இலங்கையின் உலோகச் சிற்பக்கலை

உலோகச் சிற்பக்கலையின் வரலாற்றுப்பின்னணி

இலங்கையின் உலோகச்சிலை ஆக்கம் தொடர்பான சான்றுகளாக முதன்முதலாக புத்தர் சிலைகளே கிடைத்துள்ளன. புத்தர்சிலை ஆக்கங்களாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 2ஆம், 3ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த உலோகப் புத்தர்சிலைகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன என அனுமானிக்கப்படுகின்றது. எனினும் அனுராதபுரக் காலத்தில் உலோகச் சிலைகள் ஆக்கப்பட்டுள்ளமைக் கான போதுமான எழுத்து மூலச் சான்றுகள் கிடைத்துள்ளன.

மகாவம்சம் எனும் நூலின்படி இலங்கையில் உலோகச்சிலை ஆக்கம் தொடர்பான முதன்முதலாகக் கிடைத்துள்ள வரலாற்றுச் சான்று துட்டகைமுனு மன்னன் காலத்தைச் சேர்ந்தது. மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டள்ளதற்கிணங்க துட்டகைமுனு மன்னன் (கி.மு. 161-137) ருவன்வெலிசாயாவின் கர்ப்ப அறையில், தங்கத்தாலான ஒரு புத்தர்சிலையுடன் (பொற்சிலையுடன்) நான்கு திசைகளுக்குரிய நான்கு தெய்வச் சிலைகளையும் இடப்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பிராஹ்மீய கல்வெட்டுக்களில், உலோக வினைஞர்கள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ‘தம்பகர’ எனும் பெயரால் குறிப்பிடப் பட்டுள்ளனர். வெவ்வேறு எழுத்துமூல மூலாதாரங்களின்படி கம்மாலைக் காரரின் தெய்வம் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு. அத்தெய்வம் ‘கம்மாரதேவன்’ என அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பல்வேறு எழுத்துமூல தகலவ்களின்படி இலங்கையின் உலொகத் தெழினுட்பம் சார்ந்த படைப்பாகத்துறை நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது தெளிவாகின்றது. சங்கமித்திரை ஸ்ரீ மகாபோதி விருட்சத்தை இலங்கைக்குக் கொண்டுவந்த சந்தர்ப்பத்தில், பதினெட்டுக் குலங்களைச் சேர்ந்த கைவினைஞர்களை அழைத்துவந்ததாகவும் அவர்களுடன் உலோகக் கைவிளைஞர்களும் வந்திருக்கலாம் எனவும் கருதமுடிகின்றது. மேலும் ‘அலகொல வெவை’ போன்ற இடங்களில் செய்யப்பட்ட அகழ்வுகளின்படி ஆரம்ப வரலாற்றுக் காலம் (கி.மு. 700 இற்கு முற்பட்ட காலம்) முதலே இலங்கையில் உலோகத்தட்டுத் தொழினுட்பம் தொடர்பான தெளிவான விளக்கம் காணப்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது.

அனுராதபுரக் காலம் தொடக்கம் காணப்பட்ட வெண்கலச் சிலைகள் இலங்கையில், மகாயான மரபு பிரபல்யமடைந்ததுடன் கூடவே பெரிதும் விருத்தியும் வளர்ச்சியும் அடைந்தது எனக் கருதலாம். அதற்கமைய புத்தர் சிலைகள் போதிசத்துவச் சிலைகள், இந்து சமயம் சார்ந்த சிலைகள் போன்றவை உருவாக்கப்பட்டன. மேலும் அனுராதபுரக் காலத்தைச் சேர்ந்த இந்து கட்டட நிர்மாண இடிபாடுகளிலிருந்தும் பல வெண்கலச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்பொருளியல் அகழ்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள், போதிசத்துவச் சிலைகள், இந்து தெய்வச் சிலைகள் ஆகியவற்றை நோக்குகையில் இலங்கைக்கே உரித்தான மிக உயர்வான உலோகச் சிலையாக்கக் கலை இலங்கையில் காணப்பட்டுள்ளமையை இனங்காண முடிகின்றது.

வெண்கலச் சிலை ஆக்கத் தொழினுட்பமும் நுட்பமுறைகளும்

உலோகச் சிலை ஆக்கத்திற்காகப் பயன்படுத்திய தொழினுட்ப முறை சிறப்பானதொன்றாகும். உலோக வார்ப்பு முறைகள் இரண்டு உள்ளன.

1. திண்ம வார்ப்பு முறை (solid cast)
2. பொள்ளான வார்ப்பு முறை (hollow cast)

திண்ம வார்ப்பு முறையின்போது குறித்த சிலை முதலில் மெழுகினால் செய்துகொள்ளப்படும். பின்னர் ஈரக் களிப்படையொன்றினால் மெழுகுச் சிலையை மூடி அது உலர்ந்த பின்னர் தீயில் வெப்பமேற்றி மெழுகு உருகி வெளியேறுமாறு செய்யப்படும். பின்னர் அக்களியாலான அச்சினுள் உருக்கிய உலோகத்தை ஊற்றி அது கெட்டியான பின்னர், அச்சை உடைத்து சிலை பெறப்படும். இம்முறை திண்ம உலோக வார்ப்பு முறை எனப்படுகின்றது. பொள்ளான வார்ப்பு முறையைக் கையாண்டு ஆக்கப்படும் உலோகச் சிலைகளின் உட்பகுதி பொள்ளாகக் காணப்படும். இலங்கையின் உலோகச் சிலை ஆக்கத்தில் பொள்ளான வார்ப்பு முறையை விட திண்ம வார்ப்பு முறையே பெரிதும் பிரபல்ய மடைந்துள்ளது. திண்மவார்ப்பு முறையெனக் கையாண்டு ஆக்கப்பட்ட சிலைகள் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தரம் 11இல் காணப்படும் இந்துச் சிற்பங்கள்

error: Content is protected !!