டு இலங்கைக்கு வருகை தந்ததன் விளைவாக பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன.
  • நுழைவாயிலுக்கு நேர்மேலாக கட்டடத்தின் மேல் காணப்படும் கூர்நுனிப் பகுதியுடன் கூடிய விசாலமான கும்மட்ட வடிவுடன் கூடிய குப்பா (Qubba) எனப்படும் சிகரம் அமைக்கப்படும்.
  • பள்ளியின் முன்புறத்தில் தொழுகைக்கு வருவோர் தம்மைச் சுத்தம் செய்து கொள்வதன் பொருட்டு அமைந்துள்ள நீர்த்தொட்டியும், நுழைவாயிலும், பள்ளிவாசலின் அமைப்பும் விசேட அம்சமாகும்.
  • கூர்நுனி வில் வளைவு அமைப்புடைய நுழைவாயில் உள்ளே திறந்த தொழுகை மண்டபமும், பள்ளிவாசலின் இருபுறத்திலும் அமைந்துள்ள தூண்களும் கட்டட நிர்மாணத்தில் அடங்கும்.
  • பள்ளிவாசல் இரு மருங்கிலும் காணப்படும் விசேடமான உருளை வடிவை ஒத்த மிக உயரமான அழகிய மினாரத் (Minaret) காணப்படும். அதன் உச்சி கோளவடிவானது. மினாரத்தின் உச்சியில் பிறையும் நட்சத்திரமும் காணப்படும்.
  • பள்ளிவாசல்களில் விக்கிரகங்களோ, ஓவியங்களோ காணப்படுவதில்லை.
  • சுவர்கள் அரபி எழுத்துக்களால் குர்ஆன் வசனங்கள் எழுதி அலங்கரிக்கப்படுவதுண்டு. அவ் வசனங்கள் எழுத்தணி முறையில் அழகாகப் பொறிக்கப்பட்டிருக்கும்.

பயிற்சி வினாக்கள்

1. பள்ளிவாசலின் கூர்நுனி பகுதியைக் கொண்ட கும்மட்ட வடிவ அமைப்பை கொண்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?
2. தொழுகைக்கு வருவோர் தம்மை சுத்தப்படுத்த அமைகக்ப்பட்ட விசேட அம்சம் எது
3. இஸ்லாமிய சமய கட்டிட தொகுதியில் மினாரத் என்றால் எது?

error: Content is protected !!