இராஜராஜேஸ்வரர் (பிரகதீஸ்வரர்) ஆலயம்

இராஜராஜேஸ்வரர் ஆலயம், ‘பிரகதீஸ்வரர்’ ஆலயம் எனவும் அழைக்கப்படும். தென்னிந்தியா வில் தமிழ்நாட்டுப் பிராந்தியத்தில் தஞ்சாவூரில் இராஜராஜேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கி.பி. 1003-1010 இற்கு இடைப்பட்ட காலத்தில் முதலாம் இராஜராஜனினால் இந்த ஆலயம் கட்டுவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய வலயத்தில் முன் நவீனத்துவ காலத்தைச் சேர்ந்த பாரிய சின்னங்களுள் முதன்மையான இடத்தைப் பெறும் இந்த ஆலயத்தில் பிரமாண்டமான இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கால தென்னிந்திய கட்டடக்கலை மரபைப் பொறுத்தமட்டில் கோபுரம் ஒரு புதிய அம்சம் அல்ல. எனினும் அது சோழர் கட்டடக் கலையில் ஒரு புதிய இடத்தை நிலை நிறுத்துகின்றது. மேலும் பண்டைய மரபுகளிலிருந்து விலகிச் செல்வதைக் வெளிப்படுத்தி நிற்கின்றது. அதாவது இதன் மூலம் பல்லவர் கட்டடக் கலையின் இயல்புகளினது செல்வாக்குடன் சோழக் கட்டடக் கலையின் அதற்கே உரித்தான தனிச் சிறப்பான கட்டடக் கலை அம்சங்கள் கட்டியெழுப்பப்படுவது ஆரம்பிக்கின்றது. இந்த ஆலயத்தில் கட்டடக் கலைப்பண்புகள் மூலம் பெற்ற செல்வாக்குடனேயே குறிப்பாக பிற்கால இந்து ஆலயங்களில் கோபுரங்களுடன் இணைந்த வகையில் பிரகாரங்கள் அமைக்கப் பட்டதாக நம்பப்படுகின்றது.

இந்த ஆலயத்திலும் இரண்டு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சம அளவுடையவை அல்ல. எனினும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும். கல்வெட்டுச் சான்றுகளின்படி இவை கி.பி. 1014 இல் நிர்மாணிக்கப்பட்டவையாகும். இவற்றின் அடித்தளம் கற்களினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் மேற்பகுதி செங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கல் – செங்கல் தொடர்பு இந்து ஆலயங்களில் கோபுர நிர்மாணிப்புடன் இணைந்த நியமமான கருத்தாக மாறியது. இந்த இரண்டு கோபுரங்களினதும் விமானங்கள் பெருமளவுக்குச் சமமானவை. எனினும் வெளிப்புறக் கோபுரத்தின் விமானம் ஐந்து அடுக்குகளைக் கொண்டிருப்ப தோடு உட்புறக் கோபுரத்தின் விமானம் மூன்று அடுக்குகளைக் கொண்டமைந்துள்ளது.

வெளிக் கோபுரம்/ முதலாவது கோபுரத்தின் வெளிப்புறம்

வெளிக் கோபுரம்/ முதலாவது கோபுரத்தின் உட்புறம்

உட்கோபுரம்/ இரண்டாவது கோபுரத்தின் வெளிப்புறம்
உட்கோபுரம்/ இரண்டாவது கோபுரத்தின் உட்புறம்

இந்த ஒவ்வொரு மாடியிலும் கூரை போன்ற பகுதியின் வடிவம் அரை உருளை வடிவ முடையது. ‘சாலா’ எனப்படும் இவை கோபுரங்களின் வெளிப்புறச் சுவர்கள் அரைத் தூண்களாலும் அதன் மூலம் கட்டியெழுப்பிய அறைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உட்புறக் கோபுரத்தின் முன்முகப்பின் இருபுறங்களிலும் உள்ள அறைகளில் இரண்டு வாயிற்காப்போன் உருவங்கள் உள்ளன. பொதுவான மனித உடலின் இருமடங்கு பருமனுடையதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த உருவங்கள் ஒற்றைக்காலில் நிற்பதோடு மற்றைய கால் முன்னோக்கித் திருப்பி வளைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த உருவங் களுக்கு நான்கு கைகள் உள்ளன. வாயில் உள்ள உருவங்களில் வெளித்தள்ளிய பற்கள் காணப்படுவதன் மூலம் இது மனித உருவமல்ல என்பது உணர்த்தப்பட்டுள்ளது. காலை மடித்து வைத்துள்ள உடல்நிலையும், கைகளால் காட்டும் அபிநயமும் சிவ நடராஜர் உடல்நிலையைக் காட்டி நிற்கின்றன. எனவே இந்த வாயிற் காவலர் செதுக்குச் சிற்பம், மிகத் தெளிவாகப் பல்லவர் கால வாயிற் காவலர் உருவங்களிலிருந்து வேறுபடுகின்றது. இச்சிற்பங்கள் ஒருபுறத்தே அதிக அலங்கரிப்புக்களைக் கொண்டுள்ளதுடன் மறுபுறத்தே கைகளின் வடிவம் காணப்படுகின்றது. மேலும் இயக்கத்தன்மையுள்ள உடல்நிலையில் இல்லாமல் அசையாத் தன்மை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இந்தப் பண்புகள் பல்லவர் கலைக்கோ ஆரம்ப கால சோழர் கலைக்கோ தனித்துவமானதல்ல.

வாயிற் காவலர் உருவங்கள்
வாயிற் காவலர் உருவங்கள்

இந்த ஆலயம் சிவ தெய்வத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் உட்புறத்தே ஆரம்பத்திலிருந்து ஏறத்தாழ ஆறு மீற்றர் நீளப்பாங்கான வடிவில் ‘நந்தி’ உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பிரதான ஆலயம் கற்றூண்களைக் கொண்ட துவார் மண்டபத்தினா லும் முக மண்டபம் மற்றும் இரண்டு அர்த்த மண்டபங்கள், அந்தராளம் ஆகியவற்றினாலானது. அதிக அளவு அலங்கரிப்புக்களைக் கொண்ட விமானம் இந்த ஆலயத்தில் காணப்படுகின்றது. இந்த விமானத்தின் கீழ் மட்டத்தில் உள்ள அறைகளினுள் ‘சிவபெருமானின்’ பல்வேறு உடல்நிலைகள் காட்டப்பட்டுள்ளன. இந்த உடல்நிலைகள் மூலம் பெரும்பாலும் சிவனின் வெவ்வேறு நடன உடல்நிலைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிவனின் நடன உடல்நிலையானது இக்காலப் பகுதியில் (சோழர் காலத்தில்) திட்டவட்டமான, பிரதானமான ஒரு முன்வைப்பாகும். குறிப்பாகச் சிவ காலாந்தகன் உடல்நிலை சோழர் காலத்தின் பிரதானமான ஒரு முன்வைப்பாகும். அதன் மூலம் இந்த நடன உடல்நிலையானது காலத்தின் சதாகால நடனம்’ எனப்படுகின்றது. இந்த விமான செதுக்கல் வேலைப்பாடுகளின் கலைத்துவ உத்திகள் பல்லவ மற்றும் ஆரம்ப கால சோழ உத்திகளை விட சிறந்த வடிவமைப்புடையது. அதன் மூலம் இயற்பண்புவாதத் தன்மை உயிரோட்டமான உடல்நிலைகள் மற்றும் உணர்வு வெளிப்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. அதாவது அவை பொது நியமக் கலைத்துவ உத்திகளுக்கு வரையறைப்படுத்தப்பட்டுள்ளன. மற்றுமொரு விதமாகக் கூறுவதாயின் வடிவங்களில் பாணியைக் கொண்டுள்ளது.

இராஜராஜேஸ்வரர் (பிரகதீஸ்வரர்) ஆலயத்தின் பெரிதும் மனதை கவரும் கட்டடக் கலை அம்சமாகக் காணப்படுவது அதன் பிரமாண்டமான விமானம் ஆகும். அது ஏறத்தாழ 60 மீற்றர் உயரமானது. அதன் மேலே உள்ள ‘சிகரம்’ கல்லினாலான ஆக்கமாகும். ஆலயத்தின் அந்தராளமும் கர்ப்பக்கிருகமும் பெரிதும் புனிதமான இடங்களாகும். இந்த வெளிக்குப் புறத்தே சுற்றிவர அமைந்துள்ள பிரதட்சணை வழியுடன் (வலம் வரும் பாதையுடன்) இணைந்ததாகத் தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் பாரிய அளவிலான மூன்று சிவ உருவங்கள் உள்ளன. மேலும் அச்சுவரில் தொடர் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களின் கலைத்துவப் பண்புகளுக்கும் சிற்பங்களின் பண்புகளுக்கும் இடையே ஒற்றுமை காணப்படுகின்றது. இந்த ஓவியங்களிடையே உள்ள குறித்த இரண்டு ஆண் உருவங்கள் தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதலாம் இராஜராஜசோழனும் அவரது குருவாகிய ‘கருவுயர் தேவர்’ ஆகியோரின் உருவங்களே அவை எனும் கருத்தே அதுவாகும். இதன் கலைத்துவ உத்திகள் அக்காலத்தைச் சேர்ந்த சோழச் சிற்பங்களின் கலைத்துவ உத்திகளுடன் இணையும்வகையில் உள்ளதோடு ஆரம்ப கால இந்திய (அஜந்தா) ஓவியங்களை விட வேறுபட்டது. ஏனெனில் சோழர் ஓவியங்களில் புறவரைக்கோடும் வர்ணங்களும் எப்போதையும் விட தட்டையான ஓவிய முன்வைப்புக்காகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.

இராஜராஜேஸ்வர ஆலயத்தின் இந்த சகல குறியீடுகள் மூலமும் ஆரம்பகால சோழ மற்றும் பல்லவர் கலை மற்றும் கட்டட நிர்மாணிப்பிலிருந்து பிரிந்து செல்லும் அடையாளங்கள் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மிகப் பிரமாண்டமான அளவுகளில் நிர்மாணிக்கப்பட்ட தென்னிந்திய பிற்பட்ட கால சோழ நினைவுச் சின்ன நிர்மாணிப்புகளுக்கு மனவெழுச்சி ரீதியான தைரியத்தை வழங்கியுள்ளது எனவும் கூறலாம். மற்றுமொரு விதமாகக் கூறுவதாயின், ஆரம்பகால சோழக் கட்டடக்கலை மற்றும் கலையின் அடிப்படையான இயல்புகளாகிய சிறிய அளவிலான நிர்மாணிப்புக்கள், தனிப்பட்ட உணர்வுகள், எளிமையான வடிவங்கள் போன்ற இயல்புகள் இராஜராஜேஸ்வரர் (பிரகதீரஸ்வரர்) ஆலயத்தில் புறந்தள்ளப்பட்டுள்ளன என்பதாகும். அதற்குப் பதிலாக பொதுவான, நியமமான, ஞாபகச்சின்னம் தொடர்பான கருத்தைக் கட்டியெழுப்புவதில் கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!