இலங்கைத் தாதுகோபங்களின்
வரலாற்றுப் பின்னணியும், அடிப்படைஇயல்புகளும்
தூபராம தாதுகோபம்
- அநுராதபுர காலத்தைச் சேர்ந்த இலங்கையில் முதல் முதலில் அமைக்கப்பட்ட தாதுகோபம் தூபாராம் ஆகும்.
- இது கி.மு. 03 ஆம் நூற்றாண்டில் தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் கட்டுவிக்கப்பட்டது.
- புத்தபெருமாமனின் வலது தாடையின் தாதுவை வைத்துக் காட்டப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
- இது மணி வடிவத்தைக் கொண்டது (கண்டாகார).
- தாதுகோபம் கட்டப்பட்டதன் பின்னர் ஆட்சி செய்த மன்னர்கள் இதனைப் புனர்நிர்மாணம் செய்ததுடன் மேலதிக கட்டட அமைப்புகளையும் சேர்த்தனர்.
- இது தற்போது 164 1/2 (அடி) விட்டமுடைய வட்ட வடிவமுடைய மேடை மீது நில மட்டத்திலிருந்து 11.4 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
- இது 63 அடி உயரம் உடையது.
- லஞ்ஞதிஸ்ஸ மன்னனால் சைத்தியத்தை சுற்றி “வட்டதாகே” (பாதுகாப்பான கூரை அமைப்பு) கட்டம் அமைக்கப்பட்டது.
- இவ் வட்டதாகே அமைப்பில் தற்சமயம் எஞ்சியிருக்கும் தூண்கள், அலங்கார செதுக்கல் வேலைப்பாடுகளைக் கொண்டவை.
- இக்கற்றூண்களின் மீது சிகரத்தைக் கொண்ட அரைக்கோள வடிவ கூரை அமைப்பு ஒன்று இருத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
பயிற்சி வினாக்கள்
1. இலங்கையில் கட்டபட்ட முதலாவது முதலாவது கோபுரம் எது?
2. தூபராம தாது கோபுரம் எத்தனையாம் நூற்றாண்டில் எந்த
3. தூபராம தாதுகோபுரத்தில் காணப்படும் வட்டதாகே அமைப்பு யாரால் கட்டப்பட்டது?
4. தூபாரம தாது கோபுரத்தின் அண்டபகுதி எந்த வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது?
5. புத்த பொருமானின் எந்த தாது பொருளை வைத்து தூபராமய தாது கோபுரம் கட்டப்பட்டுள்ளது?
ருவன்வெலிசாய தாதுகோபம் (மகா தாதுகோபம்)
- அநுராதபுர காலத்தைச் சேர்ந்த இத்தாதுகோபம் துட்டகைமுனு மன்னனால் கட்டுவிக்கப்பட்டது.
- இது நீர்க்குமிழ் (புப்புலாகார ) வடிவம் கொண்டது.
- தாதுகோபத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு பெற முன்னரே துட்டகைமுனு மன்னன் காலமாகி விட்டதால் அவருக்குப் பின்னர் அவரது தம்பியான சத்தாதிஸ்ஸன் மிகுதிக் கட்டிடப் பணியையும், யானை அணி மதிலையும், வெள்ளைப் பூச்சுப் பணியையும் பூர்த்தி செய்தான்.
- இலங்கையை ஆட்சி செய்த பல மன்னர்கள் இதனை புனர்நிர்மாணம் செய்ததுடன் புதிய அமைப்புக்களையும் சேர்த்தனர்.
- இது 350 அடி உயரமும், 300 அடி விட்டமும் கொண்டது. இத்தாதுகோபத்தின் பளிங்கினாலான சிகரம் (கொத்த ) 25 அடி உயரமுடையது.
- சதுர வடிவான மேடையின் மீது அமைந்த தாதுகோபத்தின் நாற்புறத்திலும் மகாதாதுகோபத்தின் நான்கு சிறிய மாதிரி தாதுகோபங்கள் காணப்படுகின்றன.
- இத்தாது கோபத்தைச் சுற்றிக் காணப்படும் யானை அணி மதில் உன்னதமான கலை நிர்மாணமாகும்.
- தாதுகோபத்தின் நாற்புறமும் உள்ள ‘வாகல்கடம்’ அலங்காரப் பூ, கொடி அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டவை.
- துட்டகைமுனு மன்னனின் சிலை, விகாரமகாதேவியின் சிலை. பாதிய திஸ்ஸ மன்னனின் சிலை, ருவன்மலிசாயவின் மாதிரியமைப்பு போன்ற நிருமாணிப்புக்களை சுற்றுப்பிரகாரத்தில் காணலாம்.
பயிற்சி வினாக்கள்
1. ருவன்வெலிசாய தாதுகோபம் எந்த மன்னனால் கட்டப்பட்டது?
2. ரூவன்வெலிசய தாது கோபுரத்தின் உயரம் யாது?
3. அதில் காணப்படும் சிகரம் (கொத்த) உயரம் யாது?
4. ரூவன்வெலிசாயாவில் காணப்படும் கட்டிட அமைப்பு, சிலைகளின் பெயர்களை எழுதுக?
5. ருவன்வலிமகாசாயவின் அண்டம் எந்த வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
அபயகிரி தாதுகோபம்
- இது அநுராதபுர காலத்தைச் சேர்ந்தது.
- கி.மு. 01 ஆம் நூற்றாண்டில் அபயகிரி தாதுகோபம் வட்டகாமினிஅபய (வலகம்பா) மன்னனால் நிர்மாணிக்கப்பட்டது.
- இது தானியக்குவியல் (தானியகார ) வடிவம் கொண்டது.
- கிரி எனப்படும் ‘நிகண்டாராமய” இருந்த இடத்தில் இத்தூபி அமைக்கப்பட்டதால் அபயகிரி எனப்பட்டிருக்கலாம் என வரலாறு கூறுகின்றது.
- அட்டமஸ்தானங்களில் இதுவும் ஒன்றாகும்.
- உத்தர சைத்திய , அபய, அபயகிரி, பயாகிரி எனும் பெயர்களாலும் இது அழைக்கப் படுகின்றது.
- 235′ அடி உயரமும் 310′ அடி விட்டமும் உடையது.
- ஆரம்ப காலத்தில் தாதுகோபத்தின் சத்திராவலி (கொத்கரல்ல) என்பதற்குப் பதிலாக குடை வடிவமும் அதனைத் தாங்கி நிற்கும் தூணும் இருந்துள்ளது.
- நுழைவாயிலின் இரு புறத்திலும் உள்ள “சங்கநிதி”, “பத்மநிதி” எனப்படும் பைதிரவ உருவச் சிலைகள் இரண்டும் சிறப்பான கலை நிர்மாணங்களாகும்.
பயிற்சி வினாக்கள்
1. அபயகிரி தாதுகோபம் எந்த மன்னனால் கட்டப்பட்டது?
2. அபயகிரி தாதுகோபத்தின் உயரம் யாது?
3. அபயகிரி தாதுகோபத்தின் நுழைவாயிலில் காணப்படும் காவற்சிலைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
4. அபயகிரி தாதுகோபத்தின் சந்திராவலி (கொத்கரல்ல) என்பதற்கு பதிலாக கட்டப்பட்ட வடிவம் யாது?
5. அபயகிரி தாதுகோபத்தின் வடிவம் யாது?
ஜேதவனராம தாதுகோபம்
- அநுராதபுர காலத்துக்குரிய ஜேதவனராம தாதுகோபம் தானியக்குவியல் வடிவத்தைக் கொண்டுள்ள தென தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
- இது கி.பி. 276 – 303 காலப்பகுதியில் மகாசேன மன்னனால் நிர்மாணிக்கப்பட்டது.
- புத்தபெருமானின் ‘பட்டிதாது” (இடுப்புப்பட்டி) வைத்து இத்தூபி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
- ஆரம்பகாலத்தில் இது 400 அடி உயரமுடையதாக இருந்தது.
- தாதுகோபம் சதுரவடிவமுடைய மேடையொன்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது.
- நாற்றிசைகளில் இருந்தும் ‘சலபவ” வுக்குள் (சுற்றுப்பிரகாரம்) நுழைய நான்கு வாயில்கள் உள்ளன.
- தாதுகோபத்தை சுற்றி 04 வாகல்கடங்கள் உள்ளன. அது செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது.
- உலகில் எஞ்சியிருக்கும் இவ்வகையான நினைவுத் தூபிகளுள் மிக உயரமான புனிதக் கட்டடம் இதுவாகும்.
பயிற்சி வினாக்கள்
1. ஜேதவனராம தாதுகோபம் எக்காலப்பகுதிக்குரியது?
2. புத்தபெருமானின் (இடுப்புபட்டி) வைத்து காட்டப்பட்ட தாது கோபுரம் எது?
3. ஜேதவனராம தாதுகோபத்தின் உயரம் யாது?
4. ஜேதவனராம தாதுகோபம் எத்தனையாம் ஆண்டு எந்த மன்னனால் கட்டப்பட்டது?
5. இலங்கையில் செங்கல்லில் கட்டப்பட்ட மிக பழைய தாதுகோபம் எது?
றன்கொத் விகாரை
- பொலன்னறுவைக் காலத்துக்குரியது.
- பொலன்னறுவையில் அலாஹன பிரிவெனா பூமிக்கு மேற்குத் திசையில் இத்தாதுகோபம் அமைந்துள்ளது.
- இந்த தாதுகோபம் நிஸ்ஸங்கமல்ல அரசனால் கட்டுவிக்கப்பட்டதென கூறப்படுகிறது.
- தாதுகோபம் 200 அடி உயரம் கொண்டதுடன் அடிப்பகுதியின் சுற்றளவு 186 அடியைக் கொண்டது.
- தாதுகோபம் நீர்க்குமிழி (புபுலாக்கார) வடிவினைக் கொண்டது.
- தாதுகோபத்தின் எட்டு மூலைகளிலும் எட்டு சிலைமனைகள் காணப்படுகின்றன.
- தாதுகோபத்தின் சதுர கோட்டத்தின் முகப்புக்களில் சூரியனைக் குறிக்கும் குறியீடான சக்கரத்தைக் காணலாம்.
- றன்கொத் விகாரை, நாற்திசைகளிலும் மலர்க்கொடி அலங்காரம் செதுக்கப்பட்ட “வாகல்கடங்கள்” நான்கைக் கொண்டுள்ளன.
பயிற்சி வினாக்கள்
1. ரன்கொத் விகாரை எக்காலப்பகுதிக்குரியது?
2. ரன்கொத் விகாரை எந்த மன்னனால் கட்டுவிக்கப்பட்டது?
3. இவ்விகாரை பொலன்னறுவையில் எங்குள்ளது?
4. இதன் வடிவம் யாது?
5. இவ்விகாரையின் உயரம் யாது?
களனி தாதுகோபம்
- இத் தாதுகோபம் அநுராதபுர காலத்தைச் சேர்ந்தது.
- இது பிற்காலத்தில் அழிந்து போய் 20ம் நூற்றாண்டில் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது.
- களனி பிரதேசத்தில் இத் தாதுகோபம் உள்ளது.
- சித்தாத்தர் புத்தராகி 8 ஆவது ஆண்டில் மணிக் அக்பித நாக அரசனின் வேண்டுகோளுக்கிணங்கி இலங்கைக்கு எழுந்தருளி இரத்தினக் கற்களால் அலங்கரித்த ஆசனத்தில் அமர்ந்து தர்ம உபதேசம் செய்தார். அவ் ஆசனத்தை உள்ளே வைத்து ஜடால திஸ்ஸ அரசனால் களனி தாதுகோபம் கட்டப்பட்டது.
- இது பதினாறு இடங்களுள் (சொளொஸ்மஸ்தானத்தில்) அடங்கும் ஒரு விகாரையாகும்.
- தற்போதைய தாதுகோபத்தின் முழு உயரம் 90 அடியாகும்.
- தாதுகோபம் தானியக்குவியல் (தான்யாக்கார) வடிவத்தைக் கொண்டது.
- தாதுகோபத்தின் நான்கு திசைகளிலும் மலர் ஆசனமாகப் பயன்படுத்தப்படும் வாகல்கடங்கள் நான்கு அமைந்துள்ளது.
பயிற்சி வினாக்கள்
1. களனி தாதுகோபம் எந்த மன்னனால் கட்டப்பட்டது?
2. இரத்தினக்கல் பதித்த ஆசனம் வைத்து கட்டப்பட்ட தாதுகோபம் எது?
3. களனி தாதுகோபம் எந்த வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
4. களனி தாது கோபுரத்தின் உயரம் யாது?
5. சொளொஸ்மஸ்தானங்களுள் ஒன்றான தாதுகோபம் எது?