இந்துக் கோயிலின் அடிப்படை அம்சங்கள்
- இந்துக் கோவில் மண்டபம், கற்பக்கிரகம், சுற்றுப்பிரகாரம் கோபுரம் என பிரதான பிரிவுகளைக் கொண்டது.
- இந்து ஆலயங்களில் மூர்த்தி அமைந்திருக்கும் கட்டடம், கர்ப்பக்கிரகம் , மூலஸ்தானம், கருவறை எனும் பெயர்களால் குறிப்பிடப்படும்.
- வாயிலிலுள்ள கோபுரம் முக்கியமான அமைப்பாகும். கீழ் இருந்து மேல் நோக்கி ஒடுங்கி உயர்ந்து செல்லும் அமைப்பைக் கொண்டது. இதன் நான்கு பக்கங்களிலும் பலவிதமான இந்து சமய தெய்வங்களின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கும். கோபுரத்தின் உச்சியில் கலசம் அமைந்திருக்கும்.
- ஆலய மண்டபங்களில் பல அலங்கார சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களைக் காணலாம்.
- தூண்தலைகள் வளைந்து நான்கு பக்கங்களிலும் தொங்கும் போதிகை அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கும்.
- சிவபெருமானின் வாகனமான கருங்கல்லால் நிர்மாணிக்கப்பட்ட நந்தியின் உருவச் சிலையை இந்துக் கோவில்களில் காணலாம்.
- இலங்கையில் இந்துமத கட்டட நிர்மாணக்கலை மீது தென்னிந்திய கட்டட நிர்மாணக்கலை செல்வாக்குச் செலுத்தியுள்ளது.
- ஆலயக் கர்ப்பக் கிரகம் மூன்று வகையான கட்டட அமைப்பில் நிர்மாணிக்கப் படுகின்றன. கர்ப்பக்கிரகம் கருங்கல் அல்லது செங்கல் சுண்ணாம்புச் சாந்து ஆகிய ஊடகங்களால் நிர்மாணிக்கப்படும். கர்ப்பக்கிரகம் ஆறு அங்கங்களைக் கொண்டது. (உப்பீடம், அதிஸ்டானம், பாதவர்க்கம், பிரஸ்தானம், சிகரம் (விமானம்), தூபி)
இந்துக் கோயிலின் கிடைப்படம்
1. கோபுரம்
2. மண்டபம்
3. சுற்றுப்பிரகாரம்
4. கர்ப்பக்கிரகம்
கர்ப்பக்கிரகம்
பயிற்சி வினாக்கள்
1. இந்துக்கோவிலின் பிரதான பிரிவுகளை எழுதுக?
2. இந்துக்கோவில் எதனை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படுகிறது?
3. இந்துக்கோவிலின் நிறைய சிற்பங்கள் காணப்படும் கட்டிடம் எது?
4. இந்துக்கோயில் கற்பகிரகம் ஆறுபகுதிகளைக் கொண்டது அவற்றை குறிப்பிடுக?
5. இந்துக்கோயில் மூல மூர்த்தி அமைந்துள்ள இடம் எவ்வாறு அழைக்கப்படும்?