இத்தளம் பற்றி…

2020ஆம் ஆண்டு COVID-19 இடர்காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்ட காரணத்தால் பாடசாலைகளில் சித்திரக்கலை பாடத்தைத் தரம் 6 தொடக்கம் 13 வரை கற்கும் மாணவர்களின் நலன் கருதி பரீட்சார்த்தமாக உருவாக்கப்பட்ட இணையத்தளத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து நீண்டகால தேவையைக் கருத்தில் கொண்டு 2020.11.10ஆந் திகதி முதல் இவ் இணையத்தளம் (www.artclassroom.lk) செயற்பட்டு வருகின்றது.

இவ் இணையத்தளத்தை மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் தமது கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் 6 – 13 வரையான ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் உள்ள சித்திரக்கலை வரலாற்றுப் பிரிவு (தேர்ச்சி 6.0 – 7.0) முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், செயன்முறை தொடர்பிலான விடயங்கள் தொடர்ந்து பதிவேற்ற எதிர்பார்த்துள்ளேன்.

இவ் இணையத்தளமானது எவ்வித இலாபநோக்குமற்ற முற்றுமுழுதாக சேவை நோக்குடன் தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டுவருகின்றது.

கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு : eartclassroom@gmail.com

நன்றி

Mr. Gnanananthan Gajooran
LLB, BFA, PGDE, MEd, MEd EdMgt
SLTES III
Lecturer
Jaffna National College of Education

error: Content is protected !!