இரேகைகள் (கோடுகள்)

  • நாம் சித்திரங்களை வரையும்போது பல்வேறுபட்ட இரேகைகளைப் பயன்படுத்தியே வரைகின்றோம்.
நாம் அதிகமாக பயன்படுத்தும் இரேகைகளும் அவற்றின் பெயர்களும்.

கிடைரேகை
சமாந்தரரேகை
சாய்வுரேகை
ஒழுக்குரேகை
வட்டரேகை
நீள்வட்டரேகை
முட்டை வடிவ இரேகை
வளைவுரேகை
நிலைக்குத்துரேகை
அலைரேகை
கோணரேகை
சுருள்ரேகை

உதாரணம்:

  • மழையைக் காட்டுவதற்கு ஒழுக்குரேகை பயன்படுத்தப்படும்.
  • புகையைக் காட்டுவதற்கு சுருள்ரேகை பயன்படும்.

துரிதரேகைச்சித்திரம்

  • சுயாதீனமான இரேகைகளால் விரைவாக வரையப்படும் சித்திரம் துரிதரேகைச்சித்திரம் எனப்படும்.

புனையாஓவியம்

  • இரேகைகளால் ஆக்கப்படும் சித்திரம் புனையா ஓவியம் எனப்படும்.

கிறுக்கல் சித்திரம்

  • இரேகைகளை தாறுமாறாகக் கிறுக்கிய பின்னர் அதில் உருவங்களைக் கண்டுபிடித்து நிறந்தீட்டி ஆக்கப்படும் சித்திரம் கிறுக்கல் சித்திரம் எனப்படும்.

பயிற்சி வினாக்கள்

1. புனையா ஓவியம் என்றால் என்ன?
2. துரிதரேகைச் சித்திரம் என்றால் என்ன?
3. கிறுக்கல் சித்திரம் என்றால் என்ன?
4. மழையைக் காட்ட பயன்படும் இரேகை எது?
5. பின்வரும் இரேகைகளை வரைக?
i. ஒழுக்குரேகை
ii. கோணரேகை
iii. அலைரேகை
iv.நிலைக்குத்துரேகை
v. சுருள்ரேகை

error: Content is protected !!