இந்துசமய சிற்பங்கள்

நடராஜர் சிலை

 • இந்து சமயத்திற்குரிய சிலைகளுள் ஒன்றான நடராஜர் சிலை முழுமுதற் கடவுளான சிவனது (ஈஸ்வரனது) தாண்டவ நடன அமைப்பை வெளிப்படுத்தி நிற்கிறது.
 • பொலநறுவை 1ம் சிவ ஆலயத்தில் கிடைக்கப் பெற்ற இந்த நடராஜர் சிலை கொழும்பு அரும்பொருட்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 • இது கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
 • வெண்கலத்தை ஊடகமாகப் பயன்படுத்தி தனிநிலைச் சிற்பமாக உலோகத்தை வார்த்து மிகப் பழமை வாய்ந்த நுட்ப முறையைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட உன்னதமான படைப்பாகும்.
 • சமநிலைத் தன்மை பேணும் விதத்தில் சிற்பக் கோட்பாடுகளுக்கிணங்க தீச்சுடர் வளையத்தின் மத்தியில் வேகமான நடனத்தில் ஈடுபட்டிருக்கும் விதத்தை உயரிய கலைப்பாணியுடன் காட்டப்பட்டுள்ளது.

இச்சிலையின் பாதங்கள் மற்றும் கைகளால் காட்டப்படும் முத்திரைகளும் குறியீடுகளும் வருமாறு

 • நான்கு கரங்களைக் கொண்டது.
 • உடுக்கை (மேளம்) ஏந்திய மேல் வலக்கரம் பிரபஞ்சத்தின் படைப்பை குறித்து நிற்கின்றன.
 • அக்கினி ஏந்திய மேல் இடக்கரம் அழித்தலையும் குறித்து நிற்கின்றன.
 • தூக்கிய இடது கை காத்தலை குறித்து நிற்கின்றன.
 • பூமியை நோக்கியிருக்கும் வரத ஹஸ்த முத்திரையுடன் கூடிய வலது கை அருளலையும் குறித்து நிற்கிறது.
 • நீண்ட கேசத்தினுள் உள்ள கங்காதேவி (கடற்கன்னி ) உருவம் கங்கை நதியைக் குறிக்கிறது.
 • தலை கிரீடத்தில் அணிந்துள்ள பிறைச் சந்திரன், கங்காதேவி, நாகம், மனித மண்டை ஓடு என்பன காட்டப்பட்டுள்ளன.
 • முழுஉருவமும், தீச்சுவாலை பரப்பும் வில் வளைவொன்றினுள் அமைந்துள்ளது. பத்மா சனமொன்றின் மீது அமைந்துள்ளது. பத்மாசனமொன்றின் மீது அமைந்துள்ள இணைக்கப் பட்ட மகர வாய்களின் மூலம் இவ்வில் வளைவு ஆக்கப்பட்டுள்ளது.
 • இளமையும் துடிப்பும் காட்டும் இச்சிலையில் வலக்காதில் ஆண் அணியும் குழையும் இடக்காதில் பெண் அணியும் தோடும் காட்டப்பட்டுள்ளன. கழுத்தில் ஆபரணங்கள் அணிந்து இருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பார்வதி சிலை (சிவகாமசுந்தரி சிலை)

 • இச்சிலை சிவபெருமானின் பத்தினியான பார்வதி தேவியைக் குறிப்பதாகும். பர்வதத்தில் (மலையில்) பிறந்ததால் பார்வதி எனப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிவபெருமானின் பத்தினி (மனைவி) ஆனதால் சிவசக்தி, சிவகாமசுந்தரி எனும் பெயர்களாலும் குறிப்பிடப் படுகின்றன.
 • பொலநறுவை 5 ஆம் இலக்க சிவனாலயத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது தற்போது பொலனறுவை நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பெண்மையின் நளினம் வெளிப்படும் வகையில் உயர்வான சிற்பப் பண்புகளுடன் வார்க்கப்பட்ட சிலையாகும்.
 • கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்குரியது. இந்த வெண்கலப் படிமம், வெண்கல ஊடகத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வார்ப்புச் சிலையாகும்.
 • வலது கை கடக ஹல்த முத்திரையைக் காட்டி நிற்கிறது. இடது கை லோக ஹஸ்த முத்திரையுடன் கீழே தொங்கவிடப்பட்டுள்ளது.
 • தலையில் நீண்ட கிரீட (மகுட) அலங்காரம், உடலை ஒட்டிய ஆடைகள், அலங்காரமான ஆபரணங்கள் சிலையின் அழகை மேம்படுத்திக் காட்டுகின்றன.
 • நளினம், மென்மை, அழகு வெளிப்படும் விதத்தில் திரிபங்க (மூவளைவு) நிலையில் அழகாக அமைக்கப்பட்ட இச்சிலை மேன்மையான ஒரு படைப்பாகக் கொள்ளப்படுகிறது.

விநாயகர் சிலை

 • இப்படிமம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்படும். இது ஒரு பிள்ளையார் சிலை ஆகும். பொலநறுவை 5 ஆம் இலக்க இந்து ஆலயத்தில் கண்டெடுக் கப்பட்ட ஓர் இந்து சமயச் சிலையாகும்.
 • வெண்கல ஊடகத்தைப் பயன்படுத்தி வார்ப்பு முறையில் நிர்மாணிக்கப்பட்ட சிலையாகும்.
 • சிவபெருமானினதும் பார்வதி அம்மாளினதும் மூத்த மகனே விநாயகர் ஆவார் எனக் கருதப்படுகிறது.
 • யானை முகத்தையும் பெரிய உதரத்தையும் கொண்ட பிள்ளையார் புத்திக்கும் எழுத்து அறிவுக்கும் அதிபதியாவதுடன் விக்கினங்களைப் போக்குபவராகவும் கருதப்படுகிறார்.
 • நான்கு கரங்களை உடையவர். மேல் (பின்பக்க) வலக் கையில் கோடரியும், மேல் (பின்புற ) இடக் கையில் அரிச்சுவடியும், முன்பக்க வலக் கையில் உடைந்த தந்தமும், முன்பக்க இடக்கையில் மாங்கனி ஒன்றையும் ஏந்தி நிற்பது காட்டப்படுகிறது.
 • தாமரை மலரின் மத்தியில் ராஜாசனப்பாங்கில் நிருமாணிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் அம்மையார் (படிமம்)

 • காரைக்கால் அம்மையார் எனப்படும் இச்சிலை பொலநறுவைக் காலத்தைச் சேர்ந்த இந்து சமய சிலைகளில் ஒன்றாகும்.
 • பொலநறுவை இல 5 ஆம் சிவாலயத்தில் கண்டெடுக்கப்பட்டு தற்போது அநுராதபுரம் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 • சிவபெருமான் மீது கொண்ட மிகுந்த இறைபக்தி காரணமாக தமது இயல்பான பேரழகெல்லாம் நீங்கி, என்பு வடிவம் தரும்படி வரம் கேட்டு மெலிந்து எலும்புந் தோலுமாக மாறிய ஒரு பெண்ணையே இது குறித்து நிற்கிறது.
 • மெலிந்த விகாரமான உடலுடன் அமர்ந்து கைகளினால் தாளத்தை இசைப்பது காட்டப்பட்டுள்ளது.
 • இச்சிலை இலங்கையின் இந்து சமயக் கலைப் படைப்புக்களுள் சிறப்பாக கற்பனை வெளிப்பாட்டைக் கொண்ட ஒரு படைப்பாகக் கருதப்படுகின்றது.
 • கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இச்சிலை வெண்கலத்தில் வார்த்தல் நுட்ப முறையில் ஆக்கப்பட்டுள்ளன.

சுந்தரமூர்த்தி நாயனார்

 • இந்த வெண்கலச் சிலை சுந்தரமூர்த்தி நாயனார் எனும் சிவ பக்தனைக் குறிக்கின்றது.
 • பொலனறுவைக் காலத்தில் கி.பி. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இந்து சமயச் சிலையாகும்.
 • பொலனறுவை 5 ஆம் சிவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட இது தற்போது கொழும்பு அரும்பொருட்சாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 • இவர் சைவசமயத்திலுள்ள அறுபத்தி மூன்று குரவர்களில் ஒருவராவார். இவர் சிவபெருமான் மீது தேவாரங்களை இயற்றி ஆலயம் ஆலயமாகச் சென்று அவற்றைப் பாடியுள்ளார்.
 • மங்களகரமான வஸ்திரங்கள், ஆபரணங்கள் அணிந்து மணவாள கோலத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
 • இளமை , எடுப்பான தன்மையுடன் அழகுற அமைந்த திரிபங்க (மூவளைவு) நிலையில் உள்ள பத்மாசன பீடத்தின் மீது அமைந்த ஒரு சிலையாகும்.
 • மனித உடற் பாகங்களை தத்து ரூபமாக அங்க இலட்சணங்களுடன் இயற்கையாக தோன்றும் விதத்தில் அமைக்கப்பட்ட ஒரு உலோகச் சிலை எனக் கருதப்படுகிறது.
 • கைகளால் கடக ஹஸ்த முத்திரை காட்டப்படுகின்றது. பத்ர பீடம் மீது பொருத்தப்பட்ட வட்டமான தாமரை மலர் மீது மூவளைவு நிலையில் உள்ள ஒரு நிற்கும் நிலைச் சிலையாக இது வடிக்கப்பட்டுள்ளது.
 • வெங்கல ஊடகத்தால் திண்ம வார்த்தல் நுட்ப முறையைப் பயன்படுத்தி இருக்கும் இது இந்து கலை நிருமாணங்களிடையே விசேடமான கலை இயல்புகளை வெளிக் காட்டும் நிருமாணிப்பாகக் கருதப்படுகின்றது.
பயிற்சி வினாக்கள்

தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு வினாக்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புக.

1. இந்து சமயத்திற்குரிய சிலைகளுள் ஒன்றான இது ……………………………………….. என அழைக்கப்படுகின்றது.
2. இச்சிலை …………………………………………….. ஊடகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
3. இச்சிலை ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், ……………………………., அருளால், மறைத்தல் என்பவற்றின் குறியீடாகக் காணப்படுகின்றது.
4. இது …………………………………………. காலத்தைச் சேர்ந்த சிலையாகும்.
5. இச்சிலை …………………………………………………….. இல் இருந்து கண்டெடுக்கப்பட்ட்து.

1. இச்சிலை………………………………. என்னும் சிலையாகும்
2. இது ……………………………………. காலத்தைச் சேர்ந்த ஓர் நிர்மாணிப்பு ஆகும்.
3. இச்சிலையானது …………………………………….. ஊடகத்தில் படைக்கப்பட்டுள்ளது.
4. இச்சிலையின் முகமானது ………………………………………. வடிவத்தில் காணப்படுகின்றது.
5. இது ………………………………. ஆசன முறையில் அமைந்துள்ளது ஓர் சிலையாகும்.

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள வாக்கியங்கள் எழுதுக.

1. கருப்பொருள் தொடர்பாக : ………………………….
2. காலம் தொடர்பாக : ………………………………………..
3. ஊடகம் தொடர்பாக : ………………………………………
4. முத்திரைகள் தொடர்பாக : ………………………….
5. மெய்ந்நிலை தொடர்பாக : ………………………

1. இனங்கான்க : ……………………………………………………..
2. கருப்பொருள் தொடர்பாக : ………………………….
3. காலம் தொடர்பாக : ………………………………………..
4. ஊடகம் தொடர்பாக : ………………………………………
5. நுட்பமுறை தொடர்பாக : ………………………….
6. மெய்ந்நிலை தொடர்பாக : ………………………

1. கருப்பொருள் தொடர்பாக : ………………………….
2. காலம் தொடர்பாக : ………………………………………..
3. ஊடகம் தொடர்பாக : ………………………………………
4. முத்திரைகள் தொடர்பாக : ………………………….
5. மெய்ந்நிலை தொடர்பாக : ………………………

error: Content is protected !!