இலங்கையின் பாரம்பரிய பொம்மலாட்டக் கலை

  • பொம்மலாட்டக் கலை குழந்தைகளுக்கும், வளர்ந்தோருக்கும் இரசனையைக் கொண்டுவரும் சிறந்த கலை அம்சமாகும்.
  • பொம்மலாட்டக்கலை ஆதி காலத்தில் இருந்து இலங்கையின் கலாசார அம்சமாக விளங்கியது.
  • இது தற்காலத்தில் ஆற்றுகைக் கலையாக வளர்ச்சி பெற்று பிரசித்தி பெற்ற கலை ஆக்கமாக விளக்குகின்றது.
  • கை பொம்மை, நூல் பொம்மை, மப்பட் பொம்மை, விரல் பொம்மை என பொம்மைகள் நிர்மாணிக்கப்படுகிறன.
  • ரூபவாகிணி ஊடகத்தில் கை பொம்மலாட்டமும், மப்பட் பொம்மை ஆட்டமும் மிகப் பிரபல்யம் பெற்றுள்ளது.
  • நூல் பொம்மை ஆட்டம் பாரம்பரியமாக நடைபெறும் கலையாகும்.
  • பொம்மலாட்டத்தின் பொருட்டு பல்வேறுபட்ட வரலாற்று, சமூக கருப் பொருள் நிகழ்வுகளுக்கு ஏற்ற சரிதைப் பொம்மைகள் நிர்மாணிக்கப்படும்.
  • இலங்கையில் ஆதியில் இருந்து பிரபல்யம் பெற்ற பொம்மை நாடகம் ஆனது நூல் பொம்மை ஆட்டமாகும்.
  • இந்த பொம்மை நாடகத்தின் பொருட்டு பயன்படுத்தும் வரலாற்றுக் கதைகளிடையே, அகலபொல, ஸ்ரீசங்கபோ, அஜாசத்த, காலகோல, படாசாறா, அங்குலிமால கதைகளும் வெஸ்ஸன்தர ஜாதகம் போன்ற கதையும் கலை சிறப்பு வாய்ந்தவை.
  • வெசாக், போசன், கம்மடு போன்ற சமய விழாக்களின் பொருட்டு இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடாத்துதல் ஆதிகாலம் தொட்டு கிராமிய மக்களால் நிகழ்த்தப்பட்டன.
  • பின்னணிச் சங்கீதம், பாடல், சம்பாசணை, ஒளிச் செயல்ப்பாடு போன்ற பல அம்சங்கள், பொம்மலாட்ட நிர்மாணிப்புக்களின் சிறப்பிற்கும், கலை வளர்ச்சிக்கும் முக்கியமாக அமையும்.
  • பொம்மலாட்ட நாடகங்களின் பொருட்டு பாடப்படுவது, நாடகப் பாடல்களாகும். பாடல் இசைப்பதும், சம்பாசனைக் குரல் கொடுப்பதும், பெரும்பாலும் பொம்மலாட்ட கலைஞர்களால் செயல்ப்படுத்தப்படும்.
  • விசேடமாக பொம்மலாட்டத்தின் பொருட்டு, மேடை அமைப்பு, பின்னணி நிர்மாணிப்பு செய்து கொள்ளப்படும். இம்மேடை மிக சிறியதாக இருப்பதுடன், கண்மட்டத்திற்கு மேல் தயாரிக்கப் படும்.
  • பொம்மைகளின் பொருட்டு பல்வேறு மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படும். முக்கியமாக மரம் பயன்படுத்தப்படுவதுடன் அதன் பொருட்டு (கந்துரு மரம்) கடல்மாங்காய் மரம் (றுக்கத்தன) ஏழு இலைப்பாலை மரம், பலகைகல் பயன்படுத்தப்படும்.
  • இவை தவிர துணி, நூல், இரும்பு, ஆணி, மணி வகை, சைக்கிள் ரியூப், சாயம் வகை என்பன பயன்படுத்தப்படும்.
  • நூல் பொம்மையின் பகுதிகள் இணைக்கப்படுவது கை, பாதம், தலை ஆகியவற்றை அசைக்கக் கூடிய வகையிலாகும். இதன் பொருட்டு சைக்கிள் ரியூப் பயன்படுத்தப்படும்.
  • கை பொம்மைகளுக்கு மிக எளிமையான பொருட்கள் பயன்படுத்தப்படும். துணித்துண்டுகளும், தெறிநூல், கம்பி, பசை, கை மேஸ{ம் இதன் பொருட்டு பயன்படுத்தப்படும்.
பொம்மலாட்ட வகைகள்
நூல் பொம்மைகள்
விரல் பொம்மைகள்
கை பொம்மைகள்
கை பொம்மைகள்
நிழல் பொம்மைகள்
கோல் பொம்மை
நூல் பொம்மைகளைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட ‘எகெலபொல’ கதையின் சந்தர்ப்பமொன்று

பயிற்சி வினாக்கள்

1. பொம்மலாட்டத்தில் பயன்படுத்தப்படும் பொம்மைகளின் வகைகளைக் குறிப்பிடுக?
2. பொம்மலாட்டத்தில் பயன்படுத்தப்படும் கதைகளின் கருப்பொருள் யாது?
3. பொம்மைகள் செய்ய பயன்படும் மரங்கள் எவை?
4. இலங்கைத் தொலைக்காட்சியில் பிரபல்யமான பொம்மலாட்ட வகை எது?
5. பொம்மலாட்ட மேடை அமைப்புப் பற்றிக் குறிப்பிடுக?

error: Content is protected !!